marshal nesamony

Father of Kanyakumari District

சிரித்து வாழ வில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழ்ந்து விடாதே! ……………………..

பின்னூட்டமொன்றை இடுக

சிரித்து வாழ வில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழ்ந்து விடாதே! ……………………..

ஒரு பிச்சைக்காரன் தன் தாத்தா யானை வைத்துக் கொள்ளும் அளவில் வசதி படைத்தவர் என்று சொல்லித் திரிந்தானாம். ஏன்? பிச்சை எடுக்கும் நிலைக்கு அவன் வந்து விட்ட வேதனை. நாடான் நாடாண்டான் நாடாண்டான் என உடன்பிறப்புகள் பிதற்றுகிறார்கள். ஏன்? நாம் நாடாளும் அளவில் இல்லை – ஆளப்படுகிறோம் என்ற வேதனையின் புலம்பல் தான். ஆகண்டபாரதத்தின் 56 தேசங்களையும் கடல் கடந்து 127 நாடுகளையும் ஆண்டவன் நாடான் என்று எதுகிறோம். ஏன்? நாடாளும் நிலைக்கு நாடான் வர வேண்டும் என்று ஒரு ஆதங்கம். மனு பெற்று வந்த இனம் மனு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாலும், கொடுத்த மனு கவனிக்கப்படும் நிலையிலாவது சக்திவாய்நதவர்களாக இல்லையே.?

                  தமிழகத்தை ஆளும் அளவில் சட்டசபையில் நாடார் பெரும்பான்மை இல்லையேயாயினும், இனபிரதி நிதித்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் 234-ல் 62 நாடார் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இன்று, 14 உறுப்பினர்களே உள்ளனர். அவர்களும் நாடார் நலன்நாடி இயங்க இயலாது. எனவே, நாம் ஆளப்படுகிறோம் – நம் குரல் அரசியல் வானில் இல்லை. நம் விடுதலை வாழ்வு ஒரு தொடர் போராட்டம் என்பதை ஏற்க ரெடியா?

    நாம் தொன்று தொட்டே இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறோம் – ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கோட்பாடை ஏற்றுக் கொண்டால், நாம் பெரும்பான்மையினராகவும் அவர்கள் சிறுபான்மையினராகவும் தான் இருக்க முடியும். சிறுபான்மையினரான ஆரியர்கள் பெரும்பான்மையினரான பூர்வ குடிகள் மத்தியில் வாழ தங்களை மேன்மையானவர்களாக சித்தரித்து பூஜிக்கப்பட வேண்டியவர்களாக்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். சதியை புரிந்து கொள்ள இயலாத மந்த புத்திக்காரர்களான பூர்வ குடிகள், ஆரியர்களை மேன்மையான இடத்தில் வைத்து, அவர்கள் கலாச்சாரத்தை ஏற்று, ஆரியர்களின் எடுபிடிகளாயினர். இது அறிவுத்தாழ்ச்சியால் பூர்வ குடிகளுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தும் வீழ்ச்சியும். பூர்வகுடிகள், ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் – இவர்கள் ஏமாற்ற முடியாமல் போனார்கள்.

            மனிதன் பல பொருளாதார நிலைகளைத் (Economic Stages) தாண்டி வந்து கொண்டிருக்கிறான். முற்காலத்தில் இயற்கையாக இலவசமாகக்கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் சேகரித்து புசித்து வாழ்ந்தான். இலவசமாகக் கிடைத்த மிருக மாமிசங்களையும் மீனையும் உண்டு வாழ்ந்தான். இதை சேகரித்தல் நிலை (Collection Stage) என்பர். இந்நிலையில் சேகரிப்பு வேலை மட்டுமே உண்டு. உற்பத்திச்செலவு (Cost of Production) அதனோடு தொடர்புடைய விலை (Price) பரிமாற்றத்தை வசதிப்படுத்துகின்ற பணம் (Money) ஆகியவை இல்லை. அடுத்தது மேய்த்தல் நிலை (Pastural Stage) மிருகங்களை மனிதன் பழக்கி அவைகளின் உணவுக்காக புல்வெளிகளையும் நீர்வசதிகளையும் தேடி ஓடிக்கொண்டிருந்தான். அடுத்தது விவசாய நிலை (Agricultural Stage) மனிதன் ஓரிடத்தில் அமர்ந்திருந்து விவசாயம் செய்தான். விளை நிலத்தை சொந்தமாக்கி நலவுடைமையாளன் ஆனான். உற்பத்திச் செலவு, விலை, பணம் முதலியவை உருவாயின. அடுத்த வணிக நிலை (Commercial Stage) –ல் இவை முக்கியத்துவம் பெற்றன.

