marshal nesamony

Father of Kanyakumari District

குமரி மாவட்ட வரலாறு திருடர்கள் ? ஜாக்கிரதை !

1 பின்னூட்டம்

குமரி மாவட்ட வரலாறு திருடர்கள் ? ஜாக்கிரதை !

                         குமரி மாவட்ட காங்கிரசார் சுயநலம் நேடும் நோக்கில்  காமாராசரை தந்தையாக ஏற்று பாண்டிக்காட்டான்களுக்கு அடிமைகளாகிவிட்ட நாளிலிருந்து குமரிக் காங்கிரசின் சுயநிர்ணய அதிகாரம் பறிபோய் விட்டது. எம்.பி. மற்றும் எம்.எல்.எ. தொகுதிகள் வந்து நிலை கொண்டுள்ளனர். அதுவாவது மிஞ்சுமா என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே சொல்ல முடியும்.

    குமரி மாவட்ட காங்கிரஸ் அதன் தந்தை நேசமணிக்கு தகுந்த நினைவுச்சின்னம் அமைக்க முன்வரவில்லை. காமராசருக்கு அமைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகின்றது. குமரியில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டும் நோக்கில், மார்ஷல் நேசமணி மணிமண்டபம் என்ற கோஷத்துடன் தி.மு.க அரசு களம் இறங்கியது. 2011 ஜனவரி 18-ல் அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடந்தது. இதை ‘தேர்தல் ஸ்டன்ட்’ என்று அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தலைவர் திரு. ஜஸ்டின் செல்வராஜ் வருணித்தார்;. குன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தி.மு.க. அரசு அடிக்கல் நாட்டியதையும், அந்த திட்டத்துக்கு நிதியும் ஒதுக்கி அ.தி.மு.க. அரசு செயல் வடிவம் தiவேண்டி வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

    கல்நாட்டு விழா அழைப்பிதழில் மார்ஷல் நேசமணி மண்டபம் என்றிருந்தது. நட்டப்பட்ட கல்லிலும் அவ்வாறு தான் இருந்தது. “குமரித்தந்தை” என்று எங்குகும் குறிப்பிடவில்லை. இது ஒரு திட்ட மிட்ட கூட்டு சதி என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும். வரலாறு திருடர்களின் இந்த பொக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொடிருந்த மூத்த குடிமக்கள் பலர், 2007 டிசம்பர் சமுதாய சிந்தனை இதழில் வெளி வந்த, இளந்தோட்டம் சுகுமாறன் அவர்களின் ஆய்வுக்கட்டுரையை பிரசுரிக்க வேண்டிக் கொண்டனார். எனவே மீண்டும்…

குமரித்தந்தை காமராஜரா? நேசமணியா?

தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?

குமரித் தந்தை காமராஜரா? நேசமணியா?

தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?

    குமரி மாவட்டம் உருவாகி 54 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர்;. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், நாடார் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு வேதனையாக உள்ளது. இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாhளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.

    ஆனால் இன்று, வேறு பலரை குமரித் தந்தையாக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கியிருக்கின்றனர். முக்கியமாக களமிறக்கி விடப்பட்டுள்ளவர்கள் மூவர். அவர்களில் இருவர் நாஞ்சில் நாட்டு வெள்ளாள சமுதாயத்தைச் சார்ந்தவர்களும், மற்றவர் வெளிமாவட்டத்தவரும் ஆவார். பிள்ளைகளில் ஒருவர் திரு. மூக்காண்டியாவார். ஆம்! இவரேதான் “மூக்குக்குத்தி மூக்காண்டி என்று பெயர் சூட்டப்பட்டு பின் குல தெய்வப் பெயரான சொரிமுத்தாகி, அதன் பின் ஜுவானந்தம், ஜுவா”, ஆனார், (பெருந்தலைவர் காமராசர், அரு. சங்கர்)

    தி.த.நா.கா. சர்வாதிகாரி திரு. குஞ்சன் நாடார் 09.08.2954-ல் விடுதலை நாள் கடைபிடிப்பதற்கு நிச்சயித்திருந்தார். ஆனால் ஜுவாவின் பேச்சை நம்பி, அதை 11.08.1954 க்கு மாற்றினார். “கம்யுனிஸ்டு கட்சியின் திருவிதாங்கூர் சமஸ்தான கிளையால் அனுப்பப்பட்டே ஜுவா இந்த ஆலோசனையைச் சொன்னார் … இதனால் ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்று ஐயுற்றேன். என் ஐயம் பொய்யாகவில்லை. 11.08.1954-ல் நடக்கவிருந்த பொது வேலை நிறுத்தத்தை ஒத்திப்போட்டு விட்டதாக கம்யூனிஸ்டு செல்வாக்கிலிருந்த – கேரளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் – அதாவது ஆகஸ்டு 10-ல் அறிக்கை விட்டுவிட்டன – கதையை வளர்ப்பானேன். ஆகஸ்டு 11-ல் மார்த்தாண்டம் என்னும் ஊரில் – ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது மலையாளப் போலிசார் சுட்டனர். ஆதனால் 11 தமிழர்கள் இறந்தனர்.” (எனது போராட்டம்- ம.பொ.சி)

    ஜுவாவின் இந்த கைங்கரியத்தால் 11 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டார் எவருமில்லை. ஜுவாவை நம்பி களத்தில் இறங்கிய குஞ்சன் நாடார் மலையாள போலீசாரால் அடித்து நொறுக்கப்பட்டு குற்றுயிரானார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜுவா குமரியில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாவது கூறியிருக்கலாம். ஆனால் அவரோ தலைமறைவாகிவிட்டாராம். “நாகர்கோவிலிலிருந்து புறப்படும் முன் திரு. ப. ஜுவானந்தம் அவர்களைச் சந்திக்க முயன்றேன். அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்பட்டது. புரட்சிக்கு மக்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் தலைமறைவாகி விடலாம். ஆனால் அவர்களை நம்பிப் புரட்சியில் ஈடுபட்ட மக்களெல்லாம் தலைமறைவாகிவிடுவது சாத்தியமில்லையல்லவா” (எனது போராட்டம்- ம.பொ.சி)

    ஜுவானந்தம் தலைமறைவாகி விட்டதாக ம.பொ.சி. இங்கே கூறுகிறார். ஆனால் மு.டு.ளு.சந்தானமோ ஜுவா, காடும் மலையும் கடந்து பணகுடி சென்று, சென்னைக்கு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். “கடுக்கரை தொண்டு வழியாக காலில் கொப்புளங்கள் ஏற்பட நடந்து பணகுடி வந்து பின் வள்ளியூர் கலா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.” (ஆய்வு களஞ்சியம்- ஏப்ரல் 2007)

    ஆக ஜுவா, கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டு, ஒளந்தோ, ஓடியோ, நடந்தோ, திருவவிதாங்கூரை விட்டு வெளியேறி தன்னுயிர் காத்துக் கொண்ட வீரனானார். இதுதான் திரு-தமிழகப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பெரும் பங்கு. ஆனால் திரு. நேசமணியோ, எங்கும் ஓடிவிடாமல், தலைமறைவாகாமல், தனது நாட்டில், வருவதை எதிர்கொள்ள தயார் நிலையில், பிரசினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு செயலில் இறங்கி அதில் வெற்றி வாகை சூடி குமரிக்குத் தந்தையானார். ஆனால் ஓடிவிட்டவருக்கு மணிமண்டபம், உருவச்சிலை, மற்றும் சிறப்புகள் அளிக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறப்புகள் வேண்டுமாம். அன்னாரை குமரித்தந்தையாக்கும் முயற்றியும் தொடர்கிறது.

    இரண்டாவதாக நாஞ்சில் நாட்டாரால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றவர் சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. அவர் தனது வாயாலே கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன்- நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க ணே;டுமென்று என் எதிர்பார்ப்பு”. (பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

    திரு. பி.எஸ் மணியே நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற சிறப்பை அளித்து விட்ட நிலையில் மணியவர்களை குமரித் தந்தையாக்குவதற்கு இந்த நாஞ்சில் நாட்டார் முயற்சிப்பானேன்? இதிலிருந்து குமரி மாவட்டம் பிரிவதற்கு திரு. பி.எஸ் மணி ஆற்றிய பணிகளின் பரிணாமம் என்ன என்பதை நாம் யூகித்தறியலாம்.

    துப்பாக்க்சி சூடு 11.08.1954-ல் நடைபெற்றது. 11 உயிர்கள் பலியாயின என்று ம.பொ.சி.யும் கூறுகிறார். இவர்களில் ஒருவர் கூட நாஞ்சில் நாட்டான் இல்லை. இப்படியொரு பெரும் இழவு இங்கே நடந்திருக்கின்ற வேளையில், மனித நேயம் படைத்த எந்த மனிதனுக்காவது திருவிழா, திருவிழர் சார்ந்த விருந்து உண்பதற்கு மனம் இடம் தருமா? ஆனால் அந்த மனம் திரு. பி.எஸ். மணிக்கு வந்தது. “1954 ஆகஸ்டு 14-ல் திருச்சியில் தமிழரசுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திரு. தமிழகப்பிரதிநிகளாக கலைஞர் டி.கே. சண்முகம், பி.எஸ். மணி, தோவாளை சி. சிவதாணு மற்றும் பி. வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.” (மபொ.சி. – “தமிழரசுக் கழகத்தில் பி.எஸ்.மணி”, மணி சிறப்பு மலர் 1987) ஜுவாவும் மணியும் வெள்ளாம் பிள்ளைகள்.

    ஆனால் நேசமணி எந்த மாநாட்டுக்கும் ஓடிச் சென்று விருந்து உண்டு மகிழவில்லை. அவர் துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் இங்கே ஈடுபட்டிருந்தார். சிறைச்சாலைகளிலிருந்து தமிழர்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பதில் அவர் சிந்தித்தவராக இருந்தார்.

    இவர்களிருவருக்கும் பிறகு மூன்றாவதாக, பெருந்தலைவர் திரு. கு. காமராசரை “குமரித் தந்தை” என்ற தோரணையில் இன்று புகழாரங்கள் பாடித்திரிகின்றனர் சிலர். அவர் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு 1954 முதல் 1963 வரை சுமார் ஒன்பதரையாண்டு காலம் முதலமைச்சராக இருந்தார் என்பதற்காகவும் அவரை இங்குள்ளோர் மகிமைப்படுத்துகின்றனர் போலும்.

    பெருந்தலைவர் கு. காமராசர், நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் சமுதாயத்திற்கு சிறப்பு என்பதில் வேறு கருத்தில்லை. ஆனால் இச்சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் இவரால் கிடைக்கவில்லை என்பதை அன்னாருடன் பல காலம் வாழ்ந்தவரும், மணவாளக்குறிச்சியைச் சார்ந்த இசுலாமிய சமுதாயத்தைச்சார்ந்தவருமான திரு. ராஜ்மீரான் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்: காமராசர் அவர் சர்ந்த நாடார் சமூகத்திற்கு அவர் பதவியில் இருந்த கால கட்டத்தில் அதிகமாக உதவி செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறதே? (இது நிருபரின் கேள்வி) “அது உண்மையே கிடையாது, கமராசர் அனைத்து மக்களையும் ஒன்று போல் தான் நேசித்தார். ஒரு வேளை, காமராசர் எனக்கு சொந்தக்காரர் என்று கூறி சிலர் லாபம் கண்டிருக்கக் கூடும். காமராசர் தனது சமூகம், தனது குடும்பம், என்று உதவி செய்த நிகழ்வுகள் ஒன்று கூட கிடையாது” “… அதே நேரம் அவர் அதிகம் நம்பியது பிராமணர்களையே! காரணம், அன்று அவரிடம் நம்பிக்கையாக இருந்தவர்கள் அவர்களே. பிராமணர்கள் அவருக்கு அப்பழுக்கற்ற உதவிகளைச் செய்தனர். அதுவும் மறுக்க முடியாத உண்மை”. சக்திய மூர்த்தி என்ற பிராணனின் வழிக்காட்டலில் காமராசர் ஆட்சி செய்தார் என்பது உலகறிந்த உண்மை.

