marshal nesamony

Father of Kanyakumari District

மறைக்கப்பட்ட வரலாறு

பின்னூட்டமொன்றை இடுக

தாங்கள் எழுதி வெளியிட்ட திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு என்ற நூலைப் படித்தேன். அதில், சுப்பிரமணியபிள்ளை (பி.எஸ்.மணி) கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரின் உறவினர் யோகீஸ்வரன் ஆகிய தாங்கள் நூல் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த நூல் பி.எஸ். மணி எழுதிய நூலின் மறுவடிவமே தவிர வேறு ஒன்றும் இல்லை. உறவு உறவோடு சேரும், சாதி சாதியோடு சேரும் என்பதற்கிணங்க உங்கள் சாதி வெறியும், உறவும் பற்றும் (பி.எஸ். மணிக்கும் தங்களுக்கும் உள்ள) இந்த நூலில் தெளிவாகத் தெரிகிறது. நான் இதற்கு விளக்கம் எழுதும் போது, சாதிப் போராட்டத்தைத் தூண்டி விடாத மற்ற சாதிகளை அடக்கி ஒடுக்க நினைக்காத, அனைத்துப் பிள்ளைமாரையும் நான் வணங்குகிறேன், மதிக்கிறேன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அறிஞர் சிதம்பரம்பிள்ளை, திரு. சிவதாணுபிள்ளை, எம்.எல்.ஏ., திரு. சுப்பிரமணியபிள்ளை, திரு. நாராயணபிள்ளை, திரு. சிவன்பிள்ளை, தளபதி காந்திராமன் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களை நான் என்றுமே மதிக்கிறேன். வணங்குகிறேன். வரலாறு என்பது கதையோ, கற்பனையோ அல்ல. நடந்த சம்பவமே வரலாறு என்று மு.ஆ. அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. திருவிதாங்கூர் போராட்டம் என்பது நம்பூதிரிமார்களிடமிருந்தும், நாயர்களிடமிருந்தும், நாஞ்சில்நாட்டுப் பிள்ளைமார்களிடமிருந்தும் விடுதலைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமே திருவிதாங்கூர்- தமிழர் விடுதலைப் போராட்டம். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் தமிழர்களுக்குச் செய்த கொடுமையைக் கண்ட கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள்கூட “நஞ்சினும் கொடியோன்” நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்று கூறினார். அன்று நம்பூதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் கருவிகளாக நாயரும், வெள்ளாளரும் செயல்பட்டனர். இச்செயல் பாடுகளினால் தமிழ்மொழியுடன் சமஸ்கிருதம் கலந்து மலையாள மொழி உருவாயிற்று. தமிழரசர்கள் கொல்லப்பட்டு அல்லது அவர்களை வனவாசம் போகவைத்து மலையாளிகள் ஆட்சி பீடம் ஏறினர். இளவரசர்கள் களிப்பான்குளத்தில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்கள் விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டனர். மன்னர்கள் பலர் நஞ்டே;டிக் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வகையான கொடுமைகளி லிருந்து விடுதலையடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டமே திருவிதாங்கூர் தமிழர் போராட்டம். உங்கள் இன முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் செய்த கொடுமைகளைச் சொல்ல முடியாது.
தாழக்குடி என்ற ஊரில் மாடத்தி என்ற பெண்மணியை ஏரில் மாட்டுடன் பூட்டி உழுது கொன்றுவிட்டார்கள். உங்கள் முன்னோர் நாடார், சாம்பவர், பறையர், மீனவர் மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களின் வீடுகளை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். இராஜாக்கமங்கலத்தில் வீட்டோடு வைத்து எரித்துக் கொன்ற ஏழை நாடார் குடும்ப நிகழ்வுகள் சாட்சி சொல்லும். எந்த அரசு வந்தாலும் அந்த அரசுக்குச் சாதகமாக நடந்து மற்றவர்களைக் காட்டிக்கொடுத்து உங்கள் பதவிகளைத் தக்க வைப்பீர்கள்.
அரசர் ஆண்டால் அரசர் பக்கம், காங்கிரஸ் ஆண்டால் காங்கிரஸ் பக்கம், தி.மு.க. ஆண்டால் தி.மு.க. பக்கம், அ.தி.மு.க. ஆண்டால் அதன் பக்கம், இந்து முன்னணி ஆண்டால் அதன் பக்கம், இப்படி ஆளும் பக்கத்தில் நின்று செழித்து வாழ்கிறீர்கள். கோவில் தெற்குத் தெரு முதல் சினிமா வரை நீங்கள்தாம். தமிழ் தேசியத்திலும் நீங்கள்தாம். இந்தியத் தேசியத்திலும் நீங்கள்தாம். இவ்வாறு பலமுகங்காட்டும் மந்திர வித்தை உங்களைத் தவிர இந்த உலகில் வேறு யாருக்கும் தெரியாது.

இப்போது கூடக் கேரளம் சென்றால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் “நாம் ஒரே இனம்” என்றும் தமிழகம் வந்தால் “தமிழர்கள் நாம்” என்றும், நடத்தும் பித்தலாட்டம் நாடகம் உலகில் நாஞ்சில்நாட்டுப் பிள்ளைமார்கள் தவிர வேறு எவருக்கும் கைவராது. திருவிதாங்கூர் போராளிகள் நாங்கள்தாம் என்றும் கூறுகிறீர்கள். நீங்;கள் அதிகம் வாழக்கூடிய தோவாளைத் தொகுதியில் என்றைக்காவது ஒருநாள் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதுண்டா? ஆனால் அதற்கு மாறாகத் தமிழரை அழித்த பட்டம் தாணுபிள்ளை வேட்பாளரே என்றும் வெற்றிபெற்றுள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தில்கூடக் கேள்வி கேட்கப்பட்டது. பாருங்கள் உங்களுடைய தமிழ்ப் பற்றும் திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தின்பால் உள்ள பற்றும் இந்த நிகழ்வின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். பேரா. யோகீஸ்வரன் பிள்ளை அவர்களே, நீங்கள் தமிழர்களின் போராட்டக் காலத்தில் திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரசிலிருந்து ராஜினாமா செய்த திரு. பி.எஸ்.மணி அவர்களைப் புகழ்ந்து எழுதுகிறீர்கள். திரு. பி.எஸ். மணி அவர்கள் எப்போதாவது திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்கிரசில் நிரந்தர உறுப்பினராக இருந்ததுண்டா? சாதிப் பற்றால் எதையும் வரலாறாக எழுத முடியுமா? திருவிதாங்;கூர் போராட்ட வழக்கில் இவர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர் சிறைக்குச் செல்லவில்லை. இவர் தொடுத்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற நூல் வழக்கில் சிறைச்சான்றிதழைக் காட்டலாம் என்று கூறியவர் முடிவில் சிறைச்சான்றிதழைக் காட்ட அவரால் முடியவில்லை. எப்படி இவர்களெல்லாம் தியாகியானார்கள் என்பதைப் பின்னால் எழுதுகிறோம். உங்கள் நூலிற்குப் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் எந்த மனதுடன் “நடுநிலை நூல்” என்று எழுதினார் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர் ஏமாற்றப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது.

தாங்கள் எழுதிய நூல் எங்களுக்கு வியப்பைத் தரவில்லை. நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பி.எஸ். மணியின் 70 ஆவது பிறந்தநாள் விழா மலரில், தியாக வேள்வியில் தங்;களை ஒப்புக்கொடுத்த எங்;கள் தலைவர்களைப் பற்றி; நீங்;கள் எழுதும்போது எம்.எல்.ஏ.க்களை எம்.பி.க்களை மிக மட்டமாக எழுதியிருக்கிறீர். ஆகையால் நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். பி.எஸ். மணியின் வேண்டுதலுக்காக வரலாறு எழுதியிருக்கிறீர். அரசு உங்கள் கையில். அதிகாரிகள் உங்கள் கையில். நீங்கள் எதுவும் எழுதலாம். ஆனால், உண்மைகள் ஓர் நாளில் ஓங்காரம் செய்யும். அது உங்கள் காதில் நின்று ரீங்காரம் செய்யும். தமிழனையும் தமிழையும் ஏமாற்றாதீர்கள். குமரித் தந்தை மார்சல் நேசமணி மற்றும் அவருடன் பல்வேறு நோக்கங்களோடு இணைந்து வஞ்சகமாகச் செயல்புரிந்தவர்களின் தோல்களை உரித்துக்காட்டிய ஜனாப் அப்துல் ரசாக் எழுதிய “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற நூலை முழுமையாக படித்த பிறகு பழ. நெடுமாறன் அணிந்துரை
தந்திருப்பாரேயானால் அவர் ஓரளவுக்காவது நடுநிலைப்பாட்டை கடைப்பிடித் திருப்பார். ஆனால் அவர் செய்தது ஒரு தலைப்பட்சக் காதல்.

அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்:-

நாஞ்சில் நாட்டு மத்திய வாலிபர் சங்கம் என்பது வெள்ளாளர் சாதி
கோட்பாடு கொண்ட ஒரு கூட்டம். சாதி வெறிப்பிடித்த ஒரு அரக்கக் கூட்டம்.
பிடாகைக் கூடும்போது, சுசீந்திரத்தில் யார், யாரை தண்டிக்கலாம் என்று ஆள்
தேடிக் கொண்டிருக்கும் ஒரு கும்பல். அந்தக் கும்பலிலிருந்து உருவான சங்கம்
மத்திய வாலிபர் சங்கம். இந்தச் சங்கம்தான் பிறிதொரு நாளில் நாஞ்சில்
தமிழர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. மாபெரும் தமிழறிஞர் திரு.
சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆலோசனையோடு திரு. நதானியேல்
தலைமையில், தியாகி காந்திராமன் முன்னிலையில் அகில திருவிதாங்கூர்
தமிழர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. “டம்ளர் டம்ளர் பார்ட்டி” என்று
மற்றவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் “அகிலத் திருவிதாங்கூர் தமிழன்
காங்கிரஸ்” எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்தப் பெயர் நதானியேல் எழுதிய
கடிதங்கள் பல நூற்களில் வந்துள்ளன. இது ஒரு அரசியல் இயக்கம் அல்ல.
மருத்துவாழ் மலையில் 6.7.1947 அன்று கூடிய கூட்டத்தில் திவான் சர்.
சி.பி. இராமசாமி ஐயரின் கோட்பாட்டை ஆதரிப்பதா? வேண்டாமா? என்ற
கருத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு உடைந்து சிதறியது இந்த இயக்கம்.
இதன் தலைவர் நதானியேல் சோசியலிஸ்ட் பார்ட்டியில் சேர்ந்து தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடச் சென்றார். இதன் செயலாளர் வேலாயுதம் பிள்ளை ஆசிரியர் பணிக்குச் சென்றார். இதன் பொறுப்பாளர்களில் பலர் ஸ்டேட் காங்கிரசில் (மலையாளி காங்கிரஸ்) இணைந்தனர் . சில பொறுப்பாளர்கள் தமிழரசுக் கழகத்தில் இணைந்தனர். திரு. பி.எஸ். மணியும் தமிழரசுக் கழகத்தில் 21.07.1947 அன்று சேர்ந்தார். அகில திருவிதாங்கூர் தமிழன் காங்கிரஸ் மருத்துவாழ் மலை நிகழ்ச்சிக்குப் பிறகு
செயல்பட்டது என்று எந்த வரலாற்றுத் திருடனும் கூறமாட்டான். ஆனால்,
யோகீஸ்வரன் பிள்ளை ஆகிய நீங்கள், உங்கள் உறவினர் பி.எஸ். மணிக்கு
வேண்டிக் கற்பனையாகப் பி.எஸ். மணி எழுதியதையே மேற்கோளாகக்
காட்டி வரலாறு எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதலாம். உயர்சாதிக்காரர்கள்
எங்கும் பேசலாம், யாரும் தடை செய்யமாட்டார்கள்.
ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், மூதறிஞர் இராஜாஜி, ராம்
மனோகர் லோகியா, கிருபாலனி போன்ற தலைவர்களோடு சரியாசனத்தில்
இருந்து பேசும் எங்கள் இதயமெல்லாம் குடிகொண்ட ஜனாப் அப்துல் ரசாக்கின்
எழுத்தைக் கிண்டல் செய்திருக்கிறீர்கள். உங்கள் உறவினர் பி.எஸ். மணி
பிள்ளையும் நீதிமன்றம் வழியாக அவர்எழுதிய “நேசமணி ஒரு சரித்திரத்
திருப்பம்” நூலைத் தடைசெய்திட முயன்றார். நீதி நிலைத்தது. மணியின்
வழக்குத் தள்ளுபடியானது.
06.07.1947 மருத்துவாழ் மலைக் கூட்டத்திற்குப் பின்னால்,
கட்சி உடைந்து போன பிறகு, தலைவர்கள், செயலாளர்கள் கட்சியைவிட்டுச்
சென்ற பின்னால் பி.எஸ். மணி 21.07.1947 இல் சுமார் 15 நாட்க்களுக்குள்
தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே அவருக்குப் பதவிகள்
கொடுக்கப்பட்டன. அதன் பிறகுப் பல இயக்கங்களில் இவர் தலையைக்
காட்டியுள்ளார். ஆனால் தமிழரசுக் கழக வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குமரிப்
பகுதியில் ஈடுபட்டார். பல இயக்கங்களில் உறுப்பினராக இருந்தார். இவற்றை
உங்களால் மறுக்க முடியுமா. பொய்யை வரலாறாக எழுதாதீர்கள். இந்தியத்
தலைவர்களில் ஒருவரான அப்துல் ரசாக்கையா நீங்கள் கிண்டல்
செய்கிறீர்கள்? உங்களால் தியாகி என்று சாதி மோகத்தால் வர்ணனை
செய்யப்படுகின்ற பி.எஸ். மணி திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தில்
எங்கிருந்தார் என்பதை நீங்கள் படித்து மகிழுங்கள். இதையும் மறைக்க
முடியுமா என்று பாருங்கள். இவர் பல சங்கங்களின் உறுப்பினர்
பி.எஸ். மணியின் உறவினர்களான சில பேராசிரியர்கள் அவர் இறுதி
வரை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் இருந்தார் என்று வரலாறு
எழுதுகிறார்கள். இது உண்மையல்ல.