                   விவசாய நிலையில் நிலவுடைமையாளர்கள் தலை காட்டத்துவங்கினர். உடல் வலிமையுடையவர்கள் உடல் வலிமையில்லாதவர்களை பயன்படுத்தி விஸ்தாரமான இடங்களை வளைத்துப் போட்டு விவசாயம் செய்து பொருளாதார வலிமையும் பெற்றனர். நில உடைமையாளர்கள் என்று ஒரு இனம் பூர்வகுடிகள் உருவானது. ஆரியர்கள் இங்கு கால் பதித்தும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு பூர்விக நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைகைப்பற்றி அவர்களை தங்கள் அடியாட்களாக வைத்துக் கொண்டனர். அவர்களே சத்திரியர்கள். நிலங்களை இழந்த சிலர் புதிய புதிய இடங்களுக்குக் குடிபெயர்ந்து முன்போல வலுவுற்றவர்கள் நிலவுடைமையாளர்களாகிக் கொண்டனர். இதைத்தான் ஆரிய மயமாதலும் அடிமைத்தனமும் என்று சொல்கிறோம். இது ஆதிகுடிகளின் அறிவுத்தாழ்ச்சியால் விளைந்த ஒரு விபத்தும் வீழ்ச்சியும்.

                இந்நிலையில் தான் 1600 –ல் ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் கால் பதிக்கிறது. அவர்கள் கொள்கை வியாபாரம் என்ற அளவோடு நின்றுவிட்டதால் இங்கு நிலவியிருந்த சமுதாயச் சீர்கேடுகளை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதனால் பகைமை இல்லாமல் வியாபாரம் செய்தனர். இவர்களுக்கு முன்னரே கத்தோலிக்கப்ப போதகர்மார் இங்கு கால்பதித்த அவர்களும் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டுகொள்ளாததால் பகைமையில்லாமல் தங்கள் காலங்களைக் கழித்தனர்.

                     18-ம் நூற்றாண்டின் துவக்கம் முதலே புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷனெரிகள் இங்கு கால் பதிக்கத் துவங்கினர். அவர்கள் இயேசுவை ‘மாடல்’ – ஆக ஏற்று சமுதாயத்தின் அடித்தள மக்களைத் தங்கள் திருப்பணித்தளமாகக் கொண்டனர் – விடுதலைப் பணியைச் செய்தனர். நிலவில் இருந்த கேடுவிளைவித்துக் கொண்டிருந்த சமுதாயப் பழக்க வழக்கங்களை உடைத்தெறியத் துவங்கினர். அதனால் ஆரிய கொள்கைகளில் அடிவிழுந்தது. ஆரியர்கள் பகைவர்களானார்கள். அவர்களோடு இணைந்திருந்த சத்திரியர்களைக் கொண்டே மிஷனெரிகளின் முயற்சிகளை முறியடிக்க முற்பட்டனர்.

                   தென்னகத்தில் திருப்பணியாற்ற வந்த புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷனெரிகளில் மிக முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் கால்ட்வெல் ஐயர் அவர்கள். பூர்வ குடிகளை மீட்க ஆரியத்துக்குச் சாவு மணி அடிக்கத்துணிந்து களம் இறங்கியவர் அவரே. பூர்வகுடிகளை அவர் திராவிடர் என விலாசப்படுத்தினார். ஆரியர்களின் சமஸ்கிருத மொழியும் அலக்கியங்களும் திராவிடர்களின் தமிழ் மொழிக்கும் இலக்கியங்களுக்கும் கீழானவை என தன் ஆய்வு மூலம் கால்ட்வெல் நிறுவினார். தமிழை செம்மொழி எனவும் அறிவித்தார். ஆரியர்கள் தங்கள் மேன்மையை நிலைநாட்ட திராவிடர் மனங்களில் கட்டி வைத்திருந்த கோபுரம் சாய்ந்தது. சாய்ந்த கோபுரத்தை வீழ்த்தி உடைத்துத் தரை மட்டமாக்கினார் தந்தை பெரியார். மொழி என்ற வடிவில் சமஸ்கிருதத்துக்குப்பிறந்த இந்தி தமிழகத்தில் நுழைந்துவிடா வண்ணம் காத்தவர் அண்ணாத்துரை.