    நாடார் சமூகம் கீழ் நிலையில் இருந்து அவரால் தான் மேல் நிலைக்கு வந்தது என்றும் ஒரு கருத்து உண்டுமே? “அதுவும் பொய். நாடார் சமூக மக்கள் உழைப்பு, உழைப்பு என்று உழைத்து முன்னேறிய சமூகம். அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். காமராசரும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான். காமராசர் முதல்வராக இருந்த போது அந்த சமூகம் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். அதற்கு காமராசர் உதவினார் என்பதில் இம்மி அளவுக்குக் கூட உண்மையில்லை.”

    (திரு. ராஜ் மீரான் அவர்களை பேட்டி கண்டவர் கல்லை அன்சாரி என்பவர். இவர்கள் இருவரும் இசுலாமியர்கள். பேட்டி வெளியான பத்திரிகை “குமரிக்கடல்” – 2007 பிப்பரவரி மாதம், ஆசிரியர் – திரு. வு. பீட்டர் தாஸ், இவர் குமரி மாவட்ட மீனவச்சமுதாயத்தைச் சார்ந்தவர். இந்த திரு. ராஜ் மீரான் நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் இன்னும் வாழ்ந்து வருகின்ற 75-வயதான பக்கவாத நோயாளியாவார்.)

    நாஞ்சில் நாட்டு பிள்ளையவாள் கூட காமராசரிடமிருந்து பேருதவி பெற்றுள்ளார் என்ற விவரத்தை அரு. சங்கர் நமக்குத் தருகிறார். முறைதவறிய உதவி என்று இதைக் கூறலாம். உதவி பெற்ற ஜுவானந்தம் அப்போது ஒரு காங்கிரஸ்காரர்.

    “தாம்பரத்தில் ஒரு பள்ளித் திறப்பு விழாவிக்குச் சென்ற காமராஜர் அப்போது அங்கு வசித்த ஜுவாவையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவரில்லம் சென்ற போது ஜுவா வாழ்ந்த நிலை கண்டு அதிர்ந்து போனார். உடுத்த மாற்றுடை கூட இல்லாத நிலையில் துவைத்த ஆடையை உலர்த்திக் கொண்டிருந்தார் ஜுவா.”

    “அவருடைய இல்லற ஓடத்தை ஓரளவேனும் இன்பம் ஏந்திச் செல்லும் வகையில் ஜுவாவின் துணைவiயார் திருமதி. பத்மாவதி அம்மையாருக்;கு ஓர் அரசுப்பணி தந்து ஆதரித்தார் காமராஜர்” (அரு.சங்கர் – பெருந்தலைவர் காமராசர்) இத்தகைய உதவியை காமராசர் ஒரு நாடாருக்குச் செய்தது இல்லை. குறிப்பாக அவரது தங்கை மகனுக்குக் கூட செய்வதற்கு மறுத்தவர்தான் அவர் (ம.பொ. சிவஞானகிராமணியார் – எனது போராட்டம்)

    இச்சூழ்நிலையில், 1938-ல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு. இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை அளித்தார். இதனை வரவேற்று காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவிக்க நாடார் மகாஜன சங்கம் தவறிவிட்டது. இதனால் வெறுப்புற்ற தேசீயவாதிகளான சில நாடார் பிரமுகர்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறி, “தேசீய நாடார் சங்கம்” என்ற தனி அமைப்பை நிறுவி 1938-ல் மதுரையில் தேசீய நாடார் மாநாட்டை நடாத்தினர். “நாடார் சமூகத்தின் தேசீய எழுச்சிக்கு இம்மாநாடு எடுத்துக்காட்டாக விளங்கியது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த திரு.கு. காமராசர், மாநாட்டு நிர்வாகிகள் அழைத்திருந்தும் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். வியப்பென்னவென்றால் மாநாடு நடைபெற்ற நாளன்று அவர் மதுரையில் இருந்தும், மாநாடு நடந்த பக்கம்கூட அவர் தலைகாட்டாததாகும்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணியவர்கள் இரண்டு நாடார் மகாஜன சங்க மாநாடுகளில் தலைமை தாங்கியுள்ளார் என்பது வியப்பளிப்பதாக உள்ளது. இதனால் நேசமணி நாடார் சமுதாயத்தைப் பெரிதும் மதித்தார் என்பது வெளிப்படை.

    இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பெருந்தலைவர் நாடார் சமூகம் மற்றும் நாடார் மக்களிடத்தில் தனிப்பட்ட பற்றுதல் ஏதும் வைத்துக் கொண்டவர் அல்ல என்பதை உணர்த்தவேயாகும். இவர் சென்னை மாநில அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அதே வேளையில் ம.பொ.சி. சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்தார். கிராமணியாரும் நாடார் சமூகத்தில் ஒரு கிளைப் பிரிவான “கிராமணி” சமுதாயத்தைச் சார்ந்தவர். மேடைப் பேச்சிலும், எழுத்துப் பணியிலும் காமராசரை விட கிராமணியார் சிறப்பான நிலையில் இருந்தார். ஒரு வேளை கிராமணியர் தனது இடத்தைப்பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் கிராமணியாரை காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு பெரும் முயற்சியை காமராசர் எடுத்துக் கொண்டதன் பயனாக 08.08.1954 அன்று ம.பொ.சி. காங்கிரசிலிருந்து வெளியேறினார். “நானும் என்னுடைய நண்பர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டே கழகத்தை நடத்துவதால், உங்களுக்கோ, காங்கிரசுக்கோ என்ன நஷ்டம்” என்று ம.பொ.சி. கேட்க, “….. தமிழரசுக் கழகத்தின் பலத்தைக் கொண்டு, நீங்கள் காங்கிரசை கைப்பற்றிவிடலாமல்லவா, என்று திரு. காமராசர் சட்டென பதில் கூறினார்.” (எனது போராட்டம் – ம.பொ.சி)

    தனது பதவி ம.பொ.சி. யால் பறி போய் விடுமோ என்ற அச்சத்தை மனதில் கொண்டே அவரை வெளியேற்றினார் என்பது இதனால் உறுதி. பதவி ஆசை காமராசரையும் விட்டு வைக்க வில்லை. ம.பொ.சி.யின் இழப்பால் காங்கிரஸ் தனது பிரச்சார பீரங்கிகளை ஒட்டு மொத்தமாக இழந்தது. அதன் தாக்கம் பின்னாட்களில் காங்கிரஸ், தி.மு.க. விடம் தமிழ்நாட்டை இழப்பதற்கு ஏதுவாகி விட்டது.

    “ஆயினும், கழகத்தார் காங்கிரசிலிருந்து வெளியேறியதால் வலிமை மிக்க ஒரு பிரச்சார யந்திரத்தை தமழ்நாடு காங்கிரஸ் இழந்து விட்டது என்பதை மட்டும் இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகின்றேன், திறன்மிக்க பேச்சாளர்களாகவும், புகழ்மிக்க நடிகர்களாகவும் இருந்த பலருடைய சேவையை தமிழ்நாடு காங்சிரஸ் கட்சி இழந்தது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரச்சாரயந்திரத்தின் தாக்குதலை சமாளிக்கும் திறனை இழந்து விட்டது.” (அதே நூல்)

    தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக திரு. காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக பிற்காலத்தில், தமிழ்நாட்டை தி.மு.க.வினரிடம் இழக்க நேர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுவே உண்மை. குhமராசரின் இந்த மதியீனத்தால் தமிழகம் வடுகர்கள் ஆட்சிக்கு வந்தது.

    இதைப்போன்ற அணுகுமுறையே பெருந்தலைவர், மார்ஷல் நேசமணியிடமும் கடைபிடித்தார். 01.11.1956 – அன்று குமரி மண் தாய்த்தமிழகத்துடன் இணைந்தது. தேர்தல் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், குமரித்தந்தை நேசமணி பாராளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு எண்ணியிருந்தார். ஆனால் இங்கே ஒரு ‘மாயமான’ விளையாடிற்று, ப. தாணுலிங்க நாடார் களத்தில் இறங்கி சகுனி விiளாட்டு ஆடிக் கொண்டிருந்தார். எவ்வாறேனும் திரு. நேசமணியை சட்டமன்றத்தில் நிறுத்திவிட்டு, தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே அந்த மாயத் திட்டம். இதைக் குறித்து திரு. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “இவர் தானே இப்போதெல்லாம் கமihஜுக்கும் நேசமணிக்கும் இடையே நம்பிக்கைத் தூதராக போய் வந்து கொண்டிருக்கிறார். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை நேசமணிக்கும், நேசமணி என்ன நினைக்கிறார் என்பதை காமராஜருக்கும் எடுத்தியம்பி இருவருடைய நம்பிக்கையையும் பெற்றிருந்தார். வசதியைப் பொறுத்தும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தும் இருவருமே இவர் பேச்சை நம்பினார்கள்.” (நேசமணி ஒரு சரித்திரப் திருப்பம்) – அப்படி என்ன தூது சொன்னார்? “….அதைப் பயன்படுத்தி நேசமணியிடம், காமராஜர் அவர்களிடத்தில் செயல்படுவதற்கு இவரை விரும்புகிறார் என்றும், அதனால் இவர் அசம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும், ஒரு கற்பனைச் சித்திரத்தைக் கட்டி எழுப்பி விட்டார்.” (அதே புத்தகம்)

    எப்படி இந்த கற்பனையை நேசமணி ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. தான் தமிழ்நாட்டு மந்திரி சபையில் இணைந்து விட்டால், கன்னாயாகுமரி மாவட்டத்திற்கு பல நன்மை தரும் ஆக்கப் பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று திரு. நேசமணி எண்ணியிருப்பார் போலும். “முதலில் மறுத்த நேசமணியும் அதற்கு இசைந்து விட்டார்.” (அதே புத்தகம்)

    எதிர்பார்த்தபடி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எதிர்ப்பின்றி ஏகமனதாக திரு. நேசமணி தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக நுழைந்தார். இதனால் ப. தாணுலிங்கம் நாடார் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்று டெல்லி சென்றார். ஆனால் அவர் கூற்றுக்கு எதிர் மறையாக காமராஜர் செயல்பட்டார். திரு. நேசமணியை அவர் கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, அரசியலில் கத்துக்குட்டியாக நுழைந்து, குளச்சல் தொகுதியிலிருந்து சட்டமன்றம் சென்ற திருமதி, லூர்தம்மாள் சைமனை காமராசர் தனது மந்திரி சபையில் அமைச்சராக்கி, நேசமணியின் முகத்தில் கரியைப் பூசினார். திரு. நேசமணிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையென்றாலும் பரவாயில்லை. திருமதி. லூர்தாம்மாளுக்கு அப்பதவியை அளித்தது குமரி வாழ் நாடார் மக்களை ஒட்டு மொத்தமாக காமராசர் இழிவுபடுத்தி விட்டதை யாராலும் சீரணித்துக் கொள்ள இயலவில்லை.