1) 1938 ஆம் ஆண்டில் சமஸ்தான காங்கிரசின் உறுப்பினராகச் சேர்ந்தார்
(மணி 70 சிறப்பு மலர், 1987, ப. 6).
2) திரு. சோமையாஜுலு 1943 இல் நெல்லையில் தொடங்;கப்பட்ட
காங்கிரஸ் சங்கத்தில் தொடக்ககால உறுப்பினர்களில் இவரும்
ஒருவர். (சிறப்பு மலர், ப. 1)
3) 1943 இல் நாஞ்சில் நாட்டு வாலிபர் மத்திய சங்கம் என்ற அமைப்பில்
3 நபர்களில் பி.எஸ். மணியும் ஒருவர். 1943 ஆம் வருடம் பி.எஸ். மணி
4 அணா கொடுத்துக் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். (மணி 70
நிறைவு சிறப்பு மலர், 1987).
4) நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் அமைப்பாளர்களில் ஒருவர் (மேலது,
ப. 9).
5) நதானியேல் தலைமையில் உருவான (1945 டிசம்பர் 16 ) அகில
திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சியில் ஒருவர். (மேலது)
6) அகிலத் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசை, அகிலத் திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்தபோது அதிலும்
உறுப்பினர். (நதானியேல் கடிதம், 11 மார்ச் 1946).
7) மருத்துவாழ் மலைக்கூட்டம் 06.07.1947 (திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ் கலைக்கப்பட்டது). அதன் செயலாளர்
வேலாயுதம் ஆசிரியர் பணிக்குச் சென்றார். அதன் தலைவர்
நதானியேல் சோசியலிச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டு தொழிலாளர் நலனுக்காகப் பாடுபடச் சென்றார்.
பொறுப்பாளர்களில் ஒருவரான பி.எஸ். மணி சில
நாட்களுக்குள் சுதந்திர திருவிதாங்கூர் இயக்கத்திலும் அதன்
பின் தமிழரசுக் கழகத்திலும் தன்னை இணைத்துக்
கொண்ட்டார்.;.;. (நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்,மணி 70 சிறப்பு மலர்)
8) 1947 இல் திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர், சுதந்திர திருவிதாங்கூர்
என்ற இயக்கத்தை உருவாக்கிய போது 19.01.1947 இல் திரு. பி.எஸ்.
மணி அதில் கலந்து கொண்டார் (மணி 7,0 நினைவு சிறப்பு மலர்,
ப. 125).
9) 1947 ஜூலை 21 இல் தமிழரசுக் கழகத்தில் திரு. பி.எஸ். மணி குமரி
மாவட்டக் கன்வீனர். தமிழரசுக் கழகத்தின் தொடக்கக் காலத்தில்
உறுப்பினராகச் சேர்ந்தார். (மேலது). (அதாவது மருத்துவாள்
மலை கூட்டம் முடிந்த 15 நாட்களுக்குள்)

10) 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் நாள் ஆலன் மண்டபத்தில்
நேசமணியின் தலைமையில் கூடிய அரசியல் இயக்கக் கூட்டத்தில்,
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை ஆரம்பித்த போது, இதுதான்
தமிழரின் ஒரே ஸ்தாபனம் என்று வருணனை செய்தவர். ஞஅன்றைய
பெரும் தலைவர்களில் ஒருவரான _. எ. நேசமணி தலைமை தாங்க
_. எம். சிவதாணுபிள்ளை வரவேற்க பி. சிதம்பரம்பிள்ளை
பிரசங்கிக்கத் தமிழர்களின் ஒரே ஸ்தாபனம் தி.த.நா.கா. என்று
ஆரவாரத்துடன் தீர்மானிக்கப்பட்டது.ஞ என்று பி.எஸ். மணி வர்ணனை
செய்துள்ளார். (1954 ஆகஸ்ட் 15, தினமலர்)
11) 1947 நவம்பர் 9 இல் தமிழரசுக் கழக முதல் மாநாடு ம.பொ.சி.
தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 300
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திரு. பி.எஸ். மணியும் அதில்
கலந்து கொண்டார்.
12) 1950 செப்டம்பரில் வட ஆற்காட்டில் திருப்பத்தூரில் தமிழரசுக் கழக
மாநாடு நடைபெற்றது. திரு. பி.எஸ். மணி அதில் கலந்து கொண்டார்.
13) குடம் சின்னத்தை உடைய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு
எதிராக 1951 இல் போட்டித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற
கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியின் செயலாளார் பி.எஸ். மணி
ஆவார் (மணி 70 சிறப்பு மலர், ப. 127).
14) 1951 இல் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியில் உறுப்பினர் ஆனார். இதன்
சார்பாகச் சட்டசபைக்கும் போட்டியிட்டு டெப்பாசிட் இழந்தார். அங்கும்
கருத்து வேறுபாடால் வெளியே வந்தார்.
15) 1951 ஜனுவரி 14 ஆம் தேதி அன்று சென்னைச் சிந்தாதிரிப்பேட்டையில்
தமிழர் திருவிழா நடைபெற்றது. திரு. பி.எஸ். மணி அதில் கலந்து
கொண்டார்.
16) 1954 ஜுன் மாதத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழரசுக் கழக
2 நாள் மாநாட்டில் திரு. பி.எஸ். மணி முக்கிய பங்காற்றினார்.
17) 1954 ஆகஸ்ட் 14 இல் திருச்சி மாநிலத் தமிழரசுக் கழகப்
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதிலும் பி.எஸ். மணி கலந்து
கொண்டார்.
18) 1964 இல் காங்கிரஸ் உறுப்பினராக அன்றைய முதல்வர் காமராசரின்
முன்னிலையில் சேர்ந்தார் (மணி 70 சிறப்பு மலர், ப. 24).

19) திரு. பி.எஸ். மணி வெள்ளாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
(மணி 70 சிறப்பு மலர், ப. 213).
20) திரு. பி.எஸ். மணி, இந்து முன்னணி மாநாட்டில் தலைமை தாங்கினார்
(மணி 70 சிறப்பு மலர், ப. 20).
21) தி.மு.க. விலும் திரு. பி.எஸ். மணி (மணி 70 சிறப்பு மலர், ப. 245)
தோழர்களே ழூ சிந்தித்துப் பாருங்கள். இவர் எங்கிருந்தார் என்று.
தமிழரசுக் கழகத்தில் கலந்து கொண்டது தவறு என்று யாரும்
கூறமாட்டார்கள். ஏனென்றால், வட எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. யின்
பங்கு மகத்தானது.

 

நேசமணி தலைமையில் நடந்த விடுதலைப்

தோழர்களே ழூ சிந்தித்துப் பாருங்கள். இவர் எங்கிருந்தார் என்று.
தமிழரசுக் கழகத்தில் கலந்து கொண்டது தவறு என்று யாரும்
கூறமாட்டார்கள். ஏனென்றால், வட எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. யின்
பங்;கு மகத்தானது. நேசமணி தலைமையில் நடந்த விடுதலைப்
போராட்டத்தில் சொற்பொழிவு ஆற்றி இங்குள்ள போராளிகளுக்கு ஊக்கம்
தந்துள்ளார் ம.பொ.சி. ஆனால், திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரஸ்
போராட்டத்தில் பங்குபெற்றேன் என்று கூறிய பி.எஸ். மணி எங்குப் பங்கு
பெற்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நேசமணியும்
ஜுனியர் வழக்கறிஞர்களும் எழுதிய சட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரஸ் உறுப்பினர்கள் வேறு இயக்கங்களில் இருக்கக் கூடாது என்று
கட்சியின் சட்டம் கூறுகிறது. ஆனால் இவர் எங்கு உறுப்பினராய் இருந்தார்
என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

காண்டிராக்ட் வேலையில் பி.எஸ். மணி (1956 வரை காண்டிராக்ட்
வேலையில் ஈடுபட்டார்)
திருவிதாங்கூர் போராட்டத்திற்காகத் தன்னுடைய காண்டிராக்ட்
வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு வந்ததாகக் கூறுகிறார். ஆனால்,
மதிப்புமிகு காந்திராமன் அவர்களுக்கு 18.3.1956 ல் எழுதிய கடிதத்தில்
“உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நான் தினம், தினம் எண்ணுகிறேன்.
ஆனால் முடிவதில்லை. சில காண்டிராக்ட் வேலைகளில் மாட்டிக்கொண்டதே
காரணம்” என்று கடிதம் எழுதுகிறார். இதிலிருந்து அவர் 1956 வரை
காண்டிராக்ட் வேலைகளைச் செய்து வந்திருக்கிறார் என்பது தெளிவு.
ஆனால், தான் அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டதாக அவரும்
எழுதுகிறார். அவருக்கு வேண்டியவர்களும் எழுதுகிறார்கள். அவர்
முதலிலிருந்து கடைசிவரை திருவிதாங்;கூர் தமிழ்நாடு காங்;கிரசில்
இருந்ததாக எழுதுகிறார்கள். ஆனால், அவர் கடைசி வரை திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசில் இருக்கவில்லை. அவர் 15.03.1956 போராட்டத்தின்
உச்சக் காலக்கட்டத்தில் பி.எஸ். மணி திருவிதாங்;கூர் தமிழ்நாடு
காங்கிரசிலிருநது; இராஜினாமா செயது; விடடு; வெளியேறினாh.; மடடு; மலல் hமல்
தன்னுடைய பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பல தோழர்களுக்குக் கடிதம்
எழுதி விலகச் செய்தார். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய காந்திராமன்
அவர்களுக்கும் கடிதம் எழுதினார். கொண்ட கொள்கையை வெற்றிபெறச்

செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்த காந்திராமன் அவர்கள் இவருடைய
வேலைப் பாடுகளுக்குப் செவிசாய்க்க வில்லை.
இவ்வாறு பி.எஸ். மணி பல அரசியல் கட்சியில் உறுப்பினர். இதனை
ரசாக் எம்.பி. தன்னுடைய நூலிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூல் பெயர் – தியாக தீபங்கள், ஆசிரியர் ஆத்திவிளை தியாகி ஆ.
சிங்காராயர், வெளியிட்டோர் – ஆறுமுக ராகேல் பதிப்பகம், நெய்யூர், நாள்
25.12.2000. போராட்டத்தில் எந்தப் பங்கும் பெறாதவர்களான நாஞ்சில் நாட்டுப்
பிள்ளைகள் பலர் ஜெயில் அத்தாட்சி இல்லாமல் நூற்றுக்கும்
அதிகமானவர்கள் அரசிடமிருந்து பென்சன் வாங்குவதில் முந்திக் கொண்டனர்.
இதில் சிறப்பு என்னவெனில், போராட்ட வேளையில் வெறும் 5 வயதான ஒரு
பிள்ளைக்கும் தியாகிகள் ஊதியம் கிடைத்ததுதான் வேடிக்கை.
தியாகி ஆ. சிங்காராயரின் கண்ணீர் கடிதம்

“எனது கண்ணீர் வாழ்க்கையில் இதுவும் ஒன்று. இந்து மத பக்தரான
கு. ஆறுமுகம் நாடார் அவர்களுக்கும் கிறிஸ்தவ பக்தரான ஞா. ராகேல்
அம்மை அவர்களுக்கும் ஐந்தாவது மகனாக நான் நெய்யூர் ஆத்தி விளையில்
20.08.1921 ஆம் ஆண்டு பிறந்தேன். எனது அரசியல் பொது வாழ்க்கையில்
இந்திய நாட்டின் விடுதலைக்கு மதுரையில் 15.08.1942 இல் சிறை சென்று
விடுதலை பெற்றாலும் குமரி மாவட்ட விடுதலைக்கு 09.08.1954 இ;ல் சிறை
சென்று 13.08.1954 இல் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடிபட்டுச்
சித்திரவதைக்கு உள்ளாகிப் பல்லுமிழந்து விடுதலைப் பெற்ற போதிலும்
07.09.1958 இல் தியாகிகள் வாழ்வின் நலனுக்காகக் குமரி மாவட்ட விடுதலைத்
தியாகிகள் சங்;கம் அமைத்த நாள் முதல் 42 வருடங்;களாக எனக்கு
ஏற்பட்டுள்ள சோதனைகள் வேதனைகள் பழிச்சொற்கள், இழிச்சொற்கள்,
புறங்கூறல், பரிகாசங்கள், கவலை, கண்ணீர், பசி, பட்டினி, கவலையின்
மிகுதியால் ஏற்பட்ட நோய்கள் மட்டுமா, மாத உதவி கிடைக்க நாட்கள்
சென்றதால் சில நன்றிகெட்ட தியாகிகள் என்னைப்படுத்திய கொடுமைகளும்
வேறுசிலர் என்னைக் கேவலமாகப் பேசியதும், பேசிவிட்டுச் சட்டையையும்
கிழித்துக் குடையும் முறித்துக் கீழே தள்ளிபோட்டதையும் நினைத்துப்
பார்க்கும் போது போராட்டத் தலைவர்களான மார்சல் நேசமணி,
குஞ்சன்நாடார், சிதம்பரநாதன் நாடார் போன்றவர்களை நினைத்துக்கூடப்
பார்க்காத தியாக தீபங்களை 1958 ல் நினைத்துப் பார்க்க வைத்த கடவுளிடம்
நான்தான் என் வேதனைகளைச் சொல்லிக் கண்ணீர் வடித்தேன். கடந்த 42
வருடங்களுக்குள் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் 3 தடவையாக
300 க்கு அதிகமான திஜயாகிகளும், விதவைகளுமாக (தியாகிகளின்
மனைவிமார்) மாத ஓய்வூதியம் 3015 ரூபாயும் விதவைகள் 1515 ரூபாயும்
வாங்கி வருவதில் ஏழை விதவைகளைத் தவிர மற்றவர்கள் என்னை மறந்து
விட்டார்கள்.”
கலைஞர் கொடுத்த தியாகிகள் பென்சன், கலைஞர் ஆட்சி
கலைக்கப்பட்டவுடன் தமிழினத் துரோகிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தியாகிகள் பென்சன் பட்டபாட்டை நாம் பார்ப்போம். இன்று தமிழ்த்தேசம் என்று