              திருவிதாங்கூரில் அரசி கௌரி லட்சுமி பாயி-ன் ஆணையில் 1811-ல் ஆரியமயத்துக்குக்கல்லறை கட்டியவா ஆங்கிலேய அதிகாரி கர்னல் மன்றோ அவர்கள். மூன்றே மூன்றாண்டுகளில் ஆரிய மயத்துக்கு முடிவு கட்டினார். பூர்வ குடிகளுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுத்தார். அதை இன்றும் அந்த மக்கள் நினைவுகூருகிறார்கள். அவரைத் தொடர்ந்து அங்கு ஆரிய மயத்துக்குச் சாவு மணியடித்தவர் ஈழவ சழுதாயத்தின் தந்தை ஸ்ரீ நாராயண குரு அவர்கள். இதனால் ஆரியர்கள் மிஷனெரிகளில் காலட்வெல் மீதும் ஆங்கில அதிகாரிகளில் கர்னல் மன்றோ மீதும் இன்றும் காழ்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை தோள் சீலைக் கலகம் என்ற நூலில் காணலாம்.

              காலட்வெல் நெல்லையில் நாடார் இனத்தவர் இடையில் திருப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தன் கீழிருந்த மக்களை விழிப்படையச் செய்ய, நாடார்கள் மந்தபுத்திக்காரர்கள் என்றும், உயர் ஜாதிக்காரன் இவர்களை ஏமாற்றுகிறான் என்றும், இவர்களால் அவர்களை ஏமாற்ற முடியவில்லை என்றும் சொன்னார். உங்களை மந்தபுத்திக்காதரர்கள் என்று சொல்வதா – நீங்கள் நாடாண்டவர்கள் – சான்றோர்கள் எனச் சொல்லி கிறிஸ்தவம் தழுவாத நாடார்களை தீமூட்டி விட்டான். கிறிஸ்தவத்துக்குத் தாவியவர்கள் கீழ்மட்ட சாணார்கள் என்றும் தாவாதவர்கள் உயர்மட்டச்சாணார்கள் என்றும் மேல் மட்டச் சாணார்களை ஆரிய சாணார்கள் என்றும் அழைக்கலாம். அடிக்கடி இவ்விருவரும் போர்கோலம் பூண்டு விடுகின்றனர்.

     இப்போது அரசியல் கட்சிகளில் சிலவும், சில அமைப்புகளும் ஆரிய மயமாக்குவதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன. மீடியாக்களைப் பயன்படுத்தி, ஆரியத்துக்கு எதிராகப் போரிட்டவர்களைக் கெடுத்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாடார்களை பெலவீனப்படுத்த ஆரிய சாணார்களை திராவிடச்சாணார்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டு: தோள் சீலைக் கலகம் என்ற நூல் – மற்றும் ராமசந்திரனுக்கு ஆதரவாக கணேசன். சிரித்து வாழவில்லையானாலும் உடன்பிறப்பே! பிறர் சிரிக்க வாழாதே. உன் இனம் அரசு வேலைகளில் போதுமான அளவில் உண்டா? சட்டசபையில் போதுமான அளவு உண்டா? உன் ஆய்வை இந்த திசைக்குத் திருப்பு கண்ணா!.

விமர்ச்சனம் தொடரும்
(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745
Mobile : +91 9043952430

Advertisements

பதிவர்: Marshal Nesamony Father of Kanyakumari District

Marshal Nesamony Father of Kanyakumari District

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s