    இதற்கும் காரணமுண்டு, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் திரு. நேசமணியின் தலைமையின் தலைமையில் இணைப்புப் போராட்டம் நடத்துகின்ற வேளையில் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, மலையாளிகளுடன் இணைக்கமாக நடந்து விடும்படி காமராசர் பலமுறை யோசனைக் கூறினார். ஆனால் இந்த யோசனையை நேசமணி ஏற்றுக்கொள்ளவில்லை. நேசமணி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை சிந்திப்பதற்கு காமராஜர் தவறிவிட்டார். இந்த போராட்டம் தமிழ் மண்மீட்கும் போராட்டமோ அல்லது தமிழ் நாட்டின் எல்லை விரிவாக்கம் போராட்டமோ அல்ல என்பதை காமராசர் எண்ணிப்பார்க்க தவறிவிட்டார். சுமார் 200 ஆண்டு காலமாக நாடார் சமுதாய மக்கள் மலையாளி நாயர்களிடமிருந்தும், தமிழ் வெள்ளாளர்களிடமிருந்தும் எதிர் கொண்டுள்ள அடக்கு முறைகளுக்கு எதிராக விடுதலை வேண்டி நடத்தப்படுகின்ற இறுதிப் போராட்டம் என்பதை வரலாற்று அடிப்படையில் சிந்திப்பதற்கு காமராசர் தவறிவிட்டார். இந்த நீண்ட வரலாறு தெரியாத நிலையில் தான் காமராசர் திரு. நேசமணியை தனது பகைவனாக எண்ணிச் செயல்பட்டார் என்பது உண்மை. இருப்;பினும் தொடக்கக் காலங்களில் திரு. நேசமணி காமராசரின் உதவியை நாடுவதற்குத் தவறவில்லை. இது குறித்து திரு. நேசமணி கூறும்போது:

“It was at the time that the Tamilnadu Congress appealed tp Sri. Kamaraj Nadar to Visit Travancore and see for himself the condition the Tamilians in Travancore. He arrived in Travancore and tried to induce the state congress to come to terms with the Tamilnadu Congress. His attempts failed  ……… He issued a statement tp the Associated Press of India advocating tp start with the formationof the Southern Taluks of Travancore into a separate Revenue Division, with necessary safe guards for the Tamilians” (A. Nesamony – Inside Travancore Tamilnadu)

தென் திருவிதாங்கூரில் அன்று நிலவி வந்த அசாதாரண நிலையை நேரில் பார்த்து அறிந்து கொண்ட நிலையிலும், தென் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளைக் கொண்டு தமிழ் வருவாய் கோட்டம் ஒன்றை அமைத்து, அத்துடனே திருப்தியடைந்து, திருவிதாங்கூருடனே தொடர வேண்டியதுதானே என்று சொன்னாரே தவிர, அப்பகுதிகள் தாய் தமிழகத்துடன் வந்திணையட்டும் என்று கூறுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. மலையாளிகளுடன் இணக்கமாக வாழ்வதற்கு முடியாது என்பதால் தானே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது என்ற உண்மையை அறிந்திருந்தும், அறியாதவர் போன்று பாவனை செய்து கொண்டார் என்றால் குமரி வாழ் நாடார் சமூக மக்கள் மேல் எந்த அளவுக்கு இவர் பரிவு வைத்திருந்தார் என்பது புலனாகிறது. எனவே திருவிதாங்கூரில் தமிழ்     மக்கள் குறிப்பாக நாடார்கள் பெருவாரியாக வாழுகின்ற தமிழ் பிரதேசசங்களை தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வதற்குக்கூட பெருந்தலைவர் தயாராக இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

    அண்ணாத்துரை கூட இவரது இத்தகைய மனப்பாங்கைக் குறித்து இவ்வாறு கூறினார் : “ ……. எனவே நேருவாகப் பார்த்து, நியாத்;துக்குக் கட்டுப்பட்டு தமிழர்களின் உரிமைகளை தந்;தால் உண்டே தவிர, தம்பி! காமராசர் தமது திறமையினால் தமிழரின் உரிமையைப் பெற்று தருவார் என்று என்னால் துளியும் நம்ப முடியவில்லை. கேட்பார், புள்ளிவிபரம் தரப்படும். அதைத் தபாலில் அனுப்புவார். டில்லி இணங்க மறுத்தால், சரி போனால் போகட்டும், தேவிகுளம் இருந்தால் என்ன? அங்கு இருந்தால் என்ன? என்று கூறி விடுவாரேத் தவிர, தமிழர் உரிமை, தமிழகம் இவை பற்றி துளியும் அக்கறை காட்டமாட்டார். நாம் அவரை பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம். அவர் மொழி, இனம், நாட்டு உணர்ச்சிகளுக்குத் தமது உள்ளத்தில் இடமளித்து பழக்கப்பட்டவரே அல்ல.” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் – பாகம் – 1, கடிதம் 25, 6-11-1955 யள ஙரழவநன டில அரு, சங்கர், பெருந்தலைவர் காமராசர்)

    எனவே தமிழ், தமிழ் இனம் (நாடார்கள் உட்பட) போன்ற உணர்ச்சிகள் இவரிடம் காண்பது அரிது, அப்படியிருந்தால் நாடார் சமுதாயம் அன்னாராது ஆட்சி காலத்தில் இமயமலையளவில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கு இவரது ஆட்சி காலத்தில் கூடக் கிடைக்கவில்லை.

    “இந்த நிலையில் திருவிதாங்கூரில் 1954 ஜனவரி – பிப்பரவரி மாங்களில் பொதுத் தேர்தல் வந்தது. இடது சாரிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், ரெவலூஷனரி சோஷியலிஸ்டுகள், கேரள சோஷியலிஸ்டுகள், பிரஜா சோஷியலிஸ்டுகள் போன்றோர் கூட்டணி அமைத்து காங்கிரசை எதிர்த்தனர். எனவே இவர்கள் தகுந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களான திரு. லால்பகதூர் சாஸ்திரியும், திரு. மல்லைய்யாவும், தி.த.நா. காங்கிரஸ் பிரதிநிதிகளை கன்னியாகுமரியில் சந்தித்து தே.த.நா. காங்கிரசின் கோரிக்கைகளில் ஒன்றான, திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்களை சென்னை தமிழ்நாடு காங்கிரசின் வரம்பிற்குள் கொண்டு வருவதைக் குறித்துத் தேர்தலுக்குப் பிறகு சாதகமாக தீர்வு காணலாம் என்றும், அதற்கிடையில், திருவிதாங்கூர் தமிழ்த்தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தும் பொறுப்பை த.நா. காங்கிரஸ் தலைவர் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். இந்த வேண்டுகோளை நேசமணியின் தலைமையிலான தி.த.காங்கிரசார் ஏற்கவில்லை. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.”

    “திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ் (எ.ஜே. ஜாண் தலைமையில்) தனது வேட்பாளர்களை (14 பேர்) தி.த.நா. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் களமிறக்கியது. இவர்களுக்கு ஆதரவு தேடி காமராசர் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேசங்களில் பல நாள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “அவரைத் தொடர்ந்து சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளப் பீரங்கிகள், பெரிய தோக்குகள், சிறிய தோக்குகள், கைத் தோக்குகள் என பல தரப்பட்ட வெடி வேட்டுகள் தங்கள் கோப்புகளோடும், பிரச்சார வண்டிகளோடும் இங்கே படையெடுத்து வந்தனர். எதற்காக? இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டுமென்று ஆறு தலைமுறைகளுக்கு மேலாக ஆர்பரித்து வந்திருக்கும் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை திருவிதாங்கூர்- கொச்சி காங்கிரஸ் கட்சியின் குதிகாலில் கட்டி விடுவதற்காக! பரந்த தமிழகத்தின் தானைத் தலைவராக தன்னைப்பாவித்துக் கொண்ட காமராஜரோ நேசமணியைப் பழித்துக் கூறி குறைத்துக் கூறும் படலத்துக்கு துவக்க உரையாற்றினார். வடிவீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில், “நேசமணி, எந்த யுத்தக் களத்திற்கு போனார்? மார்ஷல் பட்டம் அவருக்கு எவன் கொடுத்தான்? விலைக்கு வாங்குவதற்கு அது என்ன கடைச்சரக்கா?” என்றெல்லாம் இகழ்ந்து பேசினார். மதராஸ் கார்ப்பரேசன் வக்கீல் வு. செங்கல்வராயன், நேசமணிக்குக் குடியரசுச் சட்டம் மூன்றாவது ஆர்ட்டிக்கிள் சம்பந்தமாக பாடம் சொல்லி வைக்க முன் வந்தார். அவர் வளர்ப்பு மகள் அனந்தநாயகி அம்மாள் “தம்பி நேசமணி-க்கு தங்கள் எதிர்ப்பை தாள முடியுமா என்று கேட்டு வைத்தார். (அந்த அம்மாளுக்கு நேசமணியின் மூத்த மகளின் வயது கூட இருக்காதது).” (எ.எ. ரசாக்- நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)

    காமராசரின் இந்தப் பிரச்சார வேளையில், தி.த.நா. காங்கிரசுக்கு எதிராக சில இந்து நாடார்களை அவர் தூண்டியதாகவும் தெரிகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியின் தலைமை குரு திரு. பாலகிருஷ்ண நாடாரை காமராசர் தன்வயப்படுத்தி, நேசமணிக்கு எதிராக ஒரு நாடார் அமைப்பை உருவாக்கியிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

    திரு. காமராசர், “நேசமணிக்கு எவன் மார்ஷல் பட்டம் கொடுத்தான்” என்ற கேள்வியை அன்னாரது பிரச்சார வேளையில் எங்கும் கேட்டு வந்தார். அதற்கான விடையை காமராஜ் பக்தனான திரு அரு. சங்கரே தருகிறார்: “பழைய திருவிதாங்கூர்- கொச்சி மாநிலத்தின் ஓர் அங்கமாக வரலாற்றுப் புரட்டால் ஆக்கப்பட்டிருந்த இம்மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் நேசமணியும் அவரது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கொடுத்த விலை, மதிப்பு போட்டுப்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. அதைக் கேரள தலைவர்கள் மேற்கொண்ட கொடுமையான அடக்குமுறைகளையும், சிறைத்தண்டனைகளையும் போராட்டங்கள் பலவற்றின் மூலம் தோல்வியுறச் செய்தவர் நேசமணி அவர்கள். அதன் காரணமாகவே “மார்ஷல்” என்ற பட்டம் சூட்டப்பட்டு மக்களால் அழைக்கப்பட்டார்” (பெருந்தலைவர் காமராஜர்- அரு. சங்கர்)