சொல்லிக் கொண்டு சாதி தேசம் பேசும் அரசியல்வாதிகள் பி.எஸ். மணி
(சுப்பிரமணிய பிள்ளை) அவர்களின் சொற்கேட்டு வரலாறு எழுதிய அவரது
உறவினர் பேராசிரியர் யோகீஸ்வரர், இவரைப் போன்ற பேராசிரியர்கள்
வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்கள் என்பதை முந்தைய கட்டுரையில் நாம்
கண்டோம். பி.எஸ். மணி, ஆர்.கே. ராம் ஆகியோர்கள் அகில திருவிதாங்கூர்
தமிழன் காங்கிரஸ், மருத்துவாழ் மலையில் வைத்து உடைபட்டபோது மணி
தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம்
வகித்தார். இடையிடையே நேசமணியால் உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசில் தலையைக் காட்டினார். நேசமணிக்கு, ‘அன்ப்புளஜள்ள்ள
லீடர்’; என்று கடிதம் எழுதினார். குமரித் தந்தை என்று பெயர் டே;டினார். ஜீவா,
நேசமணி போக்குவரத்துக் கழக போராட்டத்திற்குப் பின்னால் அகண்ட
தமிழகத்திற்கு வித்திட்ட நேசமணியைத் தமிழை மறந்தவன் தாயை
மறந்தவன், வீட்டுக்கொரு தமிழன் நாட்டைக்காக்கப் புறப்படுக, என்று
சங்கநாதம் முழங்கிய நேசமணியை, பல கட்சிக்குத் தாவியவர்கள் நாய்
என்றும், அவர் வரலாற்றைச் சாக்கடை என்றும் வரலாறு எழுதியுள்ளனர்.
அப்படிப்பட்டவரை இனப் பற்றின் காரணமாகப் பி.எஸ் மணி 70 ஆவது
ஆண்டுவிழாவில் எழுதிய கட்டுரையைப் புத்கமாக எழுதியுள்ள திரு.
யோகீஸ்வாரன், புகழ்ந்து எழுதட்டும் கவலையில்லை. தமிழ்த் தேசியவாதிகள்
ஏன் புகழந்து எழுதுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இங்கேதான்,
தமிழ்த் தேசியம் பேசுவோர் சாதி தேசியத்திற்குள்ளும் அடைபட்டுக்
கிடக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர்களுக்கு இரு முகம். ஒரு முகம்
தமிழ்த் தேசியம், மறு முகம் சாதி தேசியம். இவர்களால் எப்படித் தமிழ்த்
தேசியத்தைப் பெற்றெடுக்க முடியும். ஆகையால்தான், மு.ஆ. அவர்கள்
தமிழ்த் தேசியம் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுப் பிறக்க வேண்டுமானால்
சங்ககாலத்தில் உயர்நிலையிலிருந்து பிற்காலத்தில் தாழ்ந்த நிலைக்கு
ஆரிய இனத்தால் தாழ்த்தப்பட்ட பள்ளர், பறையர் இனத்தைச் சார்ந்த ஒரு
உண்மையான தியாகி தலைமை தாங்க வேண்டும் என்கிறார்.
திருவிதாங்கூர் போராட்டத்தில் இறந்துபோன தியாகிகளுக்கும்
சிறைசென்ற தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மதிப்பு அளிக்க
வேண்டும் என்று எண்ணிப் போராடுவதற்காகத் தியாகிகள் சங்கத்தைத்
தோற்றுவித்தார் தியாகி ஆ. சிங்காராயர். கலைஞர் கருணையுடன்
தியாகிகளைப் பாராட்டி ஓய்வூதியம் கொடுத்தார். ;சிறைச்சான்றிதழ் பெற்ற
தியாகிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் இருந்தது. தியாகம் செய்யாத போலித்
தியாகிகள் தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில்
அரசு அ;திகாரிகளைப் பிடித்துக் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டவுடன்
ஓய்வுதியத்தை நிறுத்தினர்.

அதன்பின் நடந்த கொடுமையைப் பாருங்கள். நீங்கள் கல்லூரி
அல்லது பல்கலைக்கழகத்தில் படித்து வெற்றி பெற்றால்தான் பி.எ. அல்லது
எம்.எ. பட்டம் கிடைக்கும் 2 பி.ஏ. படித்தவர்கள் என்னுடன் இவர் பி.ஏ. படித்தார்
என்று எழுதித்தந்தால் பி.ஏ. பட்டம் கிடைக்காது. இதுபோன்று எம்.ஏ. யும்
முறையாகப் படித்தால்தான் பட்டம் கிடைக்கும். 2 எம்.ஏ. படித்தவர்கள் இவர்கள்
என்னுடன் எம்.ஏ. படித்தார் என்று கூறினால், எம்.ஏ. பட்டம் கிடைக்காது.
அதைத் தயாரித்து யாராது வேலைக்குச் சென்றால், சிறைச்சாலை கதவு
திறந்து “வா மகனே வா” என்று வரவேற்கும். ஆனால் இங்கே பாருங்கள், 2
எம்.எல்.ஏ. க்கள் அல்லது 2 தியாகிகள் என்னுடன் சிறையில் இருந்தார் என்று
எழுதிக்கொடுத்தால் உடனே அவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டார்கள். பி.எஸ்.
மணி அவர்களின் 70 ஆவது பிறந்த நாளில் வரலாற்றில் நிகழாத ஒரு
கொடுமை தமிழகத்தில் நடந்தது. இதற்கு வழியாட்டியாக இருந்தவர்கள்
திரு. ம.பொ.சி., திரு. அவ்வை நடராசன், திரு. சிலம்பொலி செல்லப்பன், பி.எஸ்.
மணியின் பிறந்த நாள் விழாவில் 1000 ரூபாய் கொடுத்தவரெல்லாம்
தியாகிகள். அதுவும் ஒரு குறிப்பிட்ட சிலரிடமிருந்து பிரிக்கப்பட்டது. அந்த
வேதனையைச் சிங்காராயரின் வாயாலேயே கேட்போம்.
படியுங்கள் 85 வயதான தியாகி ஆ. சிங்காராயர் (29.08.2005 திங்கள்
ஆத்திவிளை-நெய்யூர் – 629 802). நாட்டுப்பற்றும் தாய்மொழித் தமிழ்ப்பற்றும்
பாசமும் தன்னைப் போல் பிறரும் வாழ்ந்து வளம் பெற வேண்டும் என்று
நினைத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் தன்மானத் தமிழர்களுக்கு
“இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகியும், கன்னியாகுமரி மாவட்ட
விடுதலைப் போராட்டத் தியாகியும், குமரி மாவட்ட விடுதலைத் தியாகிகள்
தலைமைச் சங்கத் தலைவருமான தியாகி ஆ. சிங்காராயராகிய எனக்கு
இன்று (29.08.2005) 85 வயது பிறந்த நாள். இந்த நன்னாளில் என்னுடன் நின்று
சங்க வளர்ச்சிக்கு 07.09.1958 லிருந்து இரவு பகலாகப் பாடுபட்டு வந்த 45
தியாகச் செம்மல்களுக்கு ஒரு சாதி வெறியனின் சூழ்ச்சியின் கொடுமையினால்
மாத ஓய்வூதியம் கிடைக்காமலே கண்ணீரோடு இறந்து போன துயரச்
செய்திதான் எனது பிறந்த நாள் செய்தியாகும்.”

அன்புடையீர்,
“கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய நடந்தப்
போராட்டத்தின் போது நான் 09.08.1954 ல் (என்னுடன் மூன்று பேர்கள்) தமிழை
ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று இ;ரணியல் உதவிப் பதிவாளர்
அலுவலகம் சென்று மறியல் செய்தேன். போலீசார் என்னைக் கைது செய்து
இரணியல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 13.08.1954 இல் என்னைத்
திருவனந்தபுரம் மத்திய சிறைக்குச் கொண்டு சென்றனர். அங்கு என்னைப்

போலீசாhர் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததில் பல்லுகளும்
உடைக்கப்பட்டுப் பின்னர் நான் ஒரு நோயாளியாக விடுதலைப் பெற்றேன்.”
“7.09.1958 இல் குமரி மாவட்ட விடுதலைத் தியாகிகள் சங்கம்
துவங்கப்பட்டது. என்னைப்போல் சிறையில் சித்திரவதை அடைந்தவர்க்கு
உதவிகள் பெறுவதற்காகத் தமிழக முதல்வரான காமராஜர், பக்தவல்சலம்,
அண்ணாத்துரை போன்ற முதல்வர்களிடம் சென்று உதவிகள் கேட்டும்
உதவிகள் கிடைக்கவிலலை. நான்காவதாகத் தமிழக முதல்வராக வந்த
கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சென்று உதவிகள் கேட்டதில்
18.10.1974 -ல் புதுக்கடையில் முதல்வர் வந்து இறந்த குடும்பத்தினர்களுக்கும்
சிறைச் சென்ற சான்றை வைத்து 64 பேர்களுக்கு உதவிகள் கிடைத்தன.
உதவிகள் கிடைக்காதவர்களுக்கும் விரைவில் உதவிகள் செய்து
தருகின்றேன் என்று முதல்வர் வாக்குறுதி தந்த நேரத்தில் கலைஞர் ஆட்சி
1976 ஏப்ரலில் கவிழ்க்கப்பட்டது. மாத ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களின்
பணமும், நிறுத்தப்பட்டது.”
“மேலும் உதவிகள் எல்லோருக்கும் கிடைப்பதற்காக நாங்கள் தமிழக
ஆளுநரிடமும் அரசு அதிகாரிகளிடமும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும்
குமரி மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர் அனைவர்களிடமும் வாரத்தின் திங்கள்
தோறும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 50 பேர்கள் 60 பேர்கள் 100 பேர்கள்
150 பேர்கள் வரை (இதில் கணவரை இழந்த விதவைகளும் வருவார்கள்)
ஆட்சித் தலைவர்களிடம் சென்று மனுவும் கொடுத்துக் குறைகளைச்
சொல்வது மட்டுமா? இன்னும் ஆர்ப்பாட்டங்கள். இரண்டு தடவைகளில்
உண்ணாவிரதம் நடத்தி அரசிடம் உதவிகள் கேட்டோம். ஒருநாள்
ஆட்சித்தலைவரிடம் 15.07.1986 இல் கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன்
இணைக்க நாங்;கள் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கிறோம்.
இணைப்பிற்கு எங்களை மலையாள போலீசாரிடம் காட்டிக் கொடுத்தவர்கள்
இப்போது எங்களைப் பார்த்துக் கிண்டலும், கேலியும் செய்கிற நிலையில்
தமிழக அரசு எங்களை மறக்கலாமா? என்று நாங்கள் ஆட்சித் தலைவர்
எல்.கே. திரிபாதி அவர்களிடம் வேதனைப்பட்ட போது ஆட்சித்தலைவர்
கூறியது. நான் உங்களுக்காக அரசிடம் வேண்டிய நடபடிகள் எடுத்தாலும்
நீங்கள் தமிழக முதல்வரை நேரில் பார்த்து உதவிகள் கேட்பது உங்களுக்கு
மிகவும் நலமாக இருக்கும் என்றார்கள்.
“நாங்கள் ஏழு பேர்கள் அவரவர் செலவுகளில் சென்னை சென்று
19.11.1986 ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து 435 பேர்களின்
பட்டியலைக் கொடுத்துக் குறைகளைப் பேசும் போது முதல்வர் கூறியதாவது,
நீங்கள் தந்த பட்டியல்படி எல்லோருக்கும் உதவிகள் செய்யத் தமிழ் வளர்ச்சிப்
பண்பாட்டுத் துறையிடம் இன்றே சொல்கிறேன் என்றார்கள். நாங்;கள்
சந்தோஷப்பட்டு வணக்கத்துடன் விடை பெற்றோம்.”

“முதல்வரைப் பார்த்த செய்தி பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது.
நாங்கள் முதல்வரைப் பார்த்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நாகர்கோவிலைச்
சார்ந்த பெருமாள் பிள்ளையின் மகன் சுப்பிரமணி என்ற பி.எஸ். மணி என்பவர்
எங்கள் கண்ணீரில் வளர்ந்து வரும் சங்கத்தின் பேரில் பொறாமையும்
எரிச்சலும் பட்டு; சென்னைக்கு ஒரே ஓட்டமாக ஓடித் தமிழ் வளர்ச்சிப்
பண்பாட்டுத் துறையிலுள்ள மிகப் பெரிய பொறுப்பான பதவியில் இருக்கும்
தலைவர் ம.பொ. சிவஞான கிராமணியும், அரசுச் செயலாளர் அவ்வை
நடராசரையும் இயக்குநர் சிலம்பொலி செல்லப்பா ஆகிய மூன்று
பேர்களையும் நாகர்கோவிலுக்குக் கூட்டி வந்து, ஒழுகினசேரியிலுள்ள
மணியின் தந்தையின் நினைவிலுள்ள பெருமாள் திருமணமண்டபத்தில்
வைத்து மணியின் 70-வது பிறந்த நாள் நாடகம் ஒன்றை 29.09.1987 –ல் நடத்தி
மூன்று அதிகாரிகளும் சகுனி மணியை வாழ்த்தி, புகழ்ந்து பாராட்டிப்
பேசியதோடு மணி கொடுத்த மிகப் பெரிய சுவைமிகுந்த விருந்திலும்
பங்குகொண்டு சிரித்து மகிழ்ந்து, பேச வேண்டியவற்றை எல்லாம் பேசிவிட்டு
வாங்;கவேண்டிய பரிசுகளையெல்லாம் வாங்;கிவிட்டுக் கன்னியாகுமரி
கடலையும் பார்த்துவிட்டு மறுநாள் காலையில், சூரியனின் உதயத்தைப்
பார்த்து வணங்கியபின், மூன்று அதிகாரிகளும் மாலைநேரம் சென்னைக்குப்
புறப்பட்டுச் சென்று, தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டுத் துறைக்குச்
சென்றடைந்தனர்.”

தியாகிகளைக் கண்ணீர் சிந்த வைத்தார் அரசுச் செயலாளர் அவ்வை
நடராசர்
“சென்னை வந்தடைந்த அரசுச் செயலாளர் அவ்வை நடராசர்
கையொப்பத்துடன் முன் தியதியிட்ட 141 பேர்களுக்கு 14.04.1997 முதல்
ஓய்வூதியம் ரூ.250 வழங்;கும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வெளிவந்த பட்டியலின் நகல் ஒன்று குமரி மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. எல்.கே. திரிபாதி அவர்கள் எங்களுக்கும் (சங்கத்திற்கும்) தந்தார்கள்.
பட்டியலை நானும் சங்க உதவி செயலாளரான எஸ். ராமனும் படித்தோம்.
படித்ததில் 30 வருடங்களாக உதவிகள் கிடைக்க, அமைச்சர்களையோ,
ஆளுநர்களையோ, மாவட்ட ஆட்சித்தலைவர்களையோ பார்க்க
வந்தவர்களுடைய பெயர்களோ, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங் களில் பங்கு
கொண்டவர்களுடைய பெயர்களோ இந்த 141 பேர்களின் பட்டியலில் இடம்
பெறவே இல்லை.”
70 வயதை நினைவுப்படுத்தும் பெருமாள் பிள்ளையின் மகன் பி.எஸ்.
மணி என்ற வெள்ளாளருடைய பெயர் மேற்கூறிய 141 பேர்கள் பட்டியலில் 70
ஆவது எண்ணில் இருந்தன. 109 ஆவது பெயராக ரவீந்திரன், சித்திரஞ்சன்
தாஸ் பெயரும் இருந்தன. இன்னும் மணியின் நண்பர்களின் பெயர்களும்
இருந்தன. சங்கத்தைக் காட்டிக் கொடுத்த எதிரிகள் பெயர்களுமிருந்தது.

அரசிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பிந்தியதினால் சங்;கத்தையும்
என்னையும் கேவலமாகப் பேசித் திரிந்தவர்களுடைய பெயர்களுமிருந்தன.
சில விதவைகளின் பெயர்களுமிருந்தன. மணியின் கூட்டாளிகளுடைய
பெயர்களுமிருந்தன. வெளிவந்த பட்டியலினுள் மூன்று பெயர்களைத் தவிர
மீதமுள்ள அனைவர்களும் முன்னைய சட்டமன்ற உறுப்பினர்களின் சான்றை
வைத்துதான் மாத உதவிகளும் பஸ் பாசும் வாங்கி வருகின்றனர். அன்று 250
ரூபாய் வாங்கியவர்கள் இப்போது 3015 ரூபாய் வாங்கி வருகிறார்கள்.”
“மேற்கூறியவர்களுக்கு மாத ஓய்வூதியம் கிடைத்த நேரத்தில் தமிழக
முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருப்பார் களேயானால் நான்
தந்த பட்டியலுக்கு என்ன நடபடிகள் எடுத்தீர்கள்? என்று கேட்டுவிட்டுச்
கடமையை விட்டு வழி தவறிப்போன அரசுச் செயலாளர் டாக்டர் அவ்வை
நடராசரை சாதி வெறியரான பி.எஸ். மணியோடு வீட்டிற்கு அனுப்பி
வைத்திருப்பார்கள். சண்டாளர்கள் செய்த துரோகச் செயல்களை மாவட்ட
ஆட்சித் தலைவரிடம் சென்று கூறி அழுதோம். ஆட்சித் தலைவர் எங்களை
ஆறுதல் படுத்தினார்கள்.

நடந்த அநியாயங்;களைச் சென்னைக் கோட்டைக்கு மனுவும்
தந்தியும் அடித்தும் எந்தவிதமான பதிலுமில்லை ழூ உதவிகளுமில்லை.
அநியாயங்களைச் செய்த சாதி வெறி கொடுமைகளினால் உதவிகள்
கிடைக்காத (நடந்த உண்மை நிலை தெரியாத) சில தியாகிகள் பி.எஸ்.
மணியிடம் சென்று எங்;களுக்குப் பென்சன் கிடைக்கவில்லை என்று
கேட்டபோது அவர் சொன்னது, சிங்;கராயனுக்கு நீங்;கள் பணம்
கொடுத்திருக்க மாட்டீர்கள். பணம் கொடுத்தவர்களுக்கு அவன் பென்சன்
வாங்கிக் கொடுத்திருப்பான் என்று சொன்னதைக் கேட்டவர்கள் வந்து
என்னைப் படுத்திய வேதனைகள், என்னைத் தக்கலையில் வைத்தும்
தொடுவெட்டியில் வைத்தும் கருங்கலில் வைத்தும் புதுக்கடையில் வைத்தும்
டே ழூ சிங்காரா . . . நீ கள்ளன்மார்களுக்கும் சிறையே காணாதவனுக்கும்
பென்சன் வாங்கிக் கொடுத்திருக்கா . . . எங்களைக் கொன்று போட்டாய் . . .
நீயும் பென்சன் வாங்கிவிட்டாய். உன்னைக் கொல்லாமல் விடவே மாட்டோம்
என்று . . . என்னைக் கேவலமாகப் பேசி அடிக்க வந்தர்களுமுண்டு.
வேறொருவன் எனது கையிலிருந்த குடையையும், வாங்கிப் பறித்து முறித்துப்
போட்டவனுமுண்டு. ஒருவன் எனது சட்டையையும் பிடித்து இழுத்துக் கிழித்துப்
போட்டுவிட்டு வாயில் வந்தவாறு பேசினதுமுண்டு. எனது வாழ்க்கையின்
ஆரம்பமே சிலுவைப் பயணம் தான். ஆகவே, என்னை ஒருவன்
கொல்லுவதைப் பற்றியோ . . . கண்ணீர் சிந்த வைப்பதைப் பற்றியோ எனக்குக்
கவலையே இல்லை எனது கவலையெல்லாம் என்னை நம்பி என்னுடன் நின்று
பல வருடங்களாக இருந்து பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், பசி,
பட்டினி, கடன்களையும், வேதனைகளையும் அனுபவித்து வந்தவர்களுள் 45
பேர்களுக்கும் கொலை பாதகர்கள் பென்சன் கிடைக்காமல் ஆக்கியது
மட்டுமா? உங்களுக்குப் பென்சன் கிடைத்திருக்கிறது. எங்களுக்கு பென்சன்
கிடைக்கவில்லையே என்று கேட்டவர்களிடம் இந்தச் சதிகாரத் துரோகி
சொன்ன பதிலைக் கேட்டவர்கள் என்னை அடிக்கவும் கொல்லவும் வந்த
செயலை நான் நினைத்துப் பார்க்கும் போது இவனைத் தியாகி என்று
சொல்லவும் முடியாது. மனித வர்க்கத்தையே சேர்ந்தவனல்ல. சாதி வெறி
பிடித்த அரக்கன் என்றே சொல்வேன்”

பென்சன் வாங்காமல் இறந்த தியாகச் செம்மல்களின் பெயர்கள்
“1). பி. சின்னத்தம்பி, 2) ஏ. சண்முகம்பிள்ளை, 3) பி. சிதம்பரம்,
4) எம்.ஐ. மரிய செபஸ்தியான், 5. எஸ். மாணிக்கம், 6) எம். தாசையன்,
7) வி. ஜெபமணி, 8) என் மரியதாஸ், 9) எஸ். கணேசன், 10) ஓய் மாணிக்கம்,
11) எம். தாசையன், 12) பி. ஜெபமணி, 13) என். மரியதாஸ், 14) எஸ். கணேசன்,
15) ஒய். சகாயம், 16) பி. தற்மசகாயம், 17) டி. செல்வம், 18) டி. தாமஸ்,
19) ஏ. மரிய வியாகப்பன், 20) ஜெ.எல். சவுந்தரம், 21) ஏ. சாமிநாடார், 22) என்.
தேவதாஸ், 23) ஜீ. மோசஸ், 24) எஸ். ஆண்டார் பிள்ளை,
25) டி. ஜெபஸ்தியான், 26) கே. லூக்காஸ், 27) பி காசியுதயம்,
28) ஏ. சுப்பிரமணி வைத்தியர், 29) ஜெ. தங்கையன், 30) எஸ். முத்துநாயகம்,
31) சி. செல்லம், 32) ஏ. அருளப்பன், 33) எஸ். செல்வக்கண், வழக்கறிஞர் ஜெ.
நேசமணி, வழக்கறிஞர் எஸ்.டி. மோசஸ், ஜெ. பீட்டர் ஜாண்சன், வி.எம்.
ஜாண்றோஸ், எஸ். ஆரீஸ், ஒய். டானியல், ஏ.கே. செல்லையா, எஸ்.டி. மணி,
டி. ஜாண்சன், எஸ். கோவிந்தராஜ், வித்வான் ம. தாமஸ், எஸ். ஜொசப்.ஞ
ஞமேற்கூறிய 45 பேர்களும் ஒரு நாளாவது மாத ஓய்வூதியம் வாங்கி
சாப்பிட்டு விட்டு இறந்திருப்பார்களேயாகில் நான் கலைப்படவும் மாட்டேன்.
கண்ணீர் சிந்தவும் மாட்டேன். இவர்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல்
இவர்கள் ஒன்றோடொன்றாக இறப்பது வரையிலும் என்னுடன் சேர்ந்த
சங்கத்தைச் சாகவிடாமல் கட்டிக் காத்து வளர்த்தவர்களாகும். மேலும்
இவர்களில் சிலர் நான் இந்த வருவாய் இல்லாத சங்கத்தை எ;பபடி நடத்தப்
போகிறேனோ என்று கவலைப்பட்ட நேரங்களிலெல்லாம் என்னைக்
கவலைப்படாதீர்கள், நாங்கள் எப்போதும் உங்களுடனே இருந்து
வருவதினால் ஏன் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்று ஊக்கமும்
உற்சாகமும் சிறு உதவிகளும் பல தடவைகளில் தந்து என்னை வழிநடத்தி
வந்த தியாகச் செம்மல்களாகும்.”
ஞநானும் இறந்த இவர்களுடன் செல்வது வரையிலும் சாதி வெறியன்
சண்டாளன்யூதாஸ்-சகுனி மனித பண்பாடற்ற அரக்கன் பி.எஸ். மணி
செய்துள்ள துரோகச் செயல்களை எழுதிக் கொண்டும் சிறு-சிறு நூல்களாக
வெளியிட்டுக் கொண்டும் தான் இருப்பேன்.ஞ

மேற்கூறியவர்களின் மரணத்திற்குப் பின் கலைஞர் அரசு சகல
விதிமுறைகளையும் தளர்த்தி 01.01.2000 ம் முதல் கணவரை இழந்த
விதவைகளுடன் சேர்த்து 142 பேர்களுக்கு மாதஓய்வூதியம் ஆண்களுக்கு
3015 ரூபாயும் விதவைகளுக்கு மாத ஓய்வூதியம் 1515 ரூபாயும் வழங்க அரசு
ஆணையிட்டுள்ளது. அவர்களில் 1) வி. அரிச்சந்திரன், 2) ஏ. தாசையன்,
3) ஜெ.ஜெ. தாஸ், பி. தங்கராஜ், டி. ஜாண் பொன்னையா, வழக்கறிஞர் எம்.
சுப்பிரமணியபிள்ளை, ஆசான் ஏ. நாராயணன் நாடார், வி. முத்துவிநாயகம்,
டி. பிச்சையா, ஜெ. Nசை, டி. யோவான், ஜி. மரிய செபஸ்தியான், பி. ஜாண்
பாலையா, பி. ஆப்ரகாம், ஜெ. சத்தியதாஸ், கே.பி. ஆறுமுகம்,
17) ஓய். இரத்தினதாஸ், ஏ.டி. ராஜ், கே. தங்கப்பன், பி. தங்கமணி (பி.ற்றி. மணி)
விதவைகள் 21 முத்தாபரணம் செல்வம், கமலம் தங்கையன், ஜெபரெத்தின
அருள்ராஜ், மரிய புஷ்பம் தங்கையா, ஜெபரெத்தினம் அருள்ராஜ், மரிய
புஷ்பம் தங்கையா ஆகியோர்கள் பலமாதங்களாவது மாத ஓய்வூதியம்
வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் தான் இறந்தார்கள். இவர்களைப் பற்றிச் சிறிது
நிம்மதி அடைந்தாலும் மேல்கூறிய 43 பேர்களும் மேற்கூறிய பட்டியிலிலுள்ள
சுட்டிக் கட்டிய வேறு சிலர் அரசு ஆணைகள் கிடைத்தும் ஓய்வூதியத்தை
வாங்குவதற்கு முன்னரே இறந்து விட்டவர்களும் இவர்களைப் போலாவது மாத
உதவிகள் வாங்கிவிட்டு இறந்திருப்பார்களேயானால் நான் கூடுதல்
கவலையும் வேதனையும் அடைந்திருக்கவே மாட்டேன்.”