    “காமராசரின் தரம் கெட்ட வசை மொழிக்கு பதில் தராமல், மக்கள் பார்த்துக் கொள்வர் எனக்கூறி நேசமணி ஒதுங்கிவிட்டார். அதற்கு மக்கள் சரியான பதிலடியை திரு. காமராஜ் அவர்களுக்குத் தந்து திரு. நேசமணி அவர்கள் தான் “மார்ஷல்” என்று மீண்டும் நிருபித்தனர். திரு-கொச்சி தமிழ் பிரதேசங்கிளல் திரு-கொச்சி தேசீய காங்கிரசால் போட்டியிட வைத்த 14 – வேட்பாளர் அனைவரும் வைப்புத் தொகையை (னுநிழளவை) இழந்தனர். ஆனால். தி.த.நா.கா.வின. பலம் 9-ல் இருந்து 12 அக உயர்ந்தது. தவிரவும் முன் சட்ட மன்றத்தில் 44 பேரைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு 117 – மொத்தம் அங்கத்தினர்களுக்கு 45 –ஐ மட்டும் பிடித்தது. ஆதனால் காங்கிரசால் அமைச்சரவை அமைக்க முடியாத நிலையில்?, மீண்டும் பட்டம் தாணுபிள்ளையை (பி.எஸ்.பி) அமைச்சரவை அமைப்பதற்கு வாய்ப்பை காங்கிரஸ்காரர்கள் அளித்தனர். இவ்வாறு திரு. காமராசரை தென் திருவிதாங்கூர் நாடார் மக்கள் புறக்கணித்தனர்” (அதே புத்தகம்)

    பட்டம் தாணுபிள்ளை இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனதும் அன்னாரது நாடார் விரோத அடக்கு முறைகளை மீண்டும் தொடங்கினார். இதனை எதிர்த்து நாடார் சமுதாயம் 11.8.1954 – அன்று விடுதலை நாள் கடைபிடித்தது. இதில் கம்யூனிஸ்ட்களின் குறிப்பாக ஜுவாவின் கட்சி ஆட்கள் தொடுவட்டியில் புதுக்கடையிலும் வன்முறையில் இறங்கினர். அதன் காரணமாக தொடுவட்டியிலும் புதுக்கடையிலும் மலையாளி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். தவிரவும் போலீஸ் படையினரின் அத்து மீறல்களும், அட்டூழியங்களும் தாங்கொணா அளவிற்கு விளவங்கோடு மற்றும் கல்குளம் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக குறிப்பாக நாடார்களுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்டன. பலர் காட்டு பகுதிகளுக்கும், அனேகர் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டிற்கும் சென்று தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலையில் ம.பொ.சி. நாகர்கோவிலில் வந்து (13.08.1954) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த திரு. நேசமணியும் அவரது வலதுகரமான திரு. எ. அப்துல் ரசாக்கையும் கண்டு பேசி நிலைமையை முற்றிலும் அறிந்தவராகச் சென்னை சென்று எழுதுகிறார்: “நெல்லையில் ஒரு நாள் தங்கி விட்டு சென்;னை திரும்பிய பின்னர், முதல்வர் காமராசரைச் சந்தித்து, தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டம் தாணுவின் ஆட்சி நடத்தும் அடக்கு முறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். தெற்கெல்லை கிளர்ச்சி காரணமாகத்தான் இவ்வளவும் நேர்ந்ததென்றும் அது தேவையற்ற கிளர்ச்சியென்றும் அவர் கூறினார். “(எனது போராட்டம் -ம.பொ.சி.)

    துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் நாடார் சமுதாய மக்கள். முலையாளி போலீசாரின் வன்கொடுமைகளுக்கும், வெறியாட்டங்களுக்கும் உள்ளாக்கப்பட்;டவர்கள் அனைவரும் நாடார்கள். நாடார்களை நொறுக்குகிறார்களே என்ற ஆதங்கத்தால் அதற்கு உடனடி பரிகாரம் தேட வேண்டும் என்று திரு. காமராசரிடம் எடுத்துக் கூறியவரும் ஒரு நாடாரே ஆவார். ஆதரவு கேட்கப்பட்டதும் ஒரு நாடாரிடத்தில் தான். அதற்கு அந்த நாடார் அளித்த பதில் வேதனை தருவதாக இலலையா? காமராசரின் இனப்பற்றுஇவ்வளவு தான் என்பது இதனால் தெரிந்து கொண்டோம்.

    ஒரு வேளை சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி அவர்களோ, அண்ணாவோ, அவ்வமையம் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்திருப்பார்களேயானால் பட்டம் தாணுபிள்ளையின் நிலைமை இக்கட்டானதாக இருந்திருக்கும். திருவிதாங்கூர் தமிழர்களுக்கு பக்க பலமாக நின்று அவர்கள் செயல்பட்டிருப்பர். ஆனால் காமராசர் அன்று முதலமைச்சராக இருந்தது திருவிதாங்கூர் தமிழர்களின் துரதிர்ஷடமே.

    காமராசர் நமக்காக மனம் உருகவில்லை. அதைக் குறித்து ம.பொ.சி. கூறுகிறார்: “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ்க்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவேயில்லை.” “தமிழகத்தின் முதல்வர் – தமிழகத்தின் பெருந்தலைவர் – என்ற முறையில் திரு. காமராசர் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு அனுதாப மொழி கூடக் கூறவில்லை” (அதே புத்தகம்)

    இவரால் எந்த வித்தில் நமக்குப் பெருமை? நாம் துயரப்பட்டிருக்கும்வேளை நமக்கு ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை கூறுவதற்கு மனமில்லாதவரை என்னவென்பது? இருதயமில்லாதவரென்று சொல்லலாமா? அல்லது கல் நெஞ்சமென்று கூறலாமா? சேர நாட்டு நாடாருக்கு எதிரான பாண்டிய நாட்டு நாடார் என்று கூறுவதே சாலப்பொருத்தம். ஆனால் குமரி மாவட்ட நாடார்கள் காமராசரை துதி பாடித் திரிகிறார்கள்.

    “பிறர் வளர்ச்சியைத் தடுப்பதால்தான் தனது வளர்ச்சி இருக்கிறதென்பது அவரது (காமாராஜரது) சித்தாந்தம்” என்றும் ம.பொ.சி. கூறுகிறார். ஒரு வேளை நேசமணி தன்னை விட வளர்ந்து விடுவாரோ என்றொரு அச்சம் காமராசரின் மனதில் இருந்திருக்கலாம். அதனால்தான் என்னவோ, “திரு. காமராசர் தெற்கெல்லை கிளர்ச்சி நடந்தபோது, அதற்கு எதிராக எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்தவர். பச்சையாகச் சொல்வதானால், கேரள ஆதிக்கத்திற்கு தமிழர் அடிமைப்பட்டிருக்கும் நிலை நீடிக்கச் செய்ய அவர் அரும்பாடுபட்டவர்” என்று ம.பொ.சி. கூறுகிறார். (அதே நூல்)

    இந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் (ளுரிசநஅந ஊழரசவ) ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. (எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்)

    திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார் (அதே புத்தகம்)

    இந்த ஆலோசனையை மார்ஷல் நேசமணியின் அங்கீகாரத்திற்கு என எ. ரசாக் சுமந்து வந்தார். தி.த.நா.கா. தலைவர் பி. ராமசாமி பிள்ளை, பொதுச் செயலாளர் ஆர். பொன்னப்ப நாடார், மற்றும் நீதிமன்ற வழக்குகளை முன்னின்று கவனித்து வந்த பக்குருதீன் ஆதத்தையும் வரச் செய்து ஆலேசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பி. ராமசாமிப் பிள்ளையும், பக்குருதீன் ஆதமும் உடன்படவில்லை. அவர் எடுத்துரைத்த வாதம் விசித்திரமாக உள்ளது. “- உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் தொடரப்பட்டால் பி.எஸ்.பி. சர்க்கார் (பட்;டம் தாணுபிள்ளையின் அரசு) மேலும் ஆத்திரப்பட்டு மேற்கொண்டு எந்த சமாதான முயற்சியிலும் ஈடுபடாது என்று அச்சம் தெரிவித்தார்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணிக்கு, அரசு ஒரு கண்ணியமான உடன்பாட்டுக்கு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. உச்சநீதி மன்றத்தில் தாவாக்களை எடுத்துச் செல்லாம் என்றும், தேவைப்பட்டால். அதை பிறகு பின் வலிக்கலாம் என்றும் ஆலோசனை சொன்னார், தலைவரின் இந்த ஆலோசனையை பிறகு அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (ஊ.சு.P.ஊ) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மனுக்களைத் தயார் செய்யும் பொறுப்பை திரு. நேசமணியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மேல் முறையீடு விண்ணப்பங்கள் தயார் செய்வதில் நேசமணி ஈடுபட்டிருந்ததைக் குறித்து திரு. யு. அப்துல் ரசாக் கூறுகிறார்: “ஆனாலும் இரவு பகலென்று பராமல், அணுகி வந்து கொண்டிருந்த கிறிஸ்துமஸ்ஸையும் எண்ணாமல் பம்பரமாக் கறங்கினார். அப்போது அவர் காட்டிய இயக்க வேகத்தை அவரிடம் நான் எப்பொழுதுமே கண்டதில்லை. புயலில் சுற்றும் காற்றாலை போல இயங்கினார் என்றால் அது தகும்”. (அதே புத்தகம்)

    சிறையில் வாடுகின்ற நமது மக்களையும், நாடு விட்டு நாடு கடந்து அபயம் கொண்டிருந்தவர்களையும், காடு மேடுகளில் ஒளிந்து பட்டினிப் பசியால் வாடுகின்ற நாடார் மக்களின் தீராத்துயரை விரைவாகத் துடைக்க வேண்டும் என்ற ஏக சிந்தனையில் திரு. நேசமணி இராத் தூங்காமல் கடமையில் கண்ணாக இருந்து செயல்பட்டார். ஆனால் தமிழகத்தின் தானைத் தலைவரும், முதலமைச்சராகவும் இருந்த காமராஜ் நாடாரின் சதை. துயருற்ற அல்லல்பட்டிருந்த தென் திருவிதாங்கூர் தமிழர்களின்பால், குறிப்பாக நாடார் மக்களின்பால், ஆடவேயில்லை.

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நாள் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (டீ.மு. ஆரமநசதநந)இ “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”

    “திருவிதாங்கூர் – கொச்சி தென் பாகத்தில் ஒரு ஸ்தடபித்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அலுவலகங்கள், முனிசிபல் செயலகங்கள், நீதி மன்றங்கள் முதலியவை சரியாக செயல்படவில்லை. இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் பலரும், வழக்கறிஞர்களில் சிலரும் சிறையிலிருக்கிறார்கள். இது போலவே சட்டப்பேரவையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிகள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை குலைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்குத்தான் இப்படியென்றால் திருவிதாங்கூர் – கொச்சிக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் 3000-க்கும் அதிகமான உள்ளுர் தமிழர்களுக்கு உள்ளே வர முடியவில்லை. நிலைமை அவ்வளவு சீர் கெட்டு இருப்பதால் நேர்மையான நீதிபூர்வமான விசாரணை அங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று பதில் இறுத்தார். இந்த நிலையில் திரு-கொச்சி அட்வகேட் ஜெனரல் மாத்யூ முறிக்கனைப்பார்த்து நீதிபதி விவிலியன் போஸ் கேட்டார்…

    “எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன? அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” (அதே புத்தகம்)

    தாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”. (அதே புத்தகம்)

    விளவங்கோடு துப்பாக்கிச் சூட்டுக்கு (11.08.1954) வழிவகுத்துக் கொடுத்துவிட்டு, காலில் கொப்பளங்கள் ஏற்பட கடுக்கரையிலிருந்து மலைவழியாக தப்பி ஓடிய ஜீவாவின் கோழைத்தனத்தை பாராட்டுகின்ற நாஞ்சில் நாட்டார். நேசமணியின் இந்த நீதிமன்ற வெற்றியால் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும், எம்.எல்.எ.க்களும் விடுதலையடைந்த வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்ச்சியை புகழாவிட்டாலும், அது குறித்து ஒரு வரி கூட எழுதுவதற்கு மனமில்லாத நாஞ்சில் நாட்டானை எவ்வாறு கணிக்கலாம். சாதி வெறியன் என்றா? அல்லது சந்தர்ப்பவாதியென்றா? இவைகள் இரண்டும் பொருந்தாது என்று நினைக்கிறேன். தேரூர் தேசிக விநாயகம் பிள்ளை கூறுகின்ற, “நாஞ்சினும் கொடியவன்” என்பதே இவர்களுக்கு உகந்த வியாக்கியானம். ஜீவா, மக்களை சிறைப்படுத்துவதற்கு துணை புரிந்து விட்டு ஓடி ஒளிந்து கொண்டார். ஆனால் அவர்களையெல்லாம் நேசமணி சிறை மீட்டு வந்தார். எனவே யார் பொய், யார் குமரித் தந்தை, என்று நஞ்சில் நாட்டானே உனது நெஞ்சில் கைவைத்து நீயே சொல்!

    இந்த நிலையில் மைசூர் நீதிமன்றத்தில் 7 எம்.எல்.எ.க்கள் முதலிலும் மற்றவர்கள் தொடர்ந்தும் விடுதலையானார்கள். அங்கே “கூட்டத்தில் ஒருவராக கோர்ட்டுக்குள் நுழைந்த நேசமணி ஒரு மார்ஷலாகத் தலை நிமிர்ந்து வெளியே வந்தார்.” (அதே புத்தகம்) காமராசரின் கேள்வியான “யார் இவருக்கு மார்ஷல் பட்டம் கொடுத்தான், அது வாங்குவதற்கு என்ன கடைச்சரக்கா?” என்பதற்கான விடையை அவர் இங்கே கண்டார். ஆனால் கண்டும் காணாதது போல் பாவனை செய்தார்.

    மொழி வழி மாகாணங்கள் புனரமைப்புக் குறித்து பரிந்துரைக்க 1954-ல் பசல் அலி கமிட்டியை மத்திய அரசு நியமித்தது. தமிழக அளவில் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுகாக்கள் பற்றியும் பசல் அலீ கமிஷன் விசாரணை நடத்தியது. முடிவாக தென் திருவிதாங்கூரில் நான்கு தாலுகாக்களையும், செங்கோட்டைத்; தாலுகாவை முழுமையாகவும் தமிழகத்துடனே இணைக்கலாம் என்று அக்கமிஷன் பரிந்துரைத்தது. இதில் தேவிகுளம் – பீர்மேடு முற்றிலும் விடுபட்டிருந்தது.

    “அப்போது முதலமைச்சர் பதவியிலிருந்த காமராசர், பொதுவாக பசல் அலி கமிஷன் பரிந்துரையை வரவேற்றார் என்றாலும் தென் திருவிதாங்கூரின் தமிழ்த் தாலுகாக்கள் தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டுமென்று கமிஷன் பரிந்துரைத்தது குறித்து களிப்படையவில்லை” –தவிரவும், “அங்குள்ள மக்கள் விரும்பினால், இனியும் அவர்கள் தமழகத்தில் சேராமல் கேரளத்திலேயே இருந்து விடலாம்” என்ற செய்தியை நிருபர்களிடம் கூறினார். ஆம் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தோல்வியாக்கி, அதனை அவர்கள் மீது திணிப்பதற்கு திரு. காமராசர் விரும்பினார். (எனது போராட்டம் – ம.பொ.சி) காமராசரின் இந்த செய்தியால், குமரி மாவட்ட தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் தமிழகத்துடனே வந்து இணைவதை அவர் மனமார வெறுத்தார் என்பதை எடுத்தியம்புகின்றது. தவிரவும் 01.11.1956 அன்று குமரி மாவட்ட இணைப்பு ஏற்பு விழாவில் “திரு – கொச்சியில் இருந்த நீங்கள் எல்லா துறைகளிலும் நன்றாக வளர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்காக மதராஸ் அரசு எதையும் செய்வதற்கில்லை. தமிழர்கள் தமிழர்களோடு இணைந்தார்கள் என்ற அளவோடு நீங்கள் நின்று விட வேண்டும் என்று கூறினார். “(சமுதாய சிந்தனை, அக்டோபர் 2006)       

    இது தான் குமரி வாழ் நாடார் மக்களின் பால் பெருந்தலைவர் காமராசர் கொண்டிருந்த மனநிலை. அழையாத விருந்தாளி என்ற அந்தஸ்தில் தான் அவர் நம்மை வைத்திருந்தார். அதே நிலை இன்று வரையிலும் தொடர்கிறது.

    பசல் அலி கமிஷனின் ஆணைப்படி தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரையும் கேரளத்துக்கு விட்டுத் தரப்பட்டிருந்தன. ஆனால் இங்கேயும் தமிழர்கள் பெருவாரியாக வாந்திருந்தனர். முக்கியமாக மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நஞ்சைநிலங்களுக்குப் பாசன வசதிகயைத் தருகின்ற முல்லை- பெரியாறு நீர் தேக்கத்தையும் கேரளத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. இவைகளைக் கண்டு நேசமணி அதிர்ச்சியடைந்தார் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவின் மீது விவாதம் நடக்கும் போது விடுபட்டுப் போன இந்தத் தமிழ் பிரதேசங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று மூன்று நாட்கள் வாதாடினார் நேசமணி. வரலாறுகளை முன் நிறுத்தியும், பொருளாதாரத்தை சுட்டிக்காட்டியும், மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டியும், தாய் மொழியின் அடிப்படையிலும் அந்த அஞ்சா நெஞ்சன் தன்னந்தனியாக நின்று வாதாடினார். இவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அன்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் முன் வரவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.கள் அங்கே இருந்தனர். இவர்களுக்கு பெருந்தலைவர் வாய்ப்பூட்டு போட்டதின் காரணத்தால் அவர்கள் நேசமணிக்கு பக்க பலமாக நின்று உதவ முன்வரவில்லை. இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். நெய்யார் அணைநீரை இழந்தோம். புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதியை இழந்தோம். இங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனையை இழந்தோம். சேங்கோட்டைத் தாலுகாவில் பாதியை இழந்தோம். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணையையும் இழந்தோம். இந்த இழப்புகளுக்கெல்லாம் யார் காரணம்? அன்று தமிழகத்தில் முதலமைச்சராக வீற்றிருந்த காமராசர் தானே? அன்று பாரதப் பிரதமாராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேருவிடம் பெருந்தலைவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்திருப்பாரேயா

னால், நியாயமாக, மொழி அடிப்படையில் கிடைக்க வேண்டிய இடங்களை (மேலே குறிப்பிட்ட இடங்களை) தமிழகம் பெற்றிருக்கும், ஆனால் காமராசர் இதைக் கண்டு கொள்ளாமல், வாழ வெட்டியாக இருந்து விட்டார்.

    இவரது ஆட்சிக் காலத்தில் நெய்யார் அணைக்கட்டும், குமரி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் பாசன வசதிப் பெறுவதற்கான இடது கரை சானலும் உருவாக்ப்பட்டது. இதை 21.07.1958-ல் காமாரசர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு மொத்தம் 248 லட்சம் செலவு பிடிக்கும். அதற்கான ஒப்பந்தத்தில் கால வரம்பு சரியாக வரையறுக்கப்படாததால் அந்த திட்டத்தால் இன்று குமரி மாவட்டம், குறிப்பாக விளவங்கோடு தாலுகா விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி விட்டனர். இடது கரை கால்வாயில் தண்ணீர் விடாமல் கேரளம் அடைத்துவிட்டது. இந்த அரை குறை திட்டத்தில் நாம் பாசன வசதியை இழந்தோம். (கன்னியாகுமரி மாவட்டம் விவரச் சுவடி)

    தவிரவும் பட்டணம் கால்வாயும், அத்துடனே இராதாபுரம் கால்வாய்க்கான திட்டமும் பெருந்தலைவர் காலத்தில் தீட்டப்பட்டு, பக்தவத்சலனார் காலத்தில் வேலை தொடங்கப்பட்டு 1970-ல் முடிவடைந்தது. தீட்டப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையில் பட்டணம் கால்வாயால் விளவங்கோடு தாலுகாவில் 60073 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டம் முழுமையடைந்த போது வெறும் 3791 ஹெக்டேர் நிலம் தான் பாசன வசதி பெற்றது.

    இதற்குக் காரணம், இத்துடனே தீட்டப்பட்ட ராதாபுரம் கால்வாய் திட்டத்தால் வந்த வினைதான். இத்திட்டத்தால் இராதாபுரம் பகுதியில் 17,000 ஹெக்டேர் தரிசு நிலம் பாசன வசதியைப் பெற்றது. இந்த கால்வாய் 33.50 கி.மீ. நீளமும், 70 கி.மீ. பகுந்தளிப்பு கால்வாய்களும் அடங்கியதாகும். பட்டணம் கால்வாயால் பயன் அடைகின்ற நஞ்சை, புஞ்சை நிலங்களைவிட 3 மடங்கு நஞ்சை, புஞ்சை, நிலங்கள் இராதாபுரம் கால்வாயால் பயனடையும் விதத்தில் தமிழக அரசு திட்டம் தீட்டியதை இங்குள்ளவர் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இவைகளுக்குப் போதிய தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என்ற ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த ராதாபுரம் கால்வாய்த்திட்டத்தைத் தீட்டினர். ஆதனால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டணம் காலவாய் கடை வரம்பு விவசாயிகளும், நாஞ்சில் நாட்டு கடைவரம்பு விவசாயிகளும் ஆவர், இவர்களின் இழப்பில் பயனடையந்தவர்கள் ராதாபுரம் விவசாயிகள்.

பட்டணம் கால்வாய் திட்டம் தீட்டிய உடனே நாஞ்சில் நாட்டு வெள்ளாளப்பண்ணையார்களும், நாடார் சமூக நில உடமைகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இராதாபுரம் கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை. இத்திட்டத்தால் பாண்டி நாட்டினர் அதிக பயன் அடைவர் என்பதால் திட்டத்தை எதிர்க்காமல், ஆதரித்தனர் என்று கருதலாம். ஆனால் நாஞ்சில் நாட்டவருக்கு அதிக பாதிப்பை உருவாக்கியது இந்த இராதாபுரம் கால்வாய் திட்டம் ஆகும்.