குறிப்பாகச் “சண்டாளன் பி.எஸ். மணி என்பவர், சான்றோர் குல நாடார்களான
குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கும், கண்ணீரில் 1958 லிருந்து
வளர்ந்து வந்த தியாகிகள் சங்கத்திற்கும், எனக்கும் (சிங்காராயராகிய
எனக்கும்) செய்துள்ள கொலைப் பாதகச் செயல்கள் அவர் சாதியான
கவிமணி. தேசிகவிநாயகம் பிள்ளைக்கும் – முத்துக்கருப்ப பிள்ளைக்கும்
செய்திருப்பார்களேயாகில் இந்தச் சாத்தானை அவர் சாதியினர் அவர் பிறந்த
ஊரில் வைத்திருப்பார்களா? இதனைப் பகுத்தறிவாளர்கள் சிறிது சிந்தித்துப்
பார்க்க வேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் பரிசாகத் தமிழக மக்களின்
கமலப் பாதங்;களில் (19.08.2005) ல் கவலையோடும், கண்ணிரோடும்
படைக்கிறேன்.”
மார்சல் நேசமணி கைதாவதிலிருந்து தப்பித்துக் கொண்டார் என்ற
பொய்யைச் குமரி மாவட்டக் கெஜட்டியரில் பதிவு செய்துள்ளார்கள். அதற்குத்
தகுந்த சான்றிதழ் கொடுத்த பிறகும், இன்னும் திருத்தி எழுதப்படவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, தியாகம் இப்படித்தான் பதிவாகும் என்பதை
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தங்களின் நூலில் ம.பொ.சி. யுடன் பி.எஸ்.
மணியும் நேசமணி வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் ரசாக் நேசமணியின்
வீட்டிற்கு ம.பொ.சி. யும் தானும் சென்றதாகக் கூறுவது பொய் என்று

எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் அந்த வீட்டில் விசாரித்த போது ம.பொ.சி. யும்
அப்துல் ரசாக்கும் வந்ததாகக் கூறுகிறார்கள். இதனை நேரில் கண்ட
தியாகிகள் கூட இந்தச் செய்தியையே பதிவு செய்கிறார்கள். அது மட்டுமல்ல,
நேசமணி வீட்டிற்குப் பி.எஸ். மணி செல்ல முடியாது. காரணம், நேசமணியின்
தலைவர்களும் சிறையில் இருக்கும் போது திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரசைக் கலைத்துவிட்டு, தமிழரசுக் கழகத்தோடு இணைப்பதற்குப்
பெரிதும் முயன்றார். ஆனால், அது நடைபெறவில்லை. மேலும், தமிழகத்தில்
பிரித்த பணத்தைக் கட்சியின் தலைமைக்குக் கொடுக்கவோ, தான் செலவு
செய்தால் அதற்குரிய ரசீது கொடுக்கவோ இல்லை. ஆகையால், நேசமணி
வீட்டிற்குப் பி.எஸ். மணி செல்ல முடியாது. நேசமணி வீட்டில் அவர் மகனிடம்
விசாரித்தபோது ரசாக், ம.பொ.சி. வந்ததாகவே கூறினார். துப்பாக்கிச் சூடு
நடந்தபோது இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் அனைத்தும் 144 தடை
உத்தரவு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் நகரசபைத் திடல்,
நாகராஜாகோயில் திடல், இப்போதைய பொன்னப்பநாடார் திடல் போன்ற
பகுதிகள் எல்லாம் காவல்துறையினர் தாவளம் அடித்துத் தங்கினர். நான்கு
பேர் நின்றாலே கைது செய்வார்கள். மதிப்புமிகு தோழர் ஜீவா அவர்கள்
பீதியுற்று இங்குள்ள நிலைமையைக் கண்டு கடுக்கரை மலைப்பகுதிகள்
வழியாக நெல்லை சென்றார். அப்படிப்பட்ட கொடூரமான காலம். போலீசார்
துப்பாக்கியுடன் தென் திருவிதாங்கூர் முழுதும் சுற்றித்திரிந்த நேரம்.
இப்படிப்பட்டநேரத்தில் பி.எஸ். மணி தலைமை தாங்க ம.பொ.சி. பேசினார்
என்றால் உலகத்தில் இதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இல்லை. ஆனால்,
திரு. யோகீஸ்வரன் அவர்கள் இக்கூட்டத்தைக் கண்டதாகத் தன்னுடைய
நூலில் எழுதுகிறார். இந்த நகைச்சுவைக்காக நாமும் சிரிப்போமா? நீங்கள்
பதில் தந்தால் அந்தப் பதிலையும் சேர்த்து நூலாக வெளியிடுவோம். உங்கள்
பதிலை எதிர்பார்க்கிறோம்.
நேசமணியையும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டி
நடந்த போராட்டத்திற்குத் தலைமை ஏற்றவர்கள்
திரு. எம். வில்லியம், டி.டி. டானியல், பி. தாணுலிங்கம் நாடார்,
ஆர். பொன்னப்பன் நாடார், பி. ராமசாமி பிள்ளை, எஸ்.எஸ். சர்மா, எம்.டி.
அனந்தராமன், சி. கோபால கிருஷ்ணன், என். நூருமுகமது (துணை
வேந்தர்), ஏ.எம். சைமன், ஏ. குஞ்ஞன் நாடார் (சர்வாதிகாரி),
ஏ. காந்திராமன், வி. அருளப்பன் போன்றோர் போராட்டத்திற்குத் தலைமை
ஏற்றுச் சிறைச் சென்றனர். இப்போராட்டம் 11.08.1954 வரை நடைபெற்றது.
சின்னையன் பட்டாளம், பொன். சின்னத்தம்பி போன்றோரைப் பிடித்து
அடித்து மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுபோய்
விட்டனர். போராட்ட வீரர்களுக்குத் திருவிதாங்கூர் நீதிமன்றத்தில்
ஜாமீன் கிடைக்காத காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று
மைNர் நீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் வாங்கினார் நேசமணி. ஒரு
மாநில வழக்கை இன்னொரு மாநிலத்தில் நடத்தலாம் என்று முதல்
முதல் வழிகாட்டியவர் மார்ஷல் நேசமணி. இந்தப் போராட்டத்தில் தாக்குப்
பிடிக்க முடியாத பலர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து
ராஜினாமா செய்தனர். அவர்ளில் ஒருவர் திரு. பி.எஸ். மணி.
தமிழ் மண்ணுக்காக உயிர்நீத்த தியாகச் செம்மல்கள்
1948 ஆம் ஆண்டு பெப்ருவரி 8 ஆம் நாள் மூன்று பேர்
பலியாயினர். 1. ஏ. தேவசகாயம், மங்காடு, 2. தி. செல்லையா, கீழ்க்குளம்,
3. கத்திக்குத்தில், பாகோடு என்னும் ஊரைச் சார்ந்த ஒருவரும்
பலியானார். 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் நேசமணி
விடுதலையை, நாடு விடுதலைத் தினமாகக் கொண்டாடிய போது
துப்பாக்கிச் டே;டில் பலர் பலியானார்கள். 1. புதுக்கடை ஏ. அருளப்பன்
நாடார் 2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார் 3. தோட்டவாரம் எம். குமரன்
நாடார், 4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர், 5. தேங்காய்ப்பட்டணம்
ஏ. பீர்முகமது, 6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர், 7. நட்டாலம் எஸ்.
இராமையன் நாடார், 8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்
9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார். மேலும்
இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக்
கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை
உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம்
36 பேர் பலியானதாகச் சான்றுகள் கூறுகின்றன. இவர்கள் தவிரப் பல
தியாகிகள் வயிற்றில் மிதிபட்ட காரணத்தால் திருமணம் செய்ய முடியாத
நிலையை அடைந்தனர். பலருடைய கை, கால்கள் முடமாக்கப்பட்டன.
பலருடைய பற்கள் அடிபட்டுத் தெறித்தன. இத்தகைய மாபெரும்
போராட்டத்தின் காரணமாக 1956 நவம்பர் 1 அன்று திருவிதாங்கூர் தமிழ்ப்
பகுதிகளில் நாலரைத் தாலுகாக்கள் தமிழகத்தோடு இணைந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
செங்கோட்டையில் பாதி. இணைந்த பகுதிகளுக்கு நேசமணி
கன்னியாகுமரி என்று பெயர்டே;ட அன்றைய முதல்வர் காமராசரிடம்
வேண்டினார். காமராசரும் கன்னியாகுமரி என்று பெயர் டே;டி மகிழ்ந்தார்.
குமரித் தந்தை நேசமணி அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் நாள்
நம்மை விட்டுப் பிரிந்தார்.

நேசமணிக்கு, பட்டப்பெயர்கள் டே;டியவர்கள்
மாவீரன் – ம. பொ. சி.
மார்சல் – ஜனாப் எ. அப்துல் ரசாக், எம்.பி.
திருத்தமிழகச் சிற்பி – மாதேவன்பிள்ளை
குமரித்தந்தை – பி. எஸ். மணி
பெரியவர், வக்கீல் – வழக்கறிஞர்கள்
தமிழரின் நேசமணியே- கல்கி
தென்னெல்லைக் காவலன்- தியாகி. ஆ. சிங்காராயர்
(விடுதலைத் தியாகிகள் சங்க
அமைப்பாளர்)
அப்பச்சி – திருவிதாங்கூர் தமிழ் மக்கள்
இராஜா – திருவிதாங்கூர் தமிழ் மக்கள்
அரசியல் மேதை – சங்கரலிங்கம், எம்.பி.
ஞதந்தை நேசமணிஞ – ஜெம்ஸ், எம்.எல்.ஏ.,
கொட்டில்பாடு துரைசாமி
திரு. முத்துக்கருப்பன்
யார் தியாகி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களே
சாதியை அடிப்படையாக வைத்து மதத்தை அடிப்படையாக வைத்துப்
போராடாத நபருக்குத் தியாகிகள் பட்டம் கொடுக்காதீர். வாழ்க தமிழ்
வாழ்க தமிழகம் வாழ்க தமிழன்
தலைவர் பழ. நெடுமாறன் “பேரா. யோகீஸ்வரன்பிள்ளை ;அவர்கள்
விருப்பு வெறுப்பின்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதியிருக்கிறார்”
எனத் தனது சான்றை நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு மாமனிதன் அப்துல்
ரசாக்கைக் கிண்டல் செய்வது நடுநிலையா? என்பதை அறிய
விரும்புகிறேன். பேரா. யோகீஸ்வரனுக்குத் திருவிதாங்கூர் போராட்ட
வரலாறு தெரியாது. மார்சல் எ. நேசமணி கேட்டது 9 தாலுகா. பேரா.
யோகீஸ்வரன் கூறுவது 8 தாலுகாக்கள் என்று. சிற்றூரை விட்டுவிட்டார்.
இதுகூடத் தெரியாதவரை நடுநிலை நூலாசிரியர் என்று தலைவர் பழ.
நெடுமாறன் பதிவு செய்கிறார். என்னே இவர் தமிழ்ப் பற்றும் நேர்மையும்.
ஈழப்போராளிகளைப் பிரித்து வைத்து வாழ்வை ஓட்டியவர் பழ. நெடுமாறன்
என்று கூறிய அரசியல்வாதிகளின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்
நாங்கள். சாதி வெறியர்கள் உங்களைச் சூழவிடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.

பெறுநர்
திரு. அ.கா. பெருமாள்
ஆசிரியர்
தென்குமரியின் சரித்திரம்
நாகர்கோவில்.
ஐயா,
தாங்கள் ஒரு வரலாற்றாசிரியர் என்பது என் எண்ணம்.
“தென்குமரியின்சரித்திரம்” என்ற தங்களுடைய நூலைப் படித்தேன். அதில்
பல செய்திகளைத் தாங்கள் தந்துள்ளது சரித்திரத்தை அறிவதற்கு உதவும்.
ஆனால் அந்த நூலில் வரலாற்றுக்கும் உண்மைக்கும் முரணாகக்
கற்பனையான சில தகவல்களைக் கண்டேன். இன்றுள்ள அரசியல் வாதிகள்
போலல்லாமல் வீட்டுக்கு வறுமையும் நாட்டுக்குத் தன்னையும் தந்த தலைவர்
நேசமணி. அப்படிப்பட்ட தலைவர்களைக் கேலி செய்து எழுதுவது மிகவும்
வேதனைக்குரிய ஒன்று. எடுத்துக்காட்டாக, தென்குமரியின் சரித்திரம் ப. 96,
97ஞதி.த.நா.வின் தொடர்போராட்டம் எந்த வெற்றியையும் தரவில்லை என்ற
குரல் நேசமணியின் வாய்வழிக் கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில்
ஒலிக்க ஆரம்பித்தது மட்டுமன்றிப் போராட்டத்தைவிடப் பதவியைப் பெற்றுக்
காரியத்தைச் சாதிப்பதே சிறந்த வழி. ஆகவே தி.த.நாவை சமஸ்தானக்
காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும். அதுவே நல்லது என்று நேசமணி
கருதினார். அவரது கொள்கை, கட்சியையும் நோக்கத்தையும் பூண்டோடு
அழித்து விடும் என்ற கோஷம் ஒலிக்க ஆரம்பித்ததும் கட்சிக்குள் பூசல்
வந்தது”உங்களுக்கு முன் வரலாறு எழுதிய உயர் இனத்தவர்கள்
பாளையங்கோட்டை ஒப்பந்தத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டது என்று
எழுதியுள்ளனர். அதுவும் உண்மையல்ல. நத்தானியேல் ராஜினாமா செய்த
பின்னர் நடந்த தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வியுற்ற
சிலர் புதிய கட்சியை ஆரம்பித்தனர்.
தாங்கள் தங்கள் நூலில் கூறுவது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.
வரலாற்றில் இப்படிப்பட்ட முரண்களை எழுதினால் உண்மை வரலாற்றை
மறைத்து விடலாம் என்று எண்ணாதீர்கள்.
தென்எல்லைக் காவலன் நேசமணி தாங்கள் எழுதியிருப்பது போன்று
கூறியிருந்தால் அன்றுள்ள மலையாளம், தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில்
தலைப்புச் செய்தியாகப் போடப்பட்டிருக்கும். எனக்கும் இங்குள்ள
தியாகிகளுக்கும் அப்படி ஒரு பதிவு பத்திரிகைகளில் பதிவானதாகத்