    இராதபுரம் கால்வாய் திட்டம் தீட்டப்பட்ட வேளையில், பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவைக் கூட்டுகின்ற வகையில் அதன் உயரத்தை 6 அடி உயர்த்தினார்கள். பிரதான அணையின் உயரத்தை கூட்டியதால் அதன் நீர்வடிப்பு மதகுகளின் உயரத்தை ஆறு அடி உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் அதை உயர்த்தவில்லை. தவிரவும் அணையின்; வடபாக பள்ளங்களையும் சிறு சிறு தடுப்பு அணைகள் கட்டி தண்ணீர் அதன் வழி வீணாவதைத் தடுத்திருக்க வேண்டும். அவைகளைச் செய்யாமல் அணையின் உயரத்தை மட்டும் கூட்டினால் போதுமா? அதனால் அதிக மழைபெய்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஆனால் அதை அணையில் தேக்கி வைப்பதற்கு இயலாததால் வெளியேற்றும் மதகுகள் அவசர அவசரமாக திறக்கப்பட்டு, கோதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு உருவாகி பெரும் அழிவை உண்டுபண்ணியது. அதற்குப் பிறகு பேச்சிப்பாறை அணை நிரம்பவெயில்லை. ஆயினும் இராதாபுரம் கால்வாயில் தண்ணீர் எடுத்துச் செல்வது தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த தண்ணீர் குறைப்பாட்டைச் சரி செய்வதற்காக தடையாறு அணைத்திட்டத்தையும், பறளியாறு நீர் உந்துத் திட்டத்தையும், செயலாக்கும் செய்யாமல் விட்டுவிட்டனர். அதனால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த இராதாபுரம் திட்டதால் வஞ்சிக்கப்பட்டனர். இந்த திட்டத்திற்கு ஏற்பளித்தது திரு. காமராசர் ஆட்சிக் காலத்தில் தான் என்பது கவனத்திற்குரியது. ஆகையால் இராதாபுரம் பகுதிகளுக்கு கன்னியாகுரியின் இழப்பில் திட்டம் தீட்டியவர் காமராசர் ஆவார்.

    இந்த சூழ்நிலையில், அதில் இந்தியா அளவில் காயங்கிரசின் வளர்ச்சி சரிந்து வரத் தொடங்கியது. இதை சரி செய்து மீண்டும் காங்கிரசை புத்துயிர் ஊட்டுவாதற்காக காமராசர் தனது கே-திட்டத்தை (மு-Pடயn) அறிவித்தார். அதன்படி காமராசர் முதலமைச்சர் பதவியிலிருந்து 1963- ஆம் ஆண்டு இறங்கி அகில இந்திய அளவில் பணியாற்றுவதற்கு டில்லி சென்றார். மீண்டும் 1967-ல் விருதுநகர், திரு. காமராசர் பிறந்து வளர்ந்த ஊர். நாடார் சமுதாயத்தில் வசதி படைத்தவர்கள் நிறைந்த ஊர். ஆனால் காமராசரின் பால் அவர்களுக்கு மனத்தாங்கல் உண்டு. ஏனெனில் சமுதாய வளர்ச்சியில் காமராசர் துளியும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றொரு மனத்தாங்கல். இது தேர்தல் களத்தில் பிரதிபலித்தது. தவிரவும் பச்சைத்தமிழனை அவன் மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டு, தினத்தந்தி அதிபர் சி.ப. ஆதித்தனாரின் பின் துணையுடன் கருணாநிதியும் களத்தில் இறங்கியிருந்தார். “எப்படியோ தலைவர் ஒருமாணவனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் இதை குமரி மாவட்டத் தந்தை மார்ஷல் நேசமணியால் பொறுக்க முடியவில்லை. அவர், தான். வெற்றி பெற்ற நாகர்கோவில் தொகுதியை பெருந்தலைவருக்காக விட்டுக் கொடுக்க முன் வந்தார். ஆனால் காமராசர் மிக அடக்கமாக மறுத்து விட்டார்.” (அரு. சங்கர் – பெருந்தலைவர் காமராசர்)

    பெருந்தலைவர் அடக்கமாக மறுத்துவிட்டார் என்பதை விட அவரது குற்ற உணர்வு திரு. நேசமணியின் உதாரத்துவத்தின் முன்பு வெட்கிப் போயிற்று. அதனால் அவரது கொடையை திரு. காமராசரால் ஏற்றுக் கொள் முடியவில்லை. இதில் கவனத்திற்குரியது என்னவென்றால், காமராசர் தன் சொந்த வீட்டிலேயே வீழ்ந்துவிட்ட அதே வேளையில் திரு. நேசமணயவர்களோ தனது மாவட்டத்தில், தொகுதிக்குச் செல்லாமலே, வாக்காளர்களிடம் சென்று வாக்கு கேட்காமலே, தன்னை எதிர்த்துப் போடடியிட்ட பிரபலங்கள் பெற்ற கூட்டு வாக்குத் தொகையை விட அதிகம் பெற்று அமோக வெற்றியைப் பெற்றார். ஆனால் காமராசரோ ஒரு மாணவரிடம் தோற்றுப் போனார். இது தான் மார்ஷலுக்கும், காமராசருக்கும் உள்ள வேறுபாடு. காமராசருக்கு தன் தொகுதியை விட்டுக் கொடுக்க முன் வந்ததன் காரணமே இனப்பற்று தானே தவிர, ஐயோ! பாவம் என்பதனாலல்ல. எனவே நேசமணியடம் காணப்பட்ட சமுதாயப்பற்று, காமரசரிடம் என்றும் காண முடிந்ததில்லை. 1967- தேர்தல் வேளையில் மார்ஷல் நேசமணி உடல் தளர்ந்த நிலையில் தான் காணப்பட்டார். ஆயினும் மக்கள் அவரை விடுவதாக இல்லை. அவர் தொகுதி பக்கம் வரவில்லையானாலும், வாக்காளர்களை சந்திக்காமலே, தங்களது தலைவனை வெற்றி காமராசருக்காக, தான் வெற்றிபெற்ற தொகுதியை விட்டுக்கொடுக்க வேறு எந்த காங்கிரஸ்காரனோ, நாடானோ முன்வரவில்லை என்பதே. அந்த நிலையில் தான் நாடார் சமூகம் அவரை அன்று வைத்திருந்தது.

    1968 ஏப்ரல் மாதம் நேசமணி படுத்த படக்கையாகி விட்டார். நெய்யூர் C.S.I மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது உடல் நலம் தேறி, அன்னாரது சொந்த ஊரான பள்ளியாடி, நேசர்புரம் காடுபுரயிடம் குடும்ப வீட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் பெருந்தலைவர் காமராசர் அவரைப் பார்ப்பதற்காக அங்கே வந்திருந்தார். பெருந்தலைவர் காமராசரை கண்ட உடனே கூடியிருந்தவர்களுக்கு கடுங்கோபம் உருவாயிற்று. அவரது முகம் பார்த்து திரு. நேசய்யன் என்பவர் “ஏ! துரோகி, எங்கள் தலைவருக்கு துரோகம் இழைத்து விட்டு அவர் இப்போது செத்தாரா, இ

ருக்கிறாரா என்று பார்க்கவா இங்கு வந்தாய்? ஒரு கடற்கரைக் காரியை மந்திரியாக்கி எங்கள் தலைவரை மூக்கறுத்து விட்டாயே! துரோகி, வெளியே போ!” என்று ஆவேசமாக கத்தினார். இதை சற்றும் எதிர்பாராத திரு. காமராசர் உறைந்து போனார். சுதாகரித்துக் கொண்டு நேசமணியின் படுக்கைக்குச் சென்று மனக்கலக்கத்துடன் நலன் விசாரித்து சால்வை அணிவித்தார். அப்போது திரு. நேசமணி அவர் கரம்பற்றி, “பையன்கள் என் மீது வைத்திருக்கும் அன்பால் ஏதோ ஆத்திரத்தில் அவ்வாறு சொல்லி விட்டார்கள். மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். அது குறித்து நான் வருத்தப்படுகிறேன.” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தி விடைக் கொடுத்தார் (நேர்முகப் பேட்டியின் போது என்னிடம் திரு. N. நேசய்யன் கூறினார். அவருக்கு தற்பொழுது 80 வயது. படுக்கையாகி விட்டார். பேட்டியின் போது உடனிந்தவர் திரு. குமாரதாஸ், கொடுமுட்டி, தி.த.நா.கா. பேராட்டத்தியாகிகள் சங்க தலைவர், பேட்டி நாள்: 06.05.2007)

    உடல் நலம் மேலும் மோசமாகி, குமரித் தந்தை நேசமணி 01.06.1968 அன்று காலமானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. செத்தும் கொடுத்தான். சீதக்காதி என்பர். அதே போன்று நேசமணியும் செத்து தன் சொந்த தொகுதியை, அரசியல் வியத்தில் சிக்கி முடாகிப் போன காமராசருக்கு விட்டுச் சென்றார்.

    குமரி நாட்டு மக்களுக்கு இன உணர்வு அதிகம். வெள்ளாள சமுதாய மக்களின் இன உணர்வு மிக மிக அதிகம். அதே போன்ற உணர்வு மீனவ சமுதாயத்திடமும் உண்டு. கத்தோலிக்க சமயத்தில் இருக்கின்ற நாடார் இன மக்களை மீனவ சமுதாயத்தைச் சார்ந்த சமய பாதிரிகள் இரண்டாம் கிறிஸ்தவனாகக் கருதி வருவதற்கும் இந்த இன உணர்வு காரணமாகிறது தலித் மக்களும், கிறிஸ்தவன் ஆனாலும் இந்து சமயத்தைச் சார்ந்தவன் ஆனாலும், இன உணர்வு அவர்களிடத்திலும் அதிகமாகக் காணப்படுகிறது. கேரள முதலி என்ற இனத்தாரும் அவ்வாறே காணப்படுகின்றனர். நாயர் சமுதாயத்தவர்கள், குறுப்பு இனத்தவர்களின் நிலையும் அவ்வாறே, ஆகவே நாடார் இனத்தவர்களும் நாடார் இன உணர்வு கொண்டுள்ளதில் தவறில்லை. இதனடிப்படையில் விருதுநகரில் தோல்வியுற்ற காமராசரை, நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட குமரி வாழ் நாடார் மக்கள் விரும்பி வேண்டினர். அவரும் அதை ஏற்று போட்டியிட்டார். குமரி மக்களுக்கு குறிப்பாக நாடார் இன மக்களுக்கு அவர் செய்யத் தவறியவைகளை மனதிpல் கொண்டு பகைமை பாராட்டாமல், பெருந்தலைவரை பிற இனங்களான வடுகர்கள், தேவர்கள், நாயர்கள், மேளக்காரர்கள் போன்ற சாதியினர் ஒன்று சேர்ந்து தோற்கடித்து விட்டனரே என்ற குமரித் தந்தை நேசமணியின் ஆதங்கத்தை நன்கு அறிந்திருந்த நாடார் மக்கள் காமராசரை வருந்தி அழைத்து வந்து இங்கே போட்டியிட வைத்தனர். பச்சைத் தமிழன் ஒருவன் வஞ்சனையால் விழ்த்தப்பட்டுவிட்டானே என்ற ஆதங்கத்தாலும் நாடார் ஒருவரை அரசியல் வானில் மீண்டும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற ஒரே எண்ணத்திலும் அன்னாரை இங்கு வரவழைத்து வெற்றி பெறச்செய்தனர் குமரி வாழ் நாடார் மக்கள். இன்று இம்மாவட்ட நாடார்களில் சிலர் வடுகர்களை சுமக்கிறார்கள். பலர் பாண்டிக்காட்டான்களை சுமக்கிறார்கள்.

    திரு. காமராசருக்கு எதிராக இங்கே யாரும் போட்டியிடுவதற்கு முன் வராத நிலையில், கருணாநிதி அவர்களும், தினத்தந்தி நாளிதழ் அதிபர் ச.ப. ஆதித்தனாரும், நேசமணியை அண்ணன், அண்ணன் என்று சதா காலமும் கூப்பட்டு பின்பற்றி வந்த டாக்டர் எம்.மத்தியாசைக் கண்டெடுத்தனர். இந்த நிகழ்சியைக் குறித்து அரு. சங்கர் கூறியிருப்பதை வாசகர்களின் பார்வைக்கு இங்கே தரப்படுகிறது.

    “தமிழக முதல்வர் அண்ணா அவர்களோ நோய்வாய்ப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார். தேர்தல் மன்னன் என்ற பெயரைக் காமராஜரிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்ட கருணாநிதியாரோ மீண்டும் ஒரு தேர்தல் தோல்வியைக் காமராசருக்குத் தரத் திட்டம் தீட்டுகிறார்”. இன்று கருணாநிதி காமராசருக்கு சிலை அமைக்கிறார். நாடார்கள் கருணாநிதி கையில்.

    “ஒரு காலத்தில் காங்கிரஸ் காராக இருந்து எப்படியும் அந்த இயக்கத்தில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுக் கொள்ள துடித்து அது நிறைவேறாத நிலையில் எதிரணியில் சேர்ந்து தன் பத்திரிகைச் செல்வாக்கால் காங்கிரஸ்காரர்களை கார்ட்டூன் கோட்டே காமராரை வீழ்த்திய தினத்தந்தி ஆதித்தனாரின் புதிய நட்பு கருணாநிதிக்கு ஒருவரப்பிரசாதகமாக அமைந்திருந்;தது. எனவே காமராசரைப் பலி கொள்ள நாகர்கோவில் தொகுதியிலேயே ஒரு கரியான ஆளைத் தேடத் தொடங்கினார். அவருடைய கழுகுப் பார்வையில் சிக்கியவர் டாக்டர் மத்தியாஸ். பொது வாழ்க்கையில் மார்ஷல் நேசமணிக்கு உற்ற தம்பி. தலைவர் நேசமணியை ‘அண்ணன்’ என்றே பகிரங்கமாக கூறிக் கொண்டவர். ஆனால் அவர் எக்கட்சியையும் சாராதவர். தலைவர் நேசமணியன் வசதுகரமாக இயங்கி அவர் தேர்தல்களில் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய படுபட்டவர். 19530-ஆம் ஆண்டில் குளச்சல் முதல் கொல்லங்கோடு வரை பரவி மக்கள் உயிரைச் சூறையிட்ட வாந்தி பேதி நோயினின்று மக்களைக் காப்பாற்ற திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைத்த மருத்துவ முகாம்களில் கைமாறு கருதாமல் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். மார்ஷல் நேசமணியின் அன்புக்குப் பாத்திரமாக இருந்தவர். ஆயினும் ஏதோ மனத்தாங்கலால் அவரையே 1967- தேர்தலில் எதிர்த்து நின்று தோன்றிருந்தவர். மக்கள் இவரை மார்ஷலின் மறுவுருவமாக ஏற்றுக் கொள்வர் என்று கருணாநிதி கணக்குப் போட்டார். ஆனால் டாக்டர் மத்தியாசுக்குத் தலைவர் காமராசரை எதிர்த்து நிற்க விருப்பமில்லை என்றும், அடி மேலடித்து நகர்த்தப்பட்ட அம்மியாகத் தான் கடைசியில் ஒப்புதல் தந்தாரென்றும் அப்போதே பேசப்பட்டது.” (அரு. சங்கர் – பெருந்தலைவர் காமராசர்)

    பிறிதொரு வேளையில் டாக்டர் மத்தியாஸ் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எம்.எஸ். சுpவசாமையை கருணாநிதி தி.மு.க. சார்பில் களமிறக்கினார். வாக்குகள் எண்ணப்பட்டன. டாக்டர் மத்தியாஸ் முன்னிலை பெற்றார். ஆனால் அவர் தோற்கும் வரை வாக்குகள் மீண்டும் மீண்டும் எண்ணப்பட்டன. முடிவாக, வெற்றியடைந்த நிலையில்இருந்த டாக்டர் மத்தியாஸ் தோல்வியடைந்தார். அச்சமயம் தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார். நாகர்கோவில் பாராளுமன்ற தொகுயில் திரு. காமராசருக்கு எதிராகக் களமிறக்க டாக்டர். மத்தியாஸைத் தேடிச் சென்ற கருணாநிதி திருச்செந்தூர் தொகுயில் டாக்டர் மத்தியாஸைத் தோற்கடிப்பதற்காக பதிவான வாக்குகளை பல தடவைகள் மறு எண்ணிக்கைக்கு வழிகோலியது ஏன்? அங்கே எம்.எஸ். சிவசாமியை எதிர்ப்பதற்கு டாக்டர். மத்தியாஸ் தேவையில்லை. அது ஏன்? சந்தர்ப்ப அரசியல். திரு. சிவசாமி கருணாநிதி ஆள். ஆனால் டாக்டர் மத்தியாஸ்..?

    இங்கே டாக்டர் மத்தியாஸ் அல்ல, காரியம், பச்சைத் தமிழன் தான் முக்கியம். அதனால் டாக்டர் மத்தியாஸ் எங்களுக்கு பகைவன் அல்ல. நாடார் இனப்பகைவர்களின் வலையில் அவர் வீழ்ந்து விட்டது தான் அம்மாவட்ட மக்களுக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மற்ற விஷயங்களில் டாக்டர் மத்தியாஸ் குமரி மாவட்ட மக்களுக்கு ஆற்றிய பணி காமராசர் ஆற்றிய பணிகளை விட பல மடங்கு சிறப்புடையதாகும்.

    “பொதுவாகக் கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் இயக்கத்தின் கோட்டையாக மார்ஷல் நேசமணியவர்களால் ஆக்கப்பட்டிருந்தது. அதனால் காமராசருக்கு மக்கள் வெள்ளம் அளித்த வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை ………….. இந்திய அரசியல் வரலாற்றில் இந்தத் தேர்தல் வெற்றி ஏற்படுத்திய தாக்கத்தை இதற்கு முன்னரோ, அன்றி பின்னரோ எந்தத் தேர்தல் முடிவும் ஏற்படுத்தியதில்லை”, என்று சங்கர் எழுதுகிறார். (அதே புத்தகம்)

    இந்த ரீதியான வாக்குப்பதிவு தான் காமராசரின் தேர்தலின் போதும் நடந்தது. இந்த இடைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த தேர்தல் 1971-ல் நடந்தது. அதிலும் பெருந்தலைவர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டார். இச்சமயம் டாக்டர் மத்தியாஸ் இவரை எதிர்த்து நிற்பதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இவரை எதிர்ப்பதற்கு யாரும் முன் வராத்தை உணர்ந்த தி.மு.க. அரசு (அப்போது கருணாநிதி முதலமைச்சர்) திரு. ஏம்.சி. பாலனை போடடியிடச்செய்தது.

    “பின்னாளில் திரு. பாலன் அவர்களைச் சென்னையில் நான் நிறைவு செய்த திருமண மேடையில் சந்தித்த போது கேட்டேன். “காமராசரை எதிர்த்துத் தேர்தலில் நிற்க மாட்டேன்; என்று சொல்லியிருக்கலாமே? அதற்கு அவர் புன்முறுவலுடன் கூறினார் “கட்சியின்- கலைஞரின் நிர்ப்பந்தம்.” (அதே புத்தகம்)

    இவைகளை ஏன்? இங்கே விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என்றால், கருணாநதியின் நாடார் குரோதம் எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கவேயாகும். ஆனால் இன்று! காமராசரை தன் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு வலம் வருகிறார். எதற்காக? காமராசரின் பெயரைச் சொல்லி நாடார் சமூக மக்களின் அரசியல் ஆதரவுக்காக மட்டும்! நாடார் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

    பெருந்தலைவர் 02.10.1975-ல் எதிர்பாராமல் காலமானார்கள். அவ்போது நாட்டில் அவசரகால நிலை இந்திரா காந்தி அம்மையாரால் பிரகடனப்படுத்தப்பட்டடிருந்தது. மீண்டும் தேர்தல் 1977-ல் நடத்தப்பட்டது. அவ்வமையம் நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தொகுதியில் குமரி அனந்தன் போட்டியிட்டார். அவர் 1977 முதல் 1980 வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தவிரவும் காந்தி-காமராஜ் என்ற அரசியல் கட்சியை அவர் உருவாக்கி செயலற்றி வந்தார்.

    பெருந்தலைவர் கு. காமராஜ் அவர்கள் 1969 – 1971 மற்றும் 1971 – 1975 ஆகிய இருமுறைகளும், குமரி அனந்தன் 1977 – 1980 ஒருமுறையும் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது காலத்தில், குமரி மாவட்டம் அடைந்த நன்மைகள் அல்லது வளர்ச்சிகள் தான் என்ன என்று கேட்டு 25-08-2006 அன்று குமரி அனந்தனுக்கு நான் கடிதம் எழுதினேன். இந்த நிருபத்துக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து ஒன்று புலனாகிறது. அவர்களது காலத்தில் குறப்பிடும் படியான எந்த நன்மையும் குமரி மக்களுக்கு அவர்கள் செய்யவில்லை என்பது வெட்ட வெளிச்சம். ஆனால் நேசமணி இந்த குமரி மண்ணுக்காக ஆற்றிய பணி இமயமலை போன்றது ஆகும். அதன் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின்,” குமரி சிற்பி நேசமணியும் தென் குமரித் தமிழ் மக்களும் – 2004” என்ற எமது புத்தகத்தை பார்த்துக் தெளிவடைந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரைப் போல காமராசரும் ஆட்சி சுகம் அனுபவித்தவர். “ஆகட்டும் பார்துக்கலாம்” என்ற ஒரு ஆட்சி முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் காமராசர். தமிழ் மண்ணை அன்னியர்கள் அபகரிக்கத் துணை நின்றார் காமராசர். நேசமணியோ மகாத்மா காந்தியைப் போல ஒரு விடுதலை வீரன் – ஆட்சி சுகம் அனுபவித்தவரல்ல. இந்திய மண்ணை ஆங்கிலேயரிடமிருந்து காந்தியார் மீட்டுத் தந்தது போல, நேசமணியும் தமிழ் மண்ணை மலையாளிகளிடமிருந்து மீட்டுத்தந்தார். காந்தியாரே தேசத்தந்தை – ஆட்சி சுகம் அனுபவித்த ஜவகர்லால் நேரு அல்ல. அதுபோல, ஆட்சிசுகம் அனுபவித்த காமராசரல்ல- தமிழ் மண்ணை மீட்டுத்தந்த நேசமணியே குமரித்தந்தை.

குமரி மாவட்டத்து அனைத்து மக்களின் அன்புக்குப் பாத்திரமான நேர்மையாளர்; குமரி மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றவர்; குமரித்தந்தை என்ற புகழ் மகுடம் பெற்றுத் தமிழக வரலாற்றில் தமக்கென தனியிடம் பெற்றவர் நேசமணி அவர்கள்- மு. கருணாநிதி, 5.3.1992.

தந்தையை நிராகரித்த குமரி காங்கிரஸ் கட்சி அனியும் நமக்கு வேண்டுமா? –குமரி மக்களே ! சிந்தியுங்கள் – செயல்படுங்கள் !!அன்புமிக்க ரசாக்,

    நான் ஸி.ராஜகோபலாச்சாரியார், காமராஜ், கிராமணி, சுப்பையா ஆகியோரை சென்னையில் சந்தித்துவிட்டு நேற்றுமாலை நாகர்கோவில் திரும்பினேன். சுப்பையா என்னோடு தான் ரயிலில் பயணம் செய்தார். ஸி.ஆர் கருத்துப்படி, நாம் சென்னை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் உருத் தெரியாமல் கலந்து விடாமல் ஒரு தனி கமிட்டியாக இயங்க வேண்டும் என்பதாகும், ஒரு தனி பிரதேச காங்கிரஸ் கமிட்டியாக இயங்க வேண்டும் என்பது தான் அவர் கருத்து என்று யூகிக்கிறேன்.