தெரியவில்லை. பல தியாகிகளிடம் விசாரித்த போது எந்த மடையன் அப்படிச்
சொன்னான் என்று கேட்கிறார்களே தவிரத் தாங்கள் கூறியது போன்று யாரும்
கூறவில்லை.
கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தமிழ் மக்களிடம்
சென்று ஸ்டேட் காங்கிரசில் சேரலாமென்று நீங்கள் எழுதியிருப்பது போன்று
தென்எல்லைக் காவலன் நேசமணி கூறியிருந்தால் அன்றே அவர்
நத்தானியேலைப் போன்று மக்களிடமிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பார்
நதானியேல் (பட்டம் தாணு பிள்ளையின்)சமஸ்தானக் காங்கிரஸ் கட்சியில்
சேர்ந்ததும் அன்றே அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஸ்டேட் காங்கிரசைக் கில்ட் காங்கிரஸ் (மினுமினுப்பு காங்கிரஸ்) என்று
நேசமணி கூட்டங்களில் பேசினார். மாணவராக இருந்த போதுகூட அவர் அகில
இந்தியக் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திரு. நத்தானியேல், திரு. பி.எஸ்.மணி ஆகியோர்தாம் சமஸ்தான காங்கிரசில்
உறுப்பினராய் இருந்தனர். தோவாளையில் உள்ளோர் சிலர் அமைச்சாராகவும்
இருந்தனர்.
ஸ்டேட் காங்கிரஸ் மன்னரின் கீழ்த் திருவிதாங்கூருக்குச் சுதந்திரம்
வேண்டுமென்று கூறியது. ஆனால் நேசமணியோ மன்னரும் போக வேண்டும்,
வெள்ளையனும் போக வேண்டும் இதுதான் அவரது தாரக மந்திரம். சுதந்திரப்
போராட்டக் காலத்தில் 1943 இல் இவர் எம்.எல்.ஏ. ஆகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முக்கியப் பொறுப்புகள் கொடுக்க அரசு
முன்வந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டார். பட்டேல் இவரை அடிக்கடி சந்தித்தார்.
அப்படிப்பட்ட ஒருவர் ஸ்டேட் காங்கிரசில் உறுப்பினராக இணைந்து பதவிகள்
பெற விரும்பினார் எனக் கூறுவது தங்களுடைய சாதி வெறியைக் காட்டுமே
தவிர இது உண்மை இல்லை என்பது திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள்
அனைவருக்கும் தெரியும். உங்களைப் போன்றோர் எந்தக் கட்சி ஆட்சிக்கு
வருமோ அந்தக் கட்சியின் ஆதரவாளராக மாறி,பலனடையும் மந்திரம்
நேசமணிக்குத் தெரியாது. கல்குளம், விளவங்கோடு தமிழ் மக்களுக்கும்
தெரியாது.
கல்குளம் விளவங்கோடு மக்களைப் பற்றி உங்களுக்கு எதுவும்
தெரியாது. அவர்கள் நம்பூதிரிகளோடும், பிள்ளைமார் சமுதாயத்தோடும்
மலையாள அரசோடும் சுமார் 250 ஆண்டுகள் போராடியவர்கள். அதற்குக்
காரணம் தமிழ் மொழிக்குப் பதிலாக மலையாள மொழி ஆட்சிபீடம் ஏறியது.
தமிழ் மன்னனுக்குப் பதிலாக மலையாள மன்னர்கள் பதவிக்கு வந்தனர்.
மன்னர்கள் பதவி ஏற்றதும் நீங்களெல்லாரும் உறவு கொண்டு மிகுந்த சுகம்
அனுபவித்தீர்கள் இதனை‘ஆய்வுக் களஞ்சியம்’ மாத இதழில் டாக்டர் எஸ்.
பத்மநாபன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின்

போது நாஞ்சில் நாட்டு மக்கள் சொர்க்கத்திலும் வெளிச்சத்திலும்
இருந்தார்கள் என்றும்மக்களாட்சியின் போது நரகத்திலும் இருளிலும் வாழ்ந்து
வருவதாகக் கருதுகின்றனர் என்றும் மன்னர் தெய்வமாக இருந்து நாட்டை
ஆண்டார் என்றும் எழுதியுள்ளார். இதிலிருந்து திருவிதாங்கூர் மன்னர்களுக்கு
எதிராகவும் மலையாள மொழிக்கு எதிராகவும் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு
காங்கிரஸ் போராட்டத்தில் நாஞ்சில் நாட்டில் உள்ள உயரின மக்களின் பங்கு
என்ன என்பது பற்றியும் தமிழ் உலகம் அறிந்து கொள்ளட்டும்.
மேலும், பிள்ளைமார் மிகுதியாக உள்ள தோவாளையில்
குமரித்தந்தை நேசமணி பிரச்சாரம் செய்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்
ஆதரவு கொடுத்தும் திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்
வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் ஸ்டேட் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
பெற்றார். இதன் எதிரொலி பாராளுமன்றத்தில் நேசமணியிடமே கேட்கப்பட்டது.
இவர்களுடைய மொழிப் பற்றை எண்ணிப் பாருங்கள்.
இதே நேரம் கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை மற்றும் பிற
தமிழ் மக்களின் நிலையைப் பாருங்கள்.
நாடான் நீசன், அவனுடைய பாஷை தமிழ்,அது நீச பாஷை என்று
கூறினர். ஒரு தெருவில் நாய் போகலாம், பன்றி போகலாம். ஒடுக்கப்பட்ட
தமிழன் போகமுடியாது. ஏட்டைப் பிரித்துப் படித்தால் கலைமகளைப்
பார்த்துவிட்டான் என்று கண்கள் பிடுங்கப்பட்டன. வரி கொடுக்க முடியாத
மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். மேலாடை அணிந்த பெண்களின் மார்புகள்
துண்டிக்கப்பட்டன. எருமையோடு இணைத்துப் பெண்களை வயலில் உழ
வைத்தனர். தாலி அணிந்து சந்தைக்குச் சென்ற பெண்களின் தாலிகள்
அறுக்கப்பட்டன. இதனால் அங்கு அடிதடி நடந்தது. இன்றும் சந்தையடி என்றும்
தலியறுத்தான் சந்தை என்றும் இடங்களின் பெயர் இப்போதும் உண்டு.
ஒடுக்கப்பட்ட தமிழனின் உடமைகள் தேவதானம், பிரம்மதேயம், அம்மச்சி
வீட்டு வகை, தங்கச்சிமடம், வெள்ளச்சி மடம், சாகுடி, போகுடி, நிறுத்தக்குடி
என்று கூறிப் பிடுங்கப்பட்டன. இன்று இலங்கையில் நடக்கும் கொடுமையைப்
போல அன்று திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள் துன்பம் அனுபவித்தனர். ஆனால்,
தோவாளையிலுள்ள உயரினத் தமிழ் மக்கள் எந்தவிதத் தொல்லைக்கும்
ஆளாகவில்லை. பிடாகைப் பிள்ளைமார்களால் அனுபவித்த தொல்லைகளை
இங்கு நான் விளக்கவில்லை. அவ்வாறு அதை விளக்க வேண்டும் என்று
சொன்னால் தனி நூல் எழுத வேண்டும்.
இத்தகைய துன்பத்திலிருந்து விடுபட, திரு. இசக்கிமாடன், திரு.
வைகுண்ட சுவாமிகள், திரு. நாராயணகுரு, திரு. ஐயங்காளி, திரு. நேசமணி
போன்றோர் தோன்றி மக்கள் விடுதலைக்காகப் பாடுபட்டனர். விடுதலையின்
பொருட்டு 19 இயக்கங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் நேசமணியால்

ஆரம்பிக்கப்பட்ட திருவிதாங்கூர்த் தமிழ்நாடு காங்கிரஸ். இவ்வளவுஜ
துன்புறுத்தலுக்கும் ஆளான தமிழ் மக்களிடம் பட்டம் தாணுபிள்ளையின்
சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்து பதவி பெறுவோம் என்று கூறியிருந்தால்
நேசமணி அப்போதே மக்கள் உள்ளங்களிலிருந்து நத்தானியேலைப் போலத்
தூக்கி எறியப்பட்டிருப்பார்.
நீங்கள் நேசமணியைப் பற்றிக் கற்பனையாக எழுதியுள்ளது எப்படி
இருக்கிறது என்றால், இந்தியாவைச் சுரண்டிய வெள்ளைக்காரனின்
கொடுமையைக் கண்ட நம் தேசத் தந்தை காந்தியடிகள் வெள்ளையனிடம்
போராடி வெற்றி பெறுவதைவிட அவனிடம் இணைந்து பதவி பெற்றுச் சுதந்திரம்
அடையலாம் என்று கூறியது போல் உள்ளது. தயவு செய்து உங்கள்
சாதியாரையும் உங்களோடு இணைந்த உயர் இனத்தவரையும் எவ்வளவும்
புகழ்ந்து எழுதுங்கள். அதற்காக எங்கள் தியாகத் தலைவர்களைக் கொச்சைப்
படுத்தாதீர்கள். அவர்கள் பேசாததைப் பேசியதாகக் கற்பனை செய்யாதீர்கள்.
அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆக்கம் தரலாம். நேசமணியோடு போராடித்
தோற்றுப்போன குடும்பத்தார் திரைமறைவிலிருந்து உங்களுக்கு ஊக்கம்
தரலாம். தமிழன்னை உங்களை மன்னிக்க மாட்டாள்.
பக்கம் 96-ல் 1949 இல் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களின்
இணைப்பு நடந்தது. இந்நிலையில் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன்
இணைக்க வேண்டும் என்ற தி.த.நா.கா. வின் போராட்டம் வலுப் பெற்றது.
அன்றைய உதவிப் பிரதமர் அறிகின்ற அளவிற்குப் பரவியது. உடனே காமராசர்
தலையிட்டார். நத்தானியேலுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கைது
செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு எதிரானவர் காமராசர் என்றும், குளமாவது
மேடாவது என்றும் கூறினார் என்று திரு. பி.எஸ். மணி போன்றோர் எழுதி
வந்தனர். ஆனால் இப்போது நீங்கள் காமராசருக்கும் பங்கு உண்டு எனக்
கூறியிருக்கிறீர்கள். நன்று.
அடுத்த வரியில் காமராசர் நத்தானியேலுடன் பேசினார் என்று உலகில்
பெரும் பொய்யைக் கூறியிருக்கிறீர்கள். காரணம் அன்றைய நிலையில்
காமராசர், நத்தானியேலோடு பேசவில்லை. நேசமணிதான் காமராசர், ஈ.வெ.ரா.
பெரியார், ராஜாஜி ஆகியோரை சந்தித்து நிலைமையைக் கூறி அவர்களது
ஆலோசனைப் படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் சீனிவாச
மல்லையாவையும் பட்டேலையும் சந்தித்து மக்கள் விடுதலைக்காகப் பெரும்
முயற்சி செய்தார்; பல கடிதங்களும் எழுதினார்.
இந்திய சரித்திரத்தில் ஒரு வழக்கு இன்னொரு மாநிலத்திற்கு
மாற்றலாம் என்று கூறக்கூடிய ஒரு நியதியை முதல்முதலாக இந்திய அரசுக்கு
எடுத்துக் காட்டியவர் நேசமணி. நேசமணி ஏறி, இறங்காத நீதிமன்றங்களே

இல்லை. அவருக்குத் துணையாக அப்துல் ரசாக்கும், தைக்காடு சுப்பிரமணிய
ஐயரும், பாஷ்யம் ஐயங்காரும் தமிழர் விடுதலைக்காக நேசமணி
பயன்படுத்திய வழக்கறிஞர்கள். தைக்காடு சுப்பிரமணிய ஐயரை
‘நேசமணியின் குஞ்ஃ போகுன்னு’ என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள்.
அதையெல்லாம் மறைத்திருக்கிறீர்கள். போரில் மாண்டவர்களின்
பெயர்களையும் மறைத்திருக்கிறீர்கள். தி.த.நா.கா. -வின் சின்னம் குடம்.
நத்தானியேலின் ராஜினாமாக்குப் பின் நடந்த தலைவர் தேர்தலில்
தோல்வியுற்றோர் உருவாக்கிய புதிய கட்சியின் தேர்தல் சின்னம் வண்டி.
இவர்கள் தாங்கள் போட்டியிடாத இடத்தில் ஸ்டேட் காங்கிரசை ஆதரித்தனர்.
எனினும் ஒரு இடத்திலும் அவர்கள் கட்சி வெற்றி பெறவோ, கட்டி வைத்தத்
தொகை கிடைக்கவோ இல்லை. நதானியேலுக்கும் கிடைக்கவில்லை.
பி.எஸ்.மணிக்கும் கிடைக்கவில்லை. ஆனால் நேசமணி தலைமையில்
இயங்கிய தி.த.நா.கா. கட்சி பெரும் வெற்றி பெற்றது. தோல்வியுற்ற நிலையில்
அவர்கள் நேசமணியிடம் வருத்தம் தெரிவித்து மீண்டும் நேசமணி
தலைமையேற்று தி.த.நா. கா. கட்சியில் இணைந்தனர். உங்களுக்கு உண்மை
தெரியும். ஆனாலும் நீங்கள் உண்மை வரலாற்றை மறைத்தீர்கள். வரலாற்றில்
உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். தி.த.நா.கா.
வை மக்கள் அழைக்கும் பெயர் நேசமணி காங்கிரஸ் என்பதாகும்.
திருவிதாங்கூh தமிழ்நாடு காங்கிரஸ் தோற்றம்
திருவிதாங்கூர்த் தமிழர்களை மீட்க 19 இயக்கங்கள் தோன்றின.
அதில் ஒன்றுதான் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது திருவிதாங்கூர்த்
தமிழ்ப் பகுதிகளில் விதைக்கப்பட்டு நெய்யூர் எட்வின் மண்டபத்தில் முளைத்து
ஆலன் மண்டபத்தில் பூத்து 1956 நவம்பர் 1 இல் கனியாகப் பலன் தந்தது.
மார்ஷல் நேசமணி, தோழர் ஜீவா, பேருந்துப் போராட்டத்திற்குப் பின்னால்
நேசமணியைப் பற்றிக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து உண்மை
வரலாற்றுக்குப் புறம்பாகப் பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. அந்த
வரலாற்றில் ஆலன் மண்டபத்தில் நேசமணி திருவிதாங்கூர் தமிழ்நாடு
காங்கிரசைத் தொடங்கவில்லை என்றும், நதானியேல் தலைமையில்
தொடங்கியதாகவும் திரு. பி.எஸ். மணி அவர்கள் பல நூற்கள் எழுதினார்கள்.
இதனைக் கண்டு வேதனையுற்ற தென்னெல்லைக் காவலன்
நேசமணியுடன்தோளோடு தோள் நின்று போராடிய ஜனாப் அப்துல் ரசாக்,
எம்.பி. அவர்கள் நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் என்ற ஒரு நூலை
எழுதினார்கள். அதில் மார்ஷல் நேசமணியும் திரு. சிதம்பரம் பிள்ளையும்,
திரு. சிவதாணு பிள்ளையும் ஆலன் மண்டபத்தில் கூடித் திருவிதாங்கூர்-
தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாகத் தொடங்கியதாகத் தெளிவாக
எழுதியுள்ளார். இந்தத் தொடக்கத்தைப் பற்றித் திரு. பி.எஸ். மணி அவர்கள்

கூறுகையில் அன்றைய பெருந்தலைவர்களில் ஒருவரான _. ஏ. நேசமணி
தலைமை தாங்க, _. எம். சிவதாணு பிள்ளை வரவேற்க, _. பி. சிதம்பரம்
பிள்ளை பிரசங்கிக்கத் தமிழர்களின் ஒரே ஸ்தாபனம் தி.த.நா.க. என்று
ஆரவாரத்துடன் தீர்மானிக்கப்பட்டது என்று தினமலரில் கூறியுள்ளார். ஜனாப்
அப்துல் ரசாக் தன்னுடைய நூலில் (நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் தொடக்கத்தைப் பற்றி எழுதினார்.
ஆனால் அதை திரு.பி.எஸ். மணி அப்துல் ரசாக்-கின் நூலுக்கு எதிராக 2
லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். மதிப்புமிகு நீதிபதி
அவர்கள் அந்த வழக்கை நன்கு விசாரித்து உரிய ஆவணங்களை
எதிர்மனுதாரர் தாக்கல் செய்து இவருடைய ராஜிஜனாமாக் கடிதங்கள், இவர்
அந்தக் காலத்தில் எழுதிய கடிதங்கள், பத்திரிகைகளில் கொடுத்த பேட்டிகள்
ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் வழக்கு நூலுக்குச்
சாதகமாக அமைந்தது. மேலும், 19.01.1947 ஆம் ஆண்டுத் திருவிதாங்கூர்த்
திவான் சர்.சி.பி. ராமசுவாமி ஐயரால் சுதந்திர திருவிதாங்கூர் இயக்கம்
ஆரம்பிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் திரு. சாம் நதானியேல் தலைமையில்
திரு.பி.எஸ்.மணி உட்பட ஐவர் சென்று கலந்து கொண்டனர். யார் கட்சித்
தாவுகிறவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலே கூறிய உண்மைகளைத் தாங்கள் உணர்ந்து தங்கள் நூலில்
சாதிக்கு அப்பாற்பட்டுத் திருத்தம் செய்து வெளியிடுமாறு வேண்டுகிறோம்.
‘மார்ஷல் நேசமணி’அவர்கள், திரு. நத்தானியேல், திரு. ஆர்.கே.ராம்,
திரு. பி.எஸ்.மணி ஆகியோர் போன்று கட்சித் தாவுகிறவர் அல்லர்.
இவர்களெல்லாம் கட்சித் தாவியும் நேசமணி கொண்ட கொள்கையில்
நிலையாக இருந்து போராடி வெற்றி பெற்றவர். தாங்கள் தின நாளிதழில்
வெளியிடுவதாக இருந்தால் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் திரு.பி.எஸ்.
மணிராஜினாமா செய்த கடிதம் எங்களிடம் உள்ளது.
வரலாற்றை மறைக்காதீர் ; இரத்தக் கறை படிந்த ஆகஸ்ட்
பதினொன்று
தமிழர்களின் வடஎல்லைப் போராட்டம் தமிழ்நாட்டுடன் இருந்த
பகுதிகளை (சென்னை மாகாணம்) இழக்காமல் இருப்பதற்காக நடந்த
போராட்டம். திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த
தமிழ்ப்பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தைத்
தலைமை தாங்கி நடத்தியவர் தென்எல்லைக் காவலன் குமரித்தந்தை
மார்ஷல் நேசமணி.
திருவிதாங்கூர் தமிழர்கள் சமூகநீதி, பெண்ணுரிமை, மண்காப்பு,
ஆலயநுழைவு, ஓட்டுரிமை, மொழிகாப்பு ஆகியவற்றிற்காகச் சுமார் 300

ஆண்டுகள் போராடி வந்தனர். 1921 லிருந்து 1956 வரை நேசமணி
வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இந்தப் போராட்டம் நடந்தது. தேவிகுளம்,
பீருமேடு தமிழர்களை மிகவும் துன்புறுத்தியது திருவிதாங்கூர் அரசு.
தமிழ்த்தலைவர்களைக் கையில் விலங்குபோட்டு அழைத்துச் சென்றனர். 650-
க்கு மேல் வழக்குகள் போட்டனர். குப்புசாமி என்ற இளைஞரை அடித்துச்
செவிப்பறையைக் கிழித்து விட்டனர். சுப்பையா என்பவரை விலங்குபோட்டுக்
கடைவீதியிலே நடக்கச் செய்தனர். 434 தமிழர்களையும் 20 தமிழ்ப்
பெண்களையும் ஒரே சிறையில் அடைத்தனர். எங்கும் கதறலும்
கண்ணீருமாக இருந்தது. அவர்களின் அபயக்குரல் கேட்ட தலைவர் நேசமணி
ஜனாப் அப்துல் ரசாக், மாண்புமிகு சிதம்பரநாதன் ஆகியோர் தேவிகுளம்
சென்றனர். 4.7.1954 அன்று அவர்கள் மூணாற்றில் வைத்து பி.சி.
அலெக்சாண்டரால் கைது செய்யப்பட்டனர்.
தென்எல்லைக் காவலன் நேசமணியையும் உடன்சென்றவர் களையும்
விடுதலை செய்யப் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9-ம் தேதி அவர்கள்
விடுதலை செய்யப்பட்டார்கள். நேசமணி விடுதலை தினமும் நாடு விடுதலை
தினமும் இணைந்து கொண்டாட, தியாகி குஞ்சன் நாடார் தலைமையில்
திருவிதாங்கூர் தமிழ் மக்கள் திட்டம் போட்டனர். இங்கும் ஊர்வலமும்
கூட்டமும் நடைபெற்றன. இதனால் விளவங்கோட்டில் துப்பாக்கிச் Nடு
நடந்தது. இந்தத் துப்பாக்கிச் டே;டில் இறந்த தமிழ் தியாகிகள் தினம்தான்
ஆகஸ்ட் 11.
இவண்,
(தியாகி ஊ. குமாரதாஸ்
1954 ஆகஸ்ட் 11
ஆகஸ்ட் 11 அன்று துப்பாக்கிச் Nடு நடந்தது. திருவிதாங்கூர்
நாட்டிலுள்ள எல்லா காவலர்களும் தமிழ்ப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.
குறிப்பாக நாகர்கோவில், மார்த்தாண்டம், ஆற்றூர், அருமனை, கருங்கல்,
குளச்சல் போன்ற பகுதிகளுக்கு காவலர்கள் மிகுதியாக அனுப்பப்பட்டனர்.
நாகர்கோவிலில் மட்டும் எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டாண்ட், இப்போதைய நகர்மன்றத்
திடல், நாகராஜா கோயில் திடல், வடசேரி, வெட்டூர்ணிமடம் போன்ற
பகுதிகளிலெல்லாம் போலீசார் தாவளம் அடித்து தங்கியிருந்தனர். ஒவ்வொரு
போலீஸ் நிலையத்திலும் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. போலீஸ்
வாகனங்களில் போலீசார் சுற்றி வந்து கொண்டிருந்தனர். போலீஸ் வாகனம்
ஒன்று எரிக்கப்பட்டது என்று பொய் தகவல்களை சிலர் கிளப்பிவிட்டனர்.
போலீசார் கடந்தை கூட்டில் கல்லெறிப்பட்டது போன்று கையில்
கிடைத்தவர்களையெல்லாம் கைது செய்தனர். கண்டால் அறியாம் புள்ளி
என்று பலரை கைது செய்தனர். மக்கள் ரோட்டில் நடமாட பயந்தனர்
அப்படிப்பட்ட நேரத்தில் பி.எஸ். மணி தலைமையில் நாகர்கோவிலில் ம.பொ.சி.
அவர்கள் பேசினார்கள். பேரா. யோகீஸ்வரர் இவற்றைப் பார்த்துக் கொண்டு
நின்றார் என்று கூறுவது கற்பனைக் கதையாக இருக்கலாமே ஒழிய உண்மை
சம்பவம் அல்ல என்று தியாகிகள் அனைவரும் கூறுகின்றனர். அன்று
தமிழகத்திற்கு வந்த தலைவர்கள் தோழர் ஜீவா காடு வழியாக நெல்லை
சென்றார். ம.பொ.சி. அவர்கள் ஜனாப் அப்துல் ரசாக்கை துணைக்கு
அழைத்துக் கொண்டு நேசமணி இல்லம் சென்று திருநெல்வேலி போய்
சேர்ந்தார். நேசமணி ம.பொ.சி. அவர்களை கூட்டத்தில் பேசும்படி
கேட்டுக்கொண்டார். இன்னொரு நாள் தான் பேசுவதாகப் பதில் கூறிக்கொண்டு
நாகர்கோவிலை விட்டு காட்டுப்பாதை வழியாக நேசமணியின் ஏற்பாட்டில்
திருநெல்வேலி சென்றார். இது இங்குள்ள எல்லா தியாகிகளுக்கும் தெரிந்த
ஒன்று. ஆனால், பேரா. யோகீஸ்வரன், ம.பொ.சி. பேசியதை தான்
பார்த்ததாகக் கூறுகிறார். வெடிச்சத்தம் கேட்டவுடன் தமிழகத்திலிருந்து
வீராவேசத்துடன் பேச வந்த தலைவர்கள் தப்பி ஓடியதைக் கண்ட, கேட்ட
நேசமணி இதனைப் பற்றிக் கூறுகிறார் ்
ஞஅறப்போர் ஆரம்பித்தது தமிழகத்தில் (திருவிதாங்கூர் தமிழ்ப்
பகுதிகள்) உணர்ச்சி பிரவாகம் பொங்கியது. அந்த உணர்ச்சிக் கடலிலே
மிதந்து செல்லும் நப்பாசையுடன் எத்தனையோ கட்சிகளும் தலைவர்களும்
இங்கே வந்தார்கள். பேசினார்கள். விண்ணதிரப் பேசினார்கள். ஆனால்,
விளவங்கோட்டிலே, வெடிச்சத்தம் கேட்டதும், திதநாகா-வைத் தவிர இங்கு
வேறு யாரையுமே காணவில்லையே. தமிழர்கள் அறியமாட்டார்களா இதை?
போருக்குப் பின் இங்கு என்ன நடந்தது? தலைவர்கள் சிறைக்கம்பிக்குள்ளே
அடைக்கப்பட்டார்கள். எண்ணற்ற இளைஞர்களின் எல்லுகள்
நொறுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மனை இழந்து
மக்களையும் நல்லாளையும் பிரிந்து நாடுவிட்டு ஓடினார்கள்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. அன்னைமார் அழுத
கண்ணீர் ஆறாக ஓடியது. மனைவிமார்களின் கதறல் விண்ணைப் பிளந்தது.
தொழில் இல்லை. உணவு இல்லை. வியாபாரம் இல்லை. சுடுகாடாக,
பாலைவனமாகக் காட்சி அளித்தது திருவிதாங்கூர் தமிழகம். இதற்குப் புகல்
சொல்லித் தீரவேண்டுமே ழூ யாரைக் கண்டது இந்த நாட்டில், வெத்துப்பேச்சுகள்
அன்று தேவைப்படவில்லை – காரியம் அவசியமாக இருந்தது. யார் வந்தார்கள்
இந்த நாட்டிலே?ஞ (ஏ. நேசமணி, தினமலர், 25.02.1955). தமிழ் மக்களே
உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களெல்லாம் உயர் இனத்தவரின்
போராட்டமாகக் கற்பனையாக தமிழகத்தில் சில பகுதிகளில் எழுதப்படுகிறது.
அவற்றைத் தடுத்து நிறுத்தி உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வருவது
ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
வணக்கம் ழூ
அரசால் தேவிகுளம் பீருமேடு மக்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு
அவர்களுக்கு ஆதரவாகப் போரடச் சென்ற மார்சல் நேசமணி, ஜனாப்
அப்துல் ரசாக்கும், மாண்புமிகு சிதம்பரநாதன் நாடாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய மாபெரும்
போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு எம்.எல்.ஏக்கள்
தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தியாகிகள் சிறை
சென்றனர். போராட்ட வீரர்களில் தீவிரப் போராட்டத்தால் தலைவர்கள்
விடுதலை பெற்றனர். உடன் தலைவர்கள் விடுதலை தினமும் நாடு
விடுதலை தினமும் கொண்டாடப்பட்டது. குஞ்சன்நாடார், நாராயணன்
நாடார், ஜெம்ஸ் எம்.எல்.ஏ, காந்திராமன் ஆகியோர் போராட்டத்தைத்
தீவிரப்படுத்தினர்

திருவிதாங்கூர் போராட்டம் உச்சநிலையில்
இருக்கும்போது, 15.03.1956 அன்று பி.எஸ். மணி
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா
செய்தார். பலரை ராஜினாமா செய்யத் தூண்டினார்

பேரா. அரசு ஆறுமுகம், தமிழ் விரிவுரையாளர், இந்துக்கல்லூரி
அருந்தமிழன் நேசமணி
அவர்தம் நாமம் என்றும் வாழ்க
இத்தாலிக்கு ஒரு கரிபால்டி
துருக்கிக்கு ஒரு கமால்பாஷா
அயர்லாந்திற்கு ஒரு டிவேலரா
நம் தாயகத்திற்கு ஒரு காந்தி
குமரித் தமிழகத்திற்கு ஒரு நேசமணி
– இவை அழியாத நினைவுச் சின்னங்கள்
என்றும் உலகம் போற்ற வளர்க ழூ
(மார்சல் நேசமணி சிறப்பு மலர், 1969)