    ஆனால் தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின்கரை ஆகிய மூன்று தாலுகாக்களும் சேர்க்கப்படுவதில் திருவிதாங்கூர் – கொச்சி பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு மறுப்பு இருக்கிறது என்று காமராஜ் கூறுகிறார். காமராஜ் தீர்மானமாக ஏதும் சொல்ல வில்லை. நாம் அதிகமாக கல்வியறிவு பெற்றிருப்பதால் காமராஜ் நம் விஷயத்தில் விசேஷ அக்கறை எடுக்க மாட்டார் என்று கோயமுத்தூர் சுப்பையா அபிப்பிராயப்படுகிறார்.

    ஆகவே, மாறுபட்ட இந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மார்த்தாண்டம் தீர்மான அடிப்படையில் தமிழ் தாலுகாக்கள் ஒன்பதிற்குமாக ஒரு தனி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அமைவதையே விரும்புகிறோம் என்று மாதவன் நாயரிடம் எடுத்துச்சொல்லுங்கள்.

கவுடியார் குன்று அரண்மணையில் காமராசர் !

    எல்லைகளை வரையறுக்க, 1955 ஜனவரி 16-ம் நாள் திருவனந்தபுரத்தில் இராஜபிரமுகர் அவர்களின் இருப்பிடமான கவுடியார் குன்று அரண்மனையில், ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜா தலைமையில் ஒரு கூட்டுக்குழு ஆலோசனை நடந்தது. முதராஸ் மகாணத்தின் சார்பில் அதன் முதலமைச்சர் திரு. கு. காமராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள். அங்கு விருந்து உபசரணைகள் கணிசமாக நடந்ததாம். பிறகு எல்லை நிருணயம் பற்றி பேசி காமராசரிடம் பலதை கேட்டு வாங்கிக் கொண்டார்கள் கேரளீயர். மயக்கத்தில் இவரும் தாராளமாக விட்டுக் கொடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் மன்னர்களின் பழங்கால அரண்மனையை விட்டுக் கொடுத்தார். குமரி முனையில் தமிழ் மன்னர்களுடைய ஓய்வுகால அரண்மனையை விட்டுக்கொடுத்தார். ஆணையம் முழுமையாக தந்திருந்தும் செங்கோட்டை தாலுகாவில் ¾ பாகத்தை விட்டுக்கொடுத்தார். கமிஷன் பரிந்துரைத்தபடி எங்களுக்கு வேண்டும் என்று நேசமணி பாராளுமன்றத்தில் வாதாடியும் பலன் இல்லாமல் போயிற்று. இதனால் சாணார்கணவாய், ஆரியங்காவு ஆகிய நீர் ஆதார இடங்களை தமிழகம் காமராசரால் இழந்தது.

                                    இளந்தோட்டம் கு. சுகுமாறன்     

இதை நாங்கள் சொல்லவில்லை…?

தமிழ் பகுதிகள் ஆற்று நீர் இழப்பு

    மாநிலங்களைச் சீரமைக்கும் பிரச்சினையை பரிசீலித்து அறிக்கை கொடுக்கும் பொருட்டு 1953 இல் இந்திய அரசு, பஸல் அலியைத் தலைவராகவும் ஹெச்.என். குன்ஸ்ருவையும் கே.எம். பணிக்கரையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில சீரமைப்புக் குழுவினை நியமித்தது. நாயரும் உறுதியான மலையாளி சார்பினையுடையவருமான கே. ஏம் பணிக்கர் அக்குழுவில் இருந்தது தமிழர் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது: ஆனால் அது பற்றி காமராஜர் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. அக்கமிஷன் மலையாளப்பகுதி முழுவதையும் சென்னை மாநிலத்திலிருந்து மாற்றுவதற்குப் பரிந்துரை செய்தது. ஆனால் திருவிதாங்கூர், கொச்சி அரசிலிஜருந்து ஒரு சில தமிழ் பகுதிகளைத்தான் மாற்றியது. மலபார் கேரளாவோடும் தென்திருவிதாங்கூர் தமிழ்நாட்டோடும் இணைக்கப்பட்ன. ஆனால் பெரும்பாலும் தமிழர்களே வாழ்ந்த நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு ஆகியவை இணைக்கப்படவில்லை.

    எழுபது சதவீதத்திற்கும் குறையாத மக்கள் ஒரு குறிப்பட்ட மொழி பேசினால் அப்பகுதி ஒரு மொழி சார்ந்த பிரதேசமாகும் என தார் குழு (னுயச ஊழஅஅளைளழைn) கருதியது. அதன்படிபார்த்தால் தேவிகுளம், பீர்மேடு தமிழ்ப் பகுதியாகும்; ஏனென்றால் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசினர். புவியியல் முறையிலும் அப்பிரதேசம் தமிழ்நாட்டின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆரம்பகாலக் குடிகளும் தமிழர்களே. 1800-1801 தென்னிந்தியப் புரட்சியின் போது நாட்டுப்பற்றாளர்கள் இந்த உயர் மலைத்தொடர் பகுதிகளை தங்கள் நடவடிக்கைளின் மையமாக் கொண்டனர். அத்துடன் தேவிகுளம், பீர்மேட்டு பகுதிகளில் உள்ள ஆறுகளும் காவிரியைப் போன்று பெரிதான பெரியாறு, பத்பா ஆறுகள், உயர்மலைத் தொடர்களில் உற்பத்தியாகி கோயம்பத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மழை குறைந்த மாவட்டங்களின் நீர்ப்பசன வசதிகளுக்கு மூல ஆதாரமாயிருந்தது.

    சீரமைப்பு குழு உண்மையைத் திரித்துக் கூறியதாலும், காமராஜ் அமைச்சரவை இழைத்த தவறினாலும், தமிழ்;நாட்டு மக்கள் அதன் இன்றியமையாத் தன்மையை உணரத் தவறியதாலும் தமிழ்நாடு இந்த முக்கியமான இடத்தை அர்ந்ததது. இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் குழு கூறிய வாதமாவது: “ஒரு குறிப்பட்ட மொழிப் பிரிவினர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்டத்தக்க பெரும்பான்மையினராக இருந்தல் ஒன்றே அது பற்றி இறுதி முடிவெடுக்கப் போதுமான காரணமாகக் கொள்ளக்கூடாது.” இத்தகைய அவமானங்கள் போதாதென்று இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் இடம் மாறுபவர்கள் என்றும், கேரள மக்கள் குடியேறுவதற்கும், ஆற்று நீர் தேக்கங்களுக்கும் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கு நெல்வயல்களின் பாதுகாப்பிற்கும் அப்பகுதி அவர்களுக்குத் தேவை என்றும் அறிவித்தது. இப்பெரும் ஆறுகளின் நீர் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளை விட கேரளாவில் நீர் நிறைந்த வயல்வெளிகளுக்குத்தான் தேவை எனநிலைநாட்ட முற்பட்டிருப்பது விந்தையாகும். நீர் பற்றாக்குறை மிகுந்த விருதுநகர் வாசியான காமராஜ் அப்பட்டமான அநீதி இழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்: தமிழர்களுக்கு உயர்மலைத் தொடர்கள் கிடைப்பதற்கு முயற்சி எடுக்காது மலபார் பகுதி முழுமையும் கேரளாவிற்கு கொடுக்க அமைதியாக சம்மதித்து விட்டார். இந்த சோக நிகழ்ச்சிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அறிவுக் கூர்மை மிகு கேரள முதலமைச்சர் கோவிந்த மேனனின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் இரையாகி, சீரமைப்புத் திட்டப்படி தமிழ்நாட்டடிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியான செங்கோட்டைத்தாலுகாவின் மேற்குப் பகுதியையும் பறிகொடுத்துவிட்டார். இது மற்றொரு முக்கிய ஆறான கல்லாடத்தின் உற்பத்தியிடமான அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். கேராளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி முனையின் சிகரத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். அது முக்கடல்களும் சந்திக்கும் காட்சியை எடுத்துக் காட்டும் மிகச் சிறப்பான இடம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    1954 பெப்ரவரி 24 இல் தென் திருவிதாங்கூரும் செங்கோட்டையின் ஒரு பகுதியும் தமிழ்நாட்டுடன் இணைக்ப்பட்டன. உயர் மலைத் தொடர்கள் ஆற்று நிலையங்களின் இழப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் கடையடைப்பு நடத்தி தங்கள் ஆட்சேபனையை வெளியிட்டனர். உண்மையில் காமராஜ் அமைச்சரவையின் தவறுகளால் தமிழர் நலன் காற்றில் பறக்கவிடப்பட்டது.

    தமிழ்நாட்டின் வட எல்லைப் பகுதியில் சில தமிழ்ப் பகுதிகள் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. ஐக்கிய தமிழ்நாட்டுக் கழகமும், தமிழ்நாட்டு வட எல்லைப் பாதுகாப்புக்குழுவும் இவ்விடங்களை மீண்டும் பெற ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. அதே சமயத்தில் ஆந்திர மாநிலமும் சில கிராமங்களைத் தமிழ்நாட்டிடமிருந்து கோரியது. நேரு அரசு இச்சிக்கலைத் தீர்க்க ஹெச்.வி.பதாஸ்கர் குழுவைப் பணித்தது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. திருத்தணி தாலுகாவின் பெரும்பகுதி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் அதற்கு சமமான பொன்னேரி, திருவள்ளுர் தாலுகாப் பகுதிகள் ஆந்திராவிற்குக் கொடுக்கப்பட்டன. இந்த பிராந்திய ஏற்பாடுகள் தமிழர்களுக்கு எந்தவித ஆதாயத்தையும் அளிக்கவில்லை. திருத்தணி கோவிலைப் பெற்றாலும் ஆரணியாறு நீர்ப்பாசனத்தை இழந்தனர்.

Kunjan Nadar pleaded with Kamaraj to take a strong stand on the issud of Devicolam and Permedu but the latter disissed his pleas remarkimng that it makes no difference whether some territory was with Kerala or Tamil Nadu. Sivagnana Gramini organized an agitation over this issue but it flittered asay (Interview with A. Nesamony dated 7-1-1957 and with Kunjan Nadar dated 14-7-1965.)

                     Dr. K. Rajayyan,

    Madurai University, 1978.

(Dr. D. Peter)

Chairman,

Kanyakumari Institute of Development Studies (KIDS),

266, Water Tank Road, Nagercoil-629001

Phone : +91 4652 279745

Mobile : +91 9043952430

Advertisements

பதிவர்: Marshal Nesamony Father of Kanyakumari District

Marshal Nesamony Father of Kanyakumari District

One thought on “குமரி மாவட்ட வரலாறு திருடர்கள் ? ஜாக்கிரதை !

  1. என்ன நாடார்களுக்குள்ள பிரிவினை உண்டாக்க பார்க்குறியா நானும் கண்ணியாகுமரிக்கரந்தான் எங்களுக்கு மார்ஷியல் நேசமணி அய்யாவும் ஒண்ணுதான் காமராசர் அய்யாவும் ஒண்ணுதான் யாருக்கு பெருமை சேர்த்தாலும் நாங்க ஏத்துப்போம். ஏன்னா நாங்க நாடார் . பிரிவினை நாடார் இல்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s