பி.எஸ். மணி, ராமவர்மபுரம்
நாகர்கோவில், 25.09.1953
திரு. யு. நேசமணி, டீ.யு.இ டீ.டு.இ ஆ.P. அவர்கள்
அன்புமிக்க லீடர் அவர்களே ழூ வணக்கம்
திரு-கொச்சி அரசியலில் தி.த.நா.கா. வின் சக்தி என்ன? என்பதனைத்
தௌ;ளத் தெளிவாக உலகிற்குக் கர்ட்டும் ஒரு மகத்தான சந்தர்ப்பத்தைத்
தாங்கள் சிருஷ்டி செய்து விட்டீர்கள். தி.த.நா.கா. சரித்திரத்தில் தாங்கள்
எடுத்திருக்கும் இத்தகைய உறுதியான நடவடிக்கைகளுக்குத் தனி இடம்
உண்டு. உங்கள் திடமான போக்கைக் காணும் ஒவ்வொருவரும் உங்களை
நெருங்கியிருப்பவர்களைவிட சற்றுத் தூரமாக இருப்பவர்கள்தான்
உங்களிடம் பெரும் மதிப்பை வைக்க ஆரம்பித்துள்ளனர். உங்களை
சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்களை ஏமாறச் செய்துவிட்டீர்கள்.
எப்படியும் இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் நமது பிரச்சினை
ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை தி.த.நா.கா. சற்று
முன்னேற்றப்ப hதையில் விரைவாகச் செல்லத் தாங்கள் வழிகாட்டுவதோடு
அதற்கு அஸ்திவாரமாகவும் இருக்க வேண்டும்.
சீக்கிரமே தி.த.நா.காங்கிரஸை தக்கதொரு ஜனநாயக
ஸ்தாபனமாக உருவாக்க வேண்டும். இதற்கு என் உழைப்பில் ஒரு
பகுதியைத் தரத் தயாராக இருக்கிறேன். திரு. P. ராமசாமி பிள்ளை
அவர்களிடம் ஏழ்பித்திருக்கிறேன். தயவு செய்து தாங்களே இப்பொறுப்பை
(கட்சித் தலைவர்) ஏற்று என்னைப் போன்றவர்களையும் அணைத்துக்
கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
எனது மகிழ்ச்சிகரமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றுமுங்கள்,
பி.எஸ். மணி

காண்டிராக்ட் வேலைகளில் ஈடுபட்டு வந்த திரு. பி.எஸ். மணி
அவர்கள், போராட்டத்தின் உச்சநிலையில், 15.03.1956 அன்று
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தார். இவர்
ராஜினாமா செய்யத் தூண்டியது ம.பொ.சி. என்று அவர் தனது கடிதத்தில்
குறிப்பிடுகிறார். இவரைத் தொடர்ந்து இவருடைய நண்பர்கள் பலர்
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்தார்கள்.
ஆனால் காந்திராமன் ராஜினாமா செய்யவில்லை.

அன்புடையீர் ழூ
வணக்கம். இன்று 12.06.1964-ல் உங்கட்கு எழுபதாண்டு ஆரம்பம்.
உங்கள் பிறந்த தினத்தில் என் அன்பு வணக்கத்தையும் வாழ்த்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை அறிவேன். இதில்
கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர
நின்றும் உங்களைக் கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில்
பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதைக்
காணுகிறேன். நீங்கள் விரும்பியிருந்தால் வேறு வேறு துறைகளில் மிகமிக
உயர இருந்திருக்க முடியும். எனினும் மக்கள் தொண்டு அரசியல்
இவற்றைக் கைக்கொண்டு குமரி மாவட்டத்தில் முதன்மை வகிக்கிறீர்கள்.
இம்மதிப்பிற்குரிய தன்மைக்காகத்தான் என் வணக்கத்தையும்
வாழ்த்தையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதுமை அடைந்திருக்கிறீர்கள். கட்சி சார்பில்லாமல் அனைவரும்
உங்களை இந்நேரத்தில் பாராட்டுகிறார்கள். மகிழ்ச்சி. நீங்களும் இனி
சட்சி சார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை
கொடுப்பவராக இருக்க வேண்டுமென்று என் எதிர்பார்ப்பு.
தேக நலத்துடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். வணக்கம்.
என்றுமுங்கள்,
பி.எஸ். மணி.

ம.பொ.சி.-யை நேசமணியின் வீட்டுக்கு அழைத்து வந்தவர் ஜனாப்
அப்துல் ரசாக், நுஒ. ஆ.P. நேசமணி ஜெயிலில் இருந்த நேரம் கட்சியை
கலைத்துவிட்டு தமிழரசுக் கழகத்தோடு இணைக்க வேண்டும் என்று
கூறிய காரணத்தாலும் தமிழகத்திலிருந்து பணம் பிரித்து கட்சித்
தலைமைக்கு கொடுக்காத காரணத்தாலும் பி.எஸ். மணி
போன்றவர்கள் நேசமணி வீட்டிற்கு போகமுடியாது. அதனால்தான்
ம.பொ.சி. ரசாக்கின் துணையை நாடியிருக்கிறார்.. தியாகிகளும் ரசாக்
ம.பொ.சி.-ஐ அழைத்து வந்ததை பார்த்துள்ளனர். நேசமணி வீட்டிலும்
இதையே கூறுகின்றனர்.

தித.நா. காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு
(தி.த.நா.கா. தலைவர் பி. சுப்பிரமணிய பிள்ளை)
தி.த.நா.காங்கிரஸின் தலைமையை நீங்கள் நீண்ட நாட்களாகத்
தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எங்கள் வந்தனம்.
சமீப காலத்தில் தி.த.நா.காங்கிரஸில் பெரும்மாற்றங்கள்
ஏற்பட்டிருப்பதைக் காணுகிறோம். அதன் முன்னேற்றகரமான செயல்களை
எண்ணும் தோறும் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியிலே திளைக்கிறது. எனினும்,
தி.த.நா.காங்கிரஸ் ஜனநாயகரீதியாக உருவாவதற்குத் தலைமையில்
மாற்றம் வேண்டுமென நம்மிடையே பலர் விரும்புகின்றனர். எப்போதுமே
ஜனநாயகத்தில் ஒரே தலைமை நீண்ட நாட்கள் இருப்பது
விரும்பக்கூடியதுமல்ல. தேர்தல் நெருங்கிவரும் இச்சந்தர்ப்பத்திலே, பல
அரசியல் கட்சிகள் மோதும். இச்ழே;நிலையிலே தலைமை மாறுதல்
அவசியமெனக் கருதுகிறோம்.
தி.த.நா.காங்கிரசின் கழிந்த கால வாழ்வைத் துருவிப்பார்க்கும் போது,
நமது லீடர் திரு. யு. நேசமணி அவர்கள் பெரும் பங்குகொண்டு
வந்திருப்பதையும், ஒரு தலைவர் என்ற நிலையில் வளர்ந்து வந்திருப்பதையும்
நாம் அறிவோம். அன்னார் தி.த.நா. காங்கிரசின் தலைமையை ஏற்கும் நன்னாள்
வந்துவிட்டதாகவே நாங்கள் எண்ணுகிறோம்.
தி.த.நா. காங்கிரஸ் உதயமாகி எட்டு ஆண்டுகள் 15.12.1953 யோடு
முடிவடைகிறது. இவ்வெட்டு ஆண்டுகளில் நாம் அற்புதங்களைச்
செய்திருக்கிறோம். அதே சமயம் அவமானம் அடையக்கூடிய விதத்தில் பல
விஷயங்களையும் ஒற்றுமையின்மையால் செய்திருக்கிறோம்.
இவ்வொற்றுமையின்மையை முறியடித்து ஒற்றுமையைக் கொண்டுவர
சாதகமாக இருந்தவர் திரு. யு. நேசமணி அவர்கள் என்பதில் சந்தேகம்
ஏதுமில்லை. நம்மிடை எவருக்கும் இல்லாத சக்தியும் தி.த.நா.காங்கிரசினுள்
செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. இதனை, தி.த.நா.காங்கிரசினராகிய நாம்
ஸ்தாபன வளர்ச்சிக்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆகவே,
அவர்களை தி.த.நா. காங்கிரஸின் தலைவராக நாம் ஆக்க வேண்டும். இதற்கு,
தாங்கள் தங்கள் தலைமை ஸ்தானத்தை ராஜினாமா செய்து லீடர்
அவர்களைத் தலைவராக்குவதற்கு எங்களுக்கு உதவி செய்ய
கேட்டுக்கொள்கிறோம்.
திரு. யு. நேசமணி அவர்கள் தலைமையை விரும்பக் கூடியவர் அல்ல.
எனினும் நாம் அவரை நிர்பந்தத்திலேனும் தலைவராக்கி மகிழ வேண்டும்.
இதற்கு உங்கள் உறுதுணைதான் வழிவகுக்கும் என நம்புகிறோம்.
நாகர்கோவில், தங்கள்,
10.12.1953. திp.த.நா.காங்க்கிரஸ்க்கமிட்டி;டி அங்க்கத்த்தினர்க்கள்
P.ளு. மணி (கன்வீனர்). மேலும் 25 பேர்

வரலாறு எழுதுவோருக்குக் குறைந்தது நான்கு பண்புக் கூறுகள் இருக்க
வேண்டும் என்றும் நிகழ்வுகள் குறித்த உண்மைத் தகவல்களைத் தம்மால் முடிந்த
வரை திரட்ட வேண்டும் என்றும் திரு. பெ. மணியரசன் கூறுகிறார். ஆனால், பேரா.
பி. யோகீஸ்வரன் அவர்கள் அட்டையிலேயே அவருக்குத் திருவிதாங்கூர் வரலாறு
தெரியாது என்பதைக் காட்டியுள்ளார். குமரித் தந்தை நேசமணி கேட்டது 9
தாலுகாக்கள். தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு,
நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு, சிற்றூர். இவற்றினை
எல்லை மாநாட்டிலும் பாராளுமன்ற உரையிலும் நேசமணி பதிவு செய்துள்ளார்.
ஆனால், பேரா. யோகீஸ்வரன் அவர்கள் சிற்றூரை விட்டு நெய்யாற்றின்கரைத்
தென்பகுதி என்றும், நெடுமங்காடு கீழ்ப்பகுதி என்றும் கூறியிருப்பது தவறான
வரலாறு ஆகும். கோரிக்கை வைத்துக் கேட்ட தாலுகாக்கள் எத்தனை என்று
தெரியாதவரை பழ. நெடுமாறன் அவர்கள் சிறந்த நூலாசிரியர் என்று கூறியுள்ளார்.
இதில் என்ன சிறப்பைக் காண்கிறார் பழ. நெடுமாறன்.
பண்டிதர் ஜவகர்லால் நேரு, இரும்பு மனிதர் பட்டேல், லால் பகதூர்
சாஸ்திரி, மூதறிஞர் இராஜகோபாலாச்சாரியார், இராம் மனோகர் லோகியா,
கிருபலானி, இவர்களோடு சம இருக்கையில் இருந்து பேசும் ஜனாப் அப்துல் ரசாக்
திருத்தமிழகப் போராட்டத்தில் தன்னுடைய உடமைகளை இழந்தவர். அத்தகு
தியாகசீலரை, பெரியவரைக் கிண்டல் செய்து நூல் எழுதப்பட்டுள்ளது. அதை
நடுநிலையோடு எழுதிய நூல் என்று கூறியுள்ளார் பழ. நெடுமாறன் அவர்கள்.
திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டம் என்பது
நம்பூதிரிகளிடமிருந்தும் பிள்ளைமார்களிடமிருந்தும் நாயர்களிடமிருந்தும்
விடுதலைப் பெறுவதற்காகவே நடந்த சமூகநீதிப் போராட்டம் என்பதை வரலாறு
கூறும். ஒடுக்கப்பட்ட தமிழர்களின் பூமியை, இன்று இலங்கையில் நடப்பது போன்று,
மலையாளிகளுக்கும் உயர் இனத்தவர்களுக்கும் கொடுத்த காரணத்தால் மண்
காப்புப் போராட்டமாக அது மாறியது. மகளிருக்கு உரிமை வேண்டிப் போராடிய
போராட்டமும் இணைந்த காரணத்தால் மகளிர் உரிமைப் போராட்டமும் இத்துடன்
இணைந்தது. கோவில் வழிபாட்டிற்குத் தடை செய்த காரணத்தால் கோவில்
நுழைவுப் போராட்டமும் இத்துடன் இணைந்தது. தமிழ் மொழி இருந்த இடத்தில்
மலையாள மொழி ஆட்சிபீடம் ஏறியதால் இனப்போராட்டம், மொழிப்
போராட்டத்தையும் உடன் இணைத்துக் கொண்டது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே,
தனி மனிதர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பல
இயக்கங்களாக மாறியது. இறுதியாக, நேசமணியால் உருவாக்கப்பட்ட
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியால் 9
தாலுகாக்களுக்குப் பதிலாக 4½ தாலுகாக்கள் மட்டுமே தமிழகத்திற்குக்
கிடைத்தன. எப்படி ஈழப் போராளிகளைப் பிரித்து வைத்துத் தன் வாழ்க்கையை
வளமாக நடத்திய சில தமிழர்கள் போல் அன்றும் இச்செயலிலேயே இறங்கினார்கள்
பலர். அனைவரும் ஒரே முகமாகப் போராடியிருப்பார்களேயானால் 9 தாலுகாக்களும்
தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும். ஏன் 9 தாலுகாக்களும் கிடைக்கவில்லை
என்பதை இங்கு நான் கூறியிருக்கிறேன். சிறிய நூலாக இருந்தாலும், இன்று
வரலாற்று உலகத்திற்குத் தேவையான நூல். தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் சாதி
தேசியத்தையும் மத தேசியத்தையும் விட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றாமல்
இருந்தால் தமிழும் வாழும் தமிழகமும் வாழும் தமிழனும் வாழ்வான்.
01.02.2014 நூலாசிரியர்

Advertisements

பதிவர்: Marshal Nesamony Father of Kanyakumari District

Marshal Nesamony Father of Kanyakumari District

